Posts

Showing posts from July, 2021

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம் - We are in Christ

இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம் 1Jn5:20b. that we may know Him who is true; and we are in Him who is true, 1Jn2:6,24;4:16;Jn10:30;14:20,23;15:4;17:20-23;2Cor5:17;Phil3:9. 1யோவா5:20b. நாம் சத்தியமுள்ள இயேசுகிறிஸ்துவுக்குள் இருக்கிறோம். 1யோவா2:6,24;4:16;யோவா10:30;14:20,23; 15:4;17:20-23;2கொரி5:17;பிலி3:9. IN CHRIST  -  EN CHRISTOS  - கிறிஸ்துவுக்குள் என்ற சொல் புதிய ஏற்பாட்டில் ஏறக்குறைய 76 தடவைகள் (KJV) வருகின்றது. இந்த வார்த்தையோடு இணந்தவிதமாய் அவருக்குள் - ஆவிக்குள் - தேவனுக்குள் போன்ற சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. விவிலிய இறையியலில் ஆழம் கண்டுபிடிக்கவியலாத பொருள் செறிவுகொண்ட சொல்லே கிறிஸ்துவுக்குள் என்பதாகும். இயேசு கிறிஸ்துவை உளமார ஏற்றுக்கொண்ட ஒருவர் எவ்விதத்திலும் வேறுமதங்களோடும், நபர்களோடும், இஸங்களோடும்  இணைத்து பார்க்காமல் கிறிஸ்துவுக்குள் மட்டுமே வாழ்கிறவன் என்று தன்னை காண்பிப்பதாகும். இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் யாவரும், ஆதி சபை பிதாக்கள் யாவரும் இவ்வாறே காணப்பட்டனர். இச்சொல் பவுலின் நிருபங்களில்தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்நிய மார்க்கம...

CCM Tamil Bible Study - புத்தி தந்த இயேசு - Jesus who gave wisdom

புத்தி தந்த இயேசு 1Jn5:20a . And we know that the Son of God has come and has given us an understanding, Mt13:11;Lk21:15;24:45;Jn17:3,14,25;1Cor1:30,31;2Cor4:6;Eph1:17-19;3:18;Col2:2,3. 1யோவா5:20a. தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியை தந்திருக்கிறார். மத்13:11;லூக்21:15;24:45;யோவா17:3,14,25;1கொரி1:30,31;2கொரி4:6;எபே1:17-19;3:18;கொலோ2:2,3.    ☆ புரிந்துக்கொள்ளும் ஆற்றல், நல்லது கெட்டது என்று அறியும் ஆற்றல் ஆகிய பொருளை தருகின்றது புத்தி என்றச் சொல். ஞானம், புத்தி, அறிவு ஆகியவைகள் கர்த்தருடைய வசனங்களோடும், கிறிஸ்துவோடும், பரிசுத்த ஆவியோடும் இணைந்து தனி ஜெபம் செய்கின்றவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற உன்னத அனுபவமாகும். ஒருவரும் எதிர்த்து பேசவியலாத வாக்கையும், ஞானத்தையும் கிறிஸ்துவின் சீஷர்கள் பெற்றுக்கொண்டார்கள். பேசவேண்டியதை பேசும் ஆற்றலையும் பெற்றிருந்தார்கள். இவைகள் யாவும் பிறருக்கு சாட்சி பகரவும், கிறிஸ்துவை பிரசங்கிக்கவும் தேவன் தந்துள்ளவைகளாயுள்ளது. அதே வேளையில் புத்தியாய் வாழ்வதற்குரிய புத்தியை தேவகுமாரன் தந்துள்ளார் என்பதை நாமறிய வேண்டும்.  ☆ அவர் வாசம் பண்ணும் ஆலயமாகி...

CCM Tamil Bible Study - பொல்லாங்கனிடம் அகப்பட்ட உலகம் - World lies under sway of wicked one

பொல்லாங்கனிடம் அகப்பட்ட உலகம் 1Jn5:19. We know that we are of God, and the whole world lies under the sway of the wicked one. 1Jn4:4,5;Jn15:18,19;Rom1:28-30;3:9-18;Gal1:4;Tit3:3;Jas4:4. 1யோவா5:19. உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 1யோவா4:4;யோவா15:18,19;ரோம1:28-30;3:9-18;கலா1:4;தீத்3:3;யாக்4:4. ☆ உலகம் தேவனுடைய சாயலை வெளிபடுத்துவதில்லை, தேவனுடைய தன்மையையும் வெளிபடுத்துவதில்லை, தேவனுடைய அம்சத்தையும் கொண்டிருக்கவில்லை. உலகம் தேவனுடைய ஞானத்தினாலும் அறிவினாலும் உண்டாக்கப்பட்டது. ஆகவே உலகை நாம் பார்க்கும்போது தேவனுடைய அநந்த ஞானத்தையும், அறிவையும் காணமுடியும். உலகத்தை அழகு தேவதையாக பார்க்கின்ற பார்வையெல்லாம் அந்நிய மத உபதேசங்களாகவும், பாவத்தின் விளைவாகவும் உள்ளது. ஞானோந்திரியமாக உண்டாக்கப்பட்ட உலகம் சிதைந்து உருமாறி போயிருப்பது பாவத்தின் விளைவேயாகும். இந்த நிலைமைக்கு அடிப்படை காரணம் தேவனால் தள்ளப்பட்ட சாத்தானேயாகும். முழு உலகமும் தேவனுடைய சாயலாக படைக்கப்பட்ட ஆதி மனிதனின் கட்டுபாட்டிலே கொடுக்கப்பட்டது. தேவ உலகத்தின் அதிகாரியாகிய தேவன் பூலோகத்தின் அதிகாரியாகவ...

CCM Tamil Bible Study - பொல்லாங்கன் தொடான் - Evil will not touch

பொல்லாங்கன் தொடான் 1Jn5:18c. and the wicked one does not touch him. 1Jn2:13,14;3:12;Mt13:19;4:3;24:24;2Thes2:8;Lk11:23-26;Eph6:16;1Thes5:22;Jn3:20. 1யோவா5:18c. பொல்லாங்கன் தேவனால் பிறந்தவனை தொடான்.  1யோவா2:13,14;3:12;மத்13:19;4:3;24:24;2தெச2:8;லூக்11:23-26;எபே6:16;1தெச5:22;யோவா3:20.  ☆ பொல்லாங்கன் என்பது ஒரு நபரை குறிப்பதாயுள்ளதால் பொல்லாங்கானதை செய்கிறவனும், பொல்லாப்பு செய்கிற எவரையும் குறிக்கின்றதாயுள்ளது என்று கூறலாம். அவன் நன்மை செய்தும் துன்புறுத்துகிறவனாயும், தீமையையே தன் தொழிலாகக் கொண்டவனாயும், பிறரை அழிக்க துணிவு கொண்டவன் போன்ற காரியங்களை செய்கிறவனாயுமிருக்கிறான். பிறர் பாதிக்கப்படும்படியாய் செயல்படுகிறவர்கள் யாவருமே பொல்லாங்கர்களாகவே உள்ளனர். பொல்லாங்கனால் உண்டானவர்கள் சகோதரர்களை பகைப்பவர்களாயிருப்பர். பிசாசும் பொல்லாங்கனாகவே கருதப்படுகின்றான். அனேக தீமைகளும் பிசாசினால் தூண்டப்பட்டே நடந்தேறுகின்றது. இப்படிப்பட்ட தீமைகளினால் தேவனால் பிறந்தவன் பாதிக்கப்படுவதில்லை என்று யோவான் கூறுகின்றார். சுவிசேஷத்தினிமித்தமோ, வசனத்தினிமித்தமோ, விசுவாசத்தினிமித்தமோ, கிறிஸ்துவினிமித்தம...

CCM Tamil Bible Study - தன்னை காத்தல் - Loving oneself

தன்னை காத்தல்  1Jn5:18b . but he who has been born of God keeps himself, 1Jn5:21;3:3;Ps17:4;18:3;39:1;119:101;Pr4:23;Jn15:4,7,9;Act11:23;Jas1:27;Jud1:21,24;Rev2:13;3:8-10. 1யோவா5:18b. தேவனால் பிறந்தவன் தன்னை காக்கிறான். 1யோவா5:21;3:3;சங்17:4;18:3;39:1;119:101;நீதி4:23;யோவா15:4,7,9;அப்11:23;யாக்1:27;யூதா1:21,24;வெளி2:13;3:8-10. ☆ பாவம் நம்மை மூன்று பகுதிகளில் கறைபடுத்தும் அல்லது அழுக்காக்கும். உடைமை பொருளில் கறை உண்டாக்கும். அதாவது நமது உடைமைகளிலும், உரிமைக்குரியவைகளிலும், உடனாளிகளிலும் பாவம் தொத்திக்கொண்டு கறைபடுத்தும். இதனை சரிபடுத்திக் கொள்ளாவிட்டால் இரண்டாவது உடலில் கறை உண்டாக்கும் அல்லது உடலை அழுக்காக்கும். அதாவது சரீரபிரகாரமான சிறுசிறு தவறுகளை செய்து மாம்சத்தில் அசுசிகள் தேங்கிக்கொள்ளும். சரீரம் பாவத்தால் கறைபட்டுப்போகும். இதனையும் சரிபடுத்திக் கொள்ளவில்லையெனில் மூன்றாவதாக உள்ளத்தை கறைபடுத்தும் அல்லது அழுக்காக்கும். இதனை மனசாட்சியில் உண்டாகும் அழுக்கு எனலாம். மனசாட்சியில் அழுக்கு தேங்குமானால் அவை காரிருளைப்போல மாறி உண்மையையும் உத்தமத்தையும் அறியமுடியாதபடிக்கு மூடிப்போடும். மட...

CCM Tamil Bible Study - பாவம் செய்யாதவன் - One who does not sin

பாவம் செய்யாதவன் 1Jn5:18a. We know that whoever is born of God does not sin. 1Jn5:1,4;2:24;3:9;4:6;Jn1:13;3:2-5;Jas1:18;1Pet1:23. 1யோவா5:18a.தேவனால் பிறந்த எவரும் பாவம் செய்வதில்லை. 1யோவா5:1,4;2:24;3:9;4:6;யோவா1:13;3:2-5;யாக்1:18;1பேது1:23. ☆ 1யோவா3:9 ல் வித்தை தன்னுள் கொண்டுள்ளவன் பாவம் செய்வதில்லை என்று அறிந்தோம். இங்கு தேவனால் பிறந்தவன் பாவம் செய்வதில்லை என்பதை கவனிப்போம். தேவனால் பிறந்தவன் இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனென்று அறிந்து நம்பி அறிக்கையிட்டு விசுவாசிக்கிறவன். அவனுக்குள் இயேசுகிறிஸ்து வாழ்கின்றார். இயேசு கிறிஸ்து தேவனால் பிறந்தவரும் தேவனுடைய குமாரனுமாகையினால் இயேசுவை ஏற்றுக்கொண்டவனும் தேவனால் பிறந்தவனாகவும் தேவனுடைய பிள்ளையுமாகவும் மாறுகின்றான். இயேசு கிறிஸ்து பாவம் செய்யாதவராகையினால் இவனும் பாவம் செய்வதில்லை.  ☆ இவ்வாக்கியம் எத்தகைய பாவத்தை குறிக்கின்றது?. மரணத்துக்கு ஏதுவான பாவத்தையே குறிப்பிடுகின்றது. மரணத்துக்கு ஏதுவான பாவம் என்பது இயேசுவை இழந்துபோன அனுபவமாகும். இயேசுவை மறுதலிக்கிறவனும், மறுபடியும் சிலுவையில் அறைகிறவனுமாயிருக்கிறான். தான் அறிக்கையிட்டு ஏற்றுக்க...

CCM Tamil Bible Study - சபைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு - Communication between the church and me

(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்)   【கிறிஸ்தவ வாழ்வில் நாம் கட்டியெழுப்பப்பட வேண்டிய அடிப்படை உண்மைகள்】 சபைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு சபை என்பது சங்கீதம் 74:2 - நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்.  அப்20:28 - தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.  1தீமோ3:15 - அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது. மத் 21:13 - ஜெப வீடு. மாற் 11:17 - எல்லா ஜனத்துக்கும் ஜெப வீடு.. சபைக்கு அவரே தலை எபே1:23 - எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். கொலோ 1:17,18 - அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதிய...

CCM Tamil Bible Study - பாவமான அநீதி - Sinful injustice

பாவமான அநீதி 1Jn 5:17 . All unrighteousness is sin, and there is sin not leading to death. 1Jn3:4;Deu5:32;12:32;Job34:10;Lk16:9;1Cor6:1;2Thes2:10,11;Jas3:6;2Pet2:12,15. 1யோவா5:17. அநீதியெல்லாம் பாவந்தான். 1யோவா3:4;உபா5:32;12:32;யோபு34:10;லூக்16:9;1கொரி6:1;2தெச2:10,11;யாக்3:6;2பேது2:12,15 ☆ நீதிக்கு எதிரானது அநீதி. தேவனுடைய நீதிக்கு எதிரானது அநீதி. தேவன் நீதியினால் தம்மை போர்த்திக் கொண்டுள்ளார். பிசாசோ அநீதியினால் தன்னை போர்த்திக்கொண்டுள்ளது. விசுவாசத்தினால் உண்டாகும் நீதியும் உண்டு. அவிசுவாசத்தினால் உண்டாகும் அநீதியும் உண்டு. கர்த்தருடைய வாக்கியங்கள் நீதியைப் போதிக்கின்றது – படிப்பிக்கின்றது. நீதிக்கு எதிரான காரியங்கள் யாவும் அதாவது, கர்த்தருடைய வாக்கியங்களின்படி வாழாதவர்கள் அநீதியை பிறப்பிக்கின்றார்கள். மாறுபாடான பேச்சுக்கள் அநீதியின் ஆயுதங்கள் ஆகும். அதர்மமான கிரியைகளும், அக்கிரம செய்கைகளும் அநீதியையே பிறப்பிக்கின்றது. நீதியின் சூரியனை மறைக்கும் காரிருளே அநீதி என்ற கார் மேகம். இந்த அநீதி என்ற கார்மேகத்தினால் துன்மார்க்கம் எங்கும் பெருகுகின்றது.  ☆ அநீதி தேவனை தரிசிக்கமுடியாதபடி க...

CCM Tamil Bible Study - மரணத்துக்கு ஏதுவான பாவம் - The sin of death

மரணத்துக்கு ஏதுவான பாவம் 1Jn5:16b. There is sin leading to death. I do not say that he should pray about that. Num15:30;16:26-32;1Sam2:25;Jer15:1,2;Mt12:31,32;Mk3:28-30;Lk12:10;2Tim4:14;Heb6:4-6;10:26-31;3Pet2:20-22;Nu26:61. 1யோவா5:16b . மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு.அதை குறித்து வேண்டுதல் செய்ய சொல்லேன். எண்15:30;16:26-32;1சாமு2:25;எரே15:1,2;மத்12:31,32;மாற்3:28-30;லூக்12:10;2தீமோ4:14;எபி6:4-6;10:26-31;3பேது2:20-22;எண்26:61. ☆ மன்னிப்பை பெறவியலாத மனிதர்கள் தங்கள் பாவங்களினிமித்தம் தேவகோபாக்கினைக்கு ஆளானார்கள் என்பதை விவிலியம் விளக்குகின்றது. சோதோமியர்கள், கோராகின் கூட்டத்தார், யூதாஸ், அனனியா சப்பீராள் போன்றோர் சில உதாரணங்கள் ஆகும். அன்புள்ள தேவன் கீழ்படிதலை எதிர்பார்க்கின்றார். கீழ்படிதல் கேள்விக்குறியாகும்போது தேவகோபம் வெளிப்படுகின்றது. பரலோகம் கொண்டு சேர்க்காத எந்த கிரியைகளும் பாவமாக கருதப்பட்டு மரணத்துக்கு ஏதுவானதாகவே காணப்படும். பூலோக வாழ்வில் இரக்கம், கிருபை கிடைப்பதினிமித்தம் ஒருவரின் பாவத்தை மூடிப்போடவியலாது. முழுமையான திரும்புதலும், மன்னிப்பை பெற்றதை நிச்சயப்படுத்திக் கொள்வதுமே...

CCM Tamil Bible Study - வேண்டுதல் செய் - Pray to God

வேண்டுதல் செய் 1Jn5:16a. If anyone sees his brother sinning a sin which does not lead to death, he will ask, and He will give him life. Gen20:7,17;Ex30:10-14;34:9;Num12:13;14:11-21;Deu9:18-20;Job42:7-9;Ps106:23;Eze22:30;Am7:1-3;Jas5:14,15. 1யோவா5:19a. மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை தன் சகோதரன் செய்யக்கண்டால் வேண்டுதல் பண்னக் கடவன்.  ஆதி20:7,17;யாத்30:10-14;34:9;எண்12:13;14:11-21;உபா9:18-20;யோபு42:7-9;சங்106:23;எசே22:30;ஆமோ7:1-3;யாத்5:14,15.  ☆ நடபடிகள் புத்தகத்தின் முந்திய ஆசிரியர் ரால்ப் மகோனி அவர்கள் கூறும்போது ஒருவருக்காக ஜெபிக்கும் முன்பதாக அந்நபரைக்குறித்த தேவசித்தம் என்ன என்பதை அறிந்துக்கொண்டு ஜெபியுங்கள் என்று கூறுகிறார். யோவான் நிருப ஆசிரியர் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் உண்டு என்றுக் கூறுகின்றார். அப்படியானால் அவைகள் எப்படிப்பட்டவைகள் என்று அவர் பட்டியலிடாமல் இருந்துவிட்டார். விவிலியத்தை வாசிக்கும்போது பல சந்தர்ப்பங்களில் சில பாவங்கள் மன்னிப்பை பெற்றுள்ளன என்பதை அறிய முடிகின்றது. மன்னிப்பைக் கொடுக்கிறவர் தேவன். ஒருவருக்கு மன்னிப்பைக் கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை அ...

CCM Tamil Bible Study - கேட்பது கிடைக்குமா? - If we ask anything to his will,

நாம் கேட்பது கிடைக்குமா? 1Jn5:14. Now this is the confidence that we have in Him, that if we ask anything according to His will, He hears us. 1Jn3:22;Mt7:7-11;21:22;Jn14:13;15:7;16:24;Jas1:5,6;4:3;5:16;Jer29:12,13;33:3;Ps106:15. 1யோவா5:14. நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால். 1யோவா3:22;மத்7:7-11;21:22;யோவா14:13;15:7;16:24;யாக்1:5,6;4:3;5:16;எரே29:12,13;33:3;சங்106:15. ☆ நாம் நம்பும் தேவன் எஜமானாயிருக்கிறார். சகலவற்றிற்கும் அவரே எஜமான். தமக்கு சித்தமானவர்களுக்கு அவர் கொடுக்கிறார் என்றாலும்  எல்லாருக்கும் எல்லாவற்ரையும் கொடுக்கிறார் என்பதையும் மறக்க வேண்டாம். எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுக்கிறார் என்பது தேவனுடைய பிள்ளைகளுக்கும் பொருந்தும். அதேவேளையில் தேவனுடைய பிள்ளைகளுக்கு அவர் கொடுக்க விரும்புவது என்ன? என்பதை நாம் அறியவேண்டியவர்களாயுள்ளோம். உணவு, உடை, உறைவிடம், பணம், பொருள் ஆகிய யாவும் யாவருக்கும் கிடைக்கிறது. அப்படியானால் தேவனுடைய பிள்ளைகள் தேவனிடம் கேட்க வேண்டியது என்ன என்று நாம் அறிவது நல்லது.  ☆ அவர் நன்மையான ஈவுகளைக் கொடுக்கிறார். அவைகளை பரலோகத்திலிருந்...

CCM Tamil Bible Study - பரிசுத்த ஆவியானவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு - The relationship between the Holy Spirit and me

  (Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்) 【கிறிஸ்தவ வாழ்வில் நாம் கட்டியெழுப்பப்பட வேண்டிய அடிப்படை உண்மைகள்】 பரிசுத்த  ஆவியானவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு பரிசுத்த ஆவி பிதாவினால் வாக்களிக்கப்பட்டவர் யோவேல் 2:28 - அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். பரிசுத்த ஆவி இயேசு கிறிஸ்துவால் உறுதிபடுத்தப்ட்டவர் அப்1:5 - நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். பரிசுத்த ஆவி இயேசுவால் அனுப்பப்பட்டவர் யோவான் 16:7 - நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அப்2:33 - அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். இரட்சிக்கப்பட்டு இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கும் போது இந்த பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருகிறார் அப்19:2 - நீங...

CCM Tamil Bible Study - உங்களுக்கு எழுதுகிறேன் - I write to you

 1யோவா5:13. தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன்.  1யோவா5:10;3:23;1:1,2;யோவா20:31;21:24;அப்3:16;4:12;2கொரி5:1;1தீமோ1:15,16;1பேது5:12;2பேது1:10,11. உங்களுக்கு எழுதுகிறேன்      வாய்மொழி பாரம்பரியமாயிருந்த சுவிசேஷ செய்தியானது காகிதங்களிலும், தோல் சுருக்களிலும் எழுதப்பட்டு மறுக்கமுடியாததும், மாற்றமுடியாததுமான ஆதாரங்களாக உருவாக்கப்பட்டது. இவையாவும் பரிசுத்த ஆவியானவரின் வேலையேயாகும். தேவனுடைய கைவிரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளை பெற்றுக்கொண்ட மோசேயை கவனிக்கும்போது தேவன் பேசுகிறவர் மட்டுமல்ல, எழுதுகிறவருங்கூட என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். தேவனுடைய மனிதன் தேறினவனாக காணப்பட வாயினால் பிரசங்கிக்கிறவனாக மட்டுமல்லாது கைகளினால் எழுதும் ஆற்றலையும், கற்றுக்கொடுக்கும் உபதேச ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும்.      புதிய ஏற்பாடு எழுதப்பட்டதின் நோக்கம் மூன்று நிலைகளைக் கொண்டது. இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்து நம்பி அறிக்கையிட்டவர்கள். அவர்கள் விசுவாசித்து அறிக்கையிட்டதை ஆதாரமூலமாக எழுத்தேடுகளில் எழுதிவ...

CCM Tamil Bible Study - ஜீவன் இல்லாதவன் - Who has no life

 ஜீவன் இல்லாதவன் 1Jn5:12. He who has the Son has life; he who does not have the Son of God does not have life. 1Jn2:23,24;Jn1:12;3:36;5:24;1Cor1:30;Rom8:9;Gala2:20;Heb3:14;2Jn1:19;Rev20:15.  1யோவா5:12. தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 1யோவா2:23,24;யோவா1:12;3:36;5:24;1கொரி1:30;ரோம8:9;கலா2:20;எபி3:14;2யோவா1:19;வெளி20:15.      இரண்டு கூட்டத்தாரிடம் கிறிஸ்துவின் ஜீவன் இருப்பதில்லை. ஒன்று இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமலும், கிறிஸ்துவின் அடைக்கலத்துக்குள் வராமலும் உள்ளவர்கள். இவர்கள் தேவனையும் அறியவில்லை, கிறிஸ்துவையும் அறியவில்லை. தெய்வமல்லாதவைகளை தெய்வமென்று சொல்லிக்கொண்டும், தெய்வமேயில்லையென்று சொல்லிக்கொண்டும் வாழ்கிறவர்கள். தங்களை பெற்ற தகப்பன் உண்டென்று தெரிந்தவர்களுக்கு உண்மை தகப்பன் உண்டென்பதோ, எல்லாருக்கும் ஒரு தகப்பன் உண்டென்பதோ புத்திக்கு எட்டாமல் போயிற்று. உணர்வில்லாத அவர்களின் இருதயம் இருளடைந்துப்போய் இருளுக்குரியவர்கள் ஆகிவிட்டனர்.       இரண்டாவது, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர் என்று சொல்லிக்கொண்டும் கிறிஸ்துவின் சரீரமாகிய ச...

CCM Tamil Bible Study - நித்திய ஜீவன் - Eternal life

கிறிஸ்துவில் நித்திய ஜீவன் 1Jn5:11 . And this is the testimony: that God has given us eternal life, and this life is in His Son. 1Jn5:13;2:25;Mt25:46;Jn3:15,16,36;4:36;6:40,47,68;10:28;12:50;17:2,3;Rom5:21;6:23;1Tim1:16;Jud1:21. 1யோவா5:11. தேவ நமக்கு நித்திய ஜீவனை தந்துள்ளார். 1யோவா5:13;2:25;மத்25:46;யோவா3:15,16,36;4:36;6:40,47,68;10:28;12:50;17:2,3;ரோம5:21;6:23;1தீமோ1:16;யூதா1:21.       இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பதுவே தேவனுக்கும் குமாரனுக்கும் உள்ள பிரிக்கவியலாத உறவைக் குறிக்கின்றதாயுள்ளது. தேவன் தமது குமாரனில் தமது ஜீவனை வைத்துள்ளார். இந்த ஜீவனே நித்திய ஜீவன் ஆகும். இயேசு தேவனின் நித்திய ஜீவனை சுமந்து வந்தார். ஆதியில் ஆதாம் ஏவாளில் கொடுத்த ஜீவனும் தேவனின் ஜீவனே. அவர்கள் தேவனுடைய கற்பனைகளைவிட்டு விலகிப்போனதினால் நித்தியத்துக்கு ஏதுவான ஜீவன் மரணத்தில் மையம் கொண்டு மரணத்திலே முடிந்து போனது. ஆகவே மனிதர்க்கு நித்திய ஜீவனைக் கொடுக்க தேவன் மறுபடியும் சித்தம் கொண்டு தமது ஜீவனை கிறிஸ்துவில் வைத்தார். இயேசு கிறிஸ்து பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து ...

CCM Tamil Bible Study - நமக்குள் உள்ள இரகசியம் - The secret within us

நமக்குள் உள்ள இரகசியம்  1Jn5:10. He who believes in the Son of God has the witness in himself; he who does not believe God has made Him a liar. Ps25:14;Pro3:32;Rom8:16;Gal4:6;Col3:3;2Pet1:19;Rev2:17,28;Num23:19;Job24:25;Isa53:1;Jer15:18.  1யோவா5:10. இயேஉவை விசுவாசிக்கிறவர் இந்த சாட்சியை உடையவராயிருக்கிறார். சங்25:14;நீதி3:32;ரோம8:16;கலா4:6;கொலோ3:3;2பேது1:19;வெளி2:17,28;எண்23:19;யோபு24:25;ஏசா53:1;எரே15:18.  ✔ சுவிசேஷத்தின் மறைபொருளும் கிறிஸ்தவத்தின் அச்சாணியும் இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பதுவே. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லுகிற எவரும் இந்த சாட்சியை உடையவராயிருக்க வேண்டும். இந்த சாட்சியை உடையவர் எவரும் எவ்விதமான அறநெறிபாவங்களிலிருந்தும் மீண்டு வருவார்கள். ஏனெனில் இந்த விசுவாச அறிக்கை, விசுவாச சாட்சியானது பாவத்தினால் செத்துப்போன சரீரங்களையும் உயிர்ப்பிக்கும் ஆற்றல் உள்ளதாயிருக்கிறது. இந்த சாட்சியைக் கொண்டிருப்பவன் இயேசு கிறிஸ்துவை உயிருள்ளவராக இவ்வுலகத்தில் நிறுத்துகிறான். இன்னும் சொல்லப்போனால் அறிக்கையிடுகிற இவனே உயிருள்ள கிறிஸ்துவாக கா...

CCM Tamil Bible Study - குமாரனை குறித்த சாட்சி - Witness about the Son

குமாரனை குறித்த சாட்சி 1Jn5:9. If we receive the witness of men, the witness of God is greater; for this is the witness of God which He has testified of His Son. Jn3:32,33;5:31-36,39;8:17-19;10:38;Act5:32;17:31;Heb2:4;6:18;Mt3:16,17;17:5.  1யோவா5:9. மனுஷருடைய சாட்சியிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது. யோவா3:32,33;5:31-36,39;8:17-19;10:38;அப்5:32;17:31;எபி2:4;6:18;மத்3:16,17;17:5. ★ இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்றும், உலக இரட்சகர் என்றும், மேசியாவாகிய கிறிஸ்து என்றும் மனிதர்கள் சாட்சிக் கொடுக்கிறார்கள். அவர் தேவகுமாரன் என்றும் மிகச்சிறந்த மனிதர் என்றும் சாட்சிக் கொடுக்கிறார்கள், இரட்சிக்கப்பட்டவர்களும், இரட்சிக்கப்படாதவர்களும் சாட்சிக் கொடுக்கிறார்கள். இந்த சாட்சிகளை விடவும் தேவன் தமது குமாரனைக் குறித்து கொடுத்துள்ள சாட்சியே மேன்மையான சாட்சி என்றுக் கூறுகின்றார்.   ★ பிசாசுகளும் இயேசுவின் பலத்த கிரியைகளுக்கு முன்பாக நிற்க முடியாமல் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று சாட்சிக் கொடுத்தது. இந்த சாட்சிகளைவிடவும் தேவனுடைய சாட்சியே மேலானது. ★ இயேசுவுக்கு முன்னோடினவரும், எலியாவின்...

CCM Tamil Bible Study - பூலோக சாட்சிகள் - Witnesses of Earth

பூலோக சாட்சிகள்  1Jn5:8. And there are three that bear witness on earth:the Spirit, the water, and the blood; and these three agree as one. Mt26:26-28;28:19;Rom8:16;Act2:2-4;Heb13:12;1Pet3:21;Mk14:56;Act15:15. 1யோவா5:8. பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று. இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. மத்26:26-28;28:19;ரோம8:16;அப்2:2-4;எபி13:12;1பேது3:21;மாற்14:56;அப்15:15. ★ பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்று எடுத்துரைத்த ஆக்கியோன் இப்பொழுது பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் குறித்து குறிப்பிடுகின்றார். நாம் இரத்தத்தினால்  பிறந்திருப்பதினால் இரத்தமே சாட்சியிடுகிறது. நாம் ஜலத்தினால் பிறந்துள்ளதினால் ஜலம் சாட்சியிடுகின்றது. நாம் ஆவியினால் பிறந்துள்ளதினால் ஆவி சாட்சியிடுகிறது. பரலோகத்தின் சாட்சி தங்களுக்குள் நடந்ததாகும். பூலோகத்தின் சாட்சியோ நம்மைக் குறித்ததாகும். அதாவது பிதாவாகிய தேவனிடம் இந்த மூன்றும் சாட்சியிடுகிறது எனலாம்.  ★ காயீன் ஆபேலை கொன்றதினிமித்தம் ஆபேலின் இரத்தம் தேவனை நோக்கி என் சகோதரன் என்னைக் கொன்றான் என்று சாட்சியிட்டது. இரத்தம் உயிராய...

CCM Tamil Bible Study - கிறிஸ்தவ உண்மைகள் - Christian Truths

(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்) கிறிஸ்தவ வாழ்வில் நாம் கட்டியெழுப்பப்பட வேண்டிய அடிப்படை உண்மைகள் 【தேவனுடய வசனத்தோடுள்ள நமது தொடர்பு】 ★பைபிள் தேவனுடைய வார்த்தை ★ஏனெனில் தேவன் பேசி சொல்லியதாவது போன்ற சொற்றொடர்கள் ஆங்காங்கு காணப்படுகிறது. யோசுவா1:1 மேலும்….  2பேதுரு 1:20,21 - வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். 2தீமோத்தேயு 3:16 - வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. இது எப்படிப்பட்ட வார்த்தை ? ★ குறைவற்றது சங்கீதம் 19:7 - கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்கு...