CCM Tamil Bible Study - நட்சத்திரங்கள் விழுந்தன
- Get link
- X
- Other Apps
வெளி 6:13. வானத்து நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வெளி8:10-12;9:1;எசே32:7;தானி8:10;லூக்21:25.
நட்சத்திரங்கள் விழுந்தன
வானத்தை நட்சத்திரங்கள் அலங்கரிக்கின்றன. நட்சத்திரங்கள் ஒளிரும் கற்களாகும். நட்சத்திரங்கள் பூமியில் விழுவதை அடிக்கடி காண முடியும். ஆனால் கடைசி காலத்தில் நட்சத்திரங்களில் பெரும் பகுதி பூமியில் விழுவதை காண முடியும். இந்த காரியம் மூன்று விஷயங்களை நமக்கு கற்றுத் தருகின்றது.
முதலாவது இது தேவனுடைய அதிகாரத்தை குறிக்கின்றது. சிருஷ்டிகளின் நிலைநிற்பை தேவனே தீர்மானிக்கின்றார். படைத்தவர் அவரே. ஆகையால் விழாமல் இருக்க செய்வதும் விழச்செய்வதும் அவருடைய வேலையாகும்.
இரண்டாவது நட்சத்திரங்கள் விழுந்து போவதனால் பூமியில் உள்ள அனைத்தும் நெருப்பால் பாதிக்கப்படும். ஏற்கனவே சந்திரன் இரத்தமாக இருப்பதினால் நட்சத்திரங்களின் விழுகையையும் எரியூட்டுதலையும் மனிதர்கள் கணிக்க முடியாது. மனிதர்களிலும் மிருக ஜீவன்களிலும் பசுமையிலும் பெரும் பாதிப்புகள் உண்டாகும்.
மூன்றாவது நட்சத்திரங்களை வைத்து ஜோசியம் ராசிகள் கணிக்கின்றவர்களின் கணிப்புகள் தவறாகிவிடும். நட்சத்திரங்களின் விழுகையினால் தாங்கள் கணித்த நட்சத்திரங்கள் இல்லாமல் போகும். ராசிகள் யாவும் தடம் புரளும். பஞ்சாங்கம் செயலற்றுப்போகும்.
நட்சத்திரங்கள் விழுகை குறித்து விவிலியம் பல இடங்களில் சொல்லியிருந்தாலும் கடைசி காலத்தின் பயங்கரம் இதுவாகும். கூட்டமாகவும் கொத்து கொத்தாகவும் விழுந்து பேரழிவுகளை உண்டாக்கும். எனவே நட்சத்திரம் போல் காணப்படுவோர் விழாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கவும்.
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
1 கொரிந்தியர் 10:12
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment