CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - மரணம் - Death

வெளி 6:8b. அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர். வெளி 20:13,14; ஏசாயா 25:8; ஓசியா 13:14; ஆபகூ2:5; 1கொரி 15:55; ஆதி2:17;4:8.

மரணம்

மங்கின நிறம் உள்ள குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மங்கின குதிரையானது தான் போகிற இடமெல்லாம் மரணத்தை சுமந்து சென்றது. மரணம் என்ற சொல் புதிய ஏற்பாட்டில் 119 தடவைகள் வந்துள்ளது. சரீரமும் ஆன்மாவும் பிரிந்து போவதே மரணம். அதாவது சரித்திரத்திலிருந்து ஆன்மா வெளியேறி போவதே மரணமாகும். மரணம் சரீரத்துக்குரியதாகும். சரீரம் அசைவற்று கிடப்பதே மரணமாகும். ஆகையினால் தான் தூக்கத்தை கூட மரணத்துக்கு ஒப்பிட்டுள்ளது விவிலியம். இந்த மரணம் குறித்து சில உண்மைகளை இன்றைய தியானத்தில் காண்போம். 

# முதலாவது இந்த தூதன் போகும் இடம் எங்கும் மரண ஓலம் உண்டாகும். ஆகையினால் மரண தூதன் என்றும் கூறலாம். ஆகையினால் இந்நிகழ்வு எகிப்தில் நடந்த தலைபிள்ளை சங்கார தூதனுக்கு ஒத்துள்ளது எனலாம். தற்கொலைகளும் வன்கொலைகளும் எல்லா இடங்களிலும் நடந்தேறும். ஓரிடத்தில் அதிகமான விபத்துக்கள் உண்டாகி மரணங்கள் நேரிடுகிறதென்றால் அப்பகுதியில் மரண தூதன் நிலைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அவன் வந்து செல்கிற இடமாய் இருக்க வேண்டும். ஆகவே இப்படிப்பட்ட நிகழ்வுகளினிமித்தம் தேவ மனிதர்கள் ஜெபிக்க வேண்டும். 

# இரண்டாவது மரணம் என்பது உயிர் வெளியேறி உறவுகள் யாவும் அற்றுப்போகும் நிலையாகும். உடலை விட்டு உயிர் வெளியேறிப்போன பின்பு அசைவற்றுக்கிடக்கும் உடலின் மீது மனுக்குலம் உரிமை பாராட்டி உறவுகளைக் காட்டி புலம்பல் பாடி மண்ணில் புதைத்து விடுகிறார்கள். உடலை விட்டு போன உயிர் நினைக்கிறது என்னவெனில் உயிராகிய என்னை விடவும் நான் வாழ்விடம் கொண்டிருந்த உடல் மீது மனிதன் அதிக பாசம் வைத்துள்ளான். தன்னை அல்ல என்ற நினைக்கிறது. கிறிஸ்தவத்தில் உடலை விட உயிருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உயிர் தேவனோடு நல்லிணக்கம் கொண்டிருக்கும். ஆனால் உடலும் ஒரு நாள் உயிர் பெற்றெழும். 

# மூன்றாவது மரணம் என்பது தேவனோடுள்ள உறவின் நெருக்கத்திற்கு இடம் உண்டாக்குகின்றது. இதுவரையிலும் உடலில் உறவு கொண்டிருந்த உயிர் இனி தன்னை கொடுத்த தேவனிடம் சென்று சேர்கின்றது. இக்காரியத்தினிமித்தம் தேவ மனிதர்கள் கிறிஸ்தவர்களின் மரணத்தினிமித்தம் அழுது புலம்புவது தவிர்க்கப்படுவது நல்லது என்று கருதுகின்றேன். 

மரணத்தை சுமந்து செல்லும் நிகழ்வு கடைசி காலத்தின் அறிகுறியாகும். இனி பொது அழிவு உண்டாகப் போகின்றது என்பதற்கான முன்னடையாளம். ஆகவே மனுக்குலம் தங்கள் தவறுகளை உணர்ந்து பொது அழிவில் அகப்படாமலிருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி கொள்ள வேண்டும். அவர் மட்டுமே மறுரூபமாக்கும் வலிமையுள்ளவர். உடலோடு உயிரை இணைக்கும் ஆற்றல் உள்ளவர்.

அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே. அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். 

1 தெசலோனிக்கேயர் 4:13,14

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்