CCM Tamil Bible Study - மரணத்தை பின் தொடரும் பாதாளம்
- Get link
- X
- Other Apps
வெளி 6:8c. பாதாளம் அவன் பின் சென்றது. மத்11:23;லூக்16:23;அப்2:27,31;மத்16:18;1கொரி15:55;வெளி1:18;20:13,14.
மரணத்தை பின் தொடரும் பாதாளம்
பாதாளம் என்பது ஆழத்தை குறிக்கின்றது. புதிய ஏற்பாட்டில் 11 தடவைகள் வந்துள்ளது. பாதாளம் குறித்து நாம் தியானிப்பதில்லை. மரணத்தை பின்தொடர்ந்து வரும் பாதாளம் குறித்தே தியானிக்கின்றோம். மங்கின நிறம் உள்ள குதிரையில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர். குதிரை மரணத்தை சுமந்து செல்லுகின்றது. மேலும் குதிரையையும் தூதரையும் மரணத்தையும் பின் தொடர்ந்து பாதாளம் செல்கின்றது. மரணம் எங்கெல்லாம் உண்டாகின்றதோ அங்கெல்லாம் பாதாளம் காணப்படும். மரணமானது மனிதனை கொன்று போடுகிறது. பாதாளமோ மரணத்தால் கொல்லப்படும் மனிதனை விழுங்குகின்றது. இச்செயல் பாதாளம் ஒரு புதைகுழி என்று அறிவிக்கின்றது. மரிக்கிறவர்கள் புதைகுழிக்குள் தள்ளப்படுகிறார்கள். தனியாக மரித்தாலும், கூட்டமாக மரணமடைந்தாலும், ஏழையாக மரித்தாலும், பணக்காரனாக மரித்தாலும், முட்டாளாக மரித்தாலும், கல்விமானாக மரித்தாலும், அழகற்றவராய் மரித்தாலும், அழகு பதுமையாக மரித்தாலும் யாவரையும் பாதாளம் விழுங்கும். எல்லாரும் ஒரே புதைக்குழிக்குள் தள்ளப்படுகிறார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காமலும், இரட்சிக்கப்படாமலும், பிதாவாகிய தேவனை தொழுது கொள்ளாமலும் இருக்கிறவர்கள் மரண தூதனை பின் தொடர்கிறார்கள். இவர்கள் மரணத்தை பின் தொடர்வதினால் பாதாளம் அவர்களுக்கு பின்னால் சென்று கொண்டேயிருக்கின்றது. எவ்வளவு பெரிய பதவியில் ஒட்டிக் கொண்டிருந்துத் தன்னை காத்துக் கொண்டிருந்தாலும் எவ்வளவு பாதுகாப்பான நிலவறை வீடுகள் கட்டி பாதுகாப்பாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஆகாயம் மண்டலத்துக்கு ஏறி வீடுகளை கட்டிக் குடியிருக்க முயற்சித்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முனைந்தாலும் பாதாளம் இவர்களை பின்தொடரும். இவர்கள் ஒருமித்து பாதாளத்திலே கிடத்தப்படுவார்கள்.
பாவம் செய்தவரின் சரீரமும் பாவம் செய்யாத இரட்சிக்கப்பட்டவனின் சரீரமும் புதைகுழிக்குள் தான் தள்ளப்படும். சந்தன பெட்டியில் வைத்து அடைத்தாலும், பிரமிடுகள் உண்டாக்கிக் கொண்டாலும் புதை ஒளியில் தான் நிரந்தர படுக்கை அறை. ஆனால் மீட்கப்பட்டவர்களின் சரீரம் புதைகுழிகள் திறக்கப்பட்டு, மறுரூபப்படுத்தப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்டு மகிமைக்குள் பிரவேசிக்கும். அல்லாதோர் நரகத்தையே நிரந்தர புகலிடமாக கொள்ளுவர்.
மரணமும் பாதாளமும் பின்தொடராதபடிக்கு ஜீவனும் பரலோகமும் நம்மை பின் தொடர வாழ்த்து காட்டுவோம்.
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள், நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மை பாராட்டுவோம். அவர்கள் முறிந்து விழுந்தார்கள், நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். சங்கீதம் 20:7,8
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment