CCM Tamil Bible Study - சுருட்டப்பட்ட வானம்
- Get link
- X
- Other Apps
வெளி 6:14a. வானமும் சுருட்டப்பட்ட புத்தகம் போலாகி விலகிப் போயிற்று.
சங்102:26;ஏசா34:4;எபி1:11-13;2பேது3:10;வெளி20:11.
சுருட்டப்பட்ட வானம்
வானம் என்பது அண்டவெளியை குறிக்கின்றதாக இருக்கலாம். வானம் தேவனுடைய படைப்பு. இது ஆதியில் படைக்கப்பட்ட ஒன்றாகும். இந்த வானம் தேவனுடைய சிங்காசனம் என்று கூறப்பட்டுள்ளது. வானத்திலிருந்து தேவனுடைய நன்மைகள் மனிதருக்கு உண்டாகின்றது. சூரிய சந்திர நட்சத்திரங்கள் யாவும் வானத்தை அலங்கரிக்கின்றது. வானத்திலிருந்து தேவன் வெளிப்படுவதும் உண்டு. வானம் தேவனுடைய கை வண்ணம். இந்த வானத்தை புத்தகசூருள் சுருட்டப்படுவது போல சுருட்டப்பட வைக்கின்றார்.
அன்று வானத்தை பரப்பியவர் இன்று வானத்தை சுருட்டுகின்றார். வானத்திலிருந்து உண்டான எல்லா நன்மைகளும் இனி கிடைக்காமல் போகும். அவைகளை தேடி மக்கள் செயலிழந்து போவார்கள். ஆழத்தில் இருள் உண்டாகும். ஆதியிலிருந்த ஆழத்தின் இருள் எங்கும் காணப்படும். வானம் சுருட்டப்பட்டு போனதால் வானத்து நீரும் இல்லாமல் போகும். வானத்து நீர் இல்லாதுப் போவதினால் பூமி வறண்டு போகும்.
பஞ்சபூதங்கள் என உயர்வாய் பேசியவர்கள் அவைகளின் வெளியேற்றத்தை கண்டு திகைத்து நிற்பார்கள். கூரை இல்லாத வீடு போல பூமி காணப்படும். பூமியின் கால நிலைகள் யாவும் இல்லாமல் போகும். வானத்தில் ஏறி ஆட்சி அமைப்பேன் என்று ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டு வந்த சாத்தானின் கூட்டம் இனி வானத்துக்கு ஏறி தேவனுடைய வாழ்விடத்தை அபகரிக்க இயலாததனால் தலையில் துண்டை போட்டுக்கொண்டு திரியும்.
வானம் அகன்று போனதினால் தேவனை விட்டு பூமியோ சாத்தானோ மனிதர்களோ இனி மறைந்து வாழ முடியாது. இதனால் தேவகோபம் எளிதாக பூமியையும் சாத்தானையும் மனிதர்களையும் பற்றி பிடிக்கும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment