CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - மலைகள் பெயர்ந்தன

வெளி 6:14b.மலைகள், தீவுகள் யாவும் தங்கள் இடங்களை விட்டு அகன்றுப் போயின. வெளி16:20;ஏசா2:14-18;எரே3:23;4:23-26;51:25;ஆப3:6,10. 

மலைகள் பெயர்ந்தன

விசுவாசத்தினால் மலைகளைப் பெயர்க்க இயலும் என்று கூறின ஆண்டவரின் கூற்றுப்படி விசுவாசத்தினால் நாம் மலைகளை பெயர்ந்து போக செய்யாததினால் அவர் தமது கோபத்தினால் மலைகளைப் பெயர்ந்து போக செய்கிறார். தீவுகளும் அகன்று போயின. பூமியின் சீதோஷ்ண நிலைகளுக்கும் மற்றுள்ள ஏராளமான நன்மைகளுக்கும் உண்டாக்கப்பட்ட மலைகளை பிசாசானவனும் அவனின் கூட்டத்தாரும் தேவன் வாசமாக இருக்கும் பரலோகத்துக்கு ஏறும்படியாக பயன்படுத்தி கூடாரம் அமைத்துக் கொண்டனர். இதனால் தேவனை தொழுது சேவிக்காமல் மலைகளில் கூடாரம் போட்டுள்ள சாத்தான்களை கும்பிட துவங்கினர் மனிதர். இதினிமித்தம் எல்லாம் மலைகளையும் பெயரப் பண்ணினார். கூடாரங்கள் கவிழ்க்கப்பட்டது. சாத்தான் ஓடிப் போகிறான்.  

உலகத்தின் மாட்சிமைகளை பார்க்கும் படியாகவும் தன்னை வணங்கும்படியாகவும் சாத்தான் பயன்படுத்திய மலைகளை பெயர்ந்துப் போகச் செய்கின்றார். மலை கோயில்கள் எல்லாம் காணப்படாமல் போயிற்று. 

ஆடம்பரமாய் வாழவும், இன்பமாய் அனுபவிக்கவும் ஐஸ்வர்யவான்கள் மலைகளை பயன்படுத்திக் கொண்டனர். மலைகளை உண்டு பண்ணின ஆண்டவரை வணங்காமல் மலைகளின் உயரத்தில் போய் தேவனருகில் வாழ்ந்து கொண்டு தங்கள் சிற்றின்பங்களை செயல்படுத்தியதினிமித்தம் மலைகள் பெயர்க்கப்படுகின்றது. 

பள்ளங்கள் நிரப்பப்பட்டு, மலைகள் குன்றுகள் தாழ்த்தப்பட்டு சமநிலைப்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டவைகள் நிறைவேறியதோ இல்லையோ எல்லா குன்றுகளும் பெயர்க்கப்பட்டு போயிற்று. 

தீவுகள் அகன்று போனதின் காரணம் என்னவெனில் மானுடர் தீவுகளை செல்வம் பெருக்கிக் கொள்வதற்காக பயன்படுத்தினர். இதினிமித்தம் தீவுகளை உண்டாக்கிய தேவனை தொழுது சேவிக்கவில்லை. இதனால் தீவுகளையும் அகற்றி விட்டார். 

ஆடம்பரம், செல்வப் பெருக்கு, கல்வி பெருக்கு, சீமானத்துவம், பண கர்வம், ஜாதி கர்வம் போன்றவைகளினால் கட்டப்பட்ட எல்லா மலைகளும் அகற்றப்படும். இனி இவர்கள் ஓடி ஒளிக்க மலைகளும் இருப்பதில்லை. தேவகோபத்துக்கு தப்பும் படியாக மலைகளையும் தீவுகளையும் தேடி ஓடுகிறவர்கள் தேடிக்கொண்டே இருப்பார்கள். அவைகள் அகன்று போயின. மலைகளின் அரசிகளும், மலைகளின் தேவர்களும் மலைகளோடு பெயர்க்கப்பட்டு கவிழ்க்கப்பட்டார்கள். இவைகளை கவனிக்கும் மானுடராவது மனந்திரும்ப முயற்சிப்பார்களா?


அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்து போகும். அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம். அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்தில் தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப் போல இறைக்கப்படுகிறது. அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும். 

நாகூம் 1:5,6

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்