CCM Tamil Bible Study - கிறிஸ்தவ உண்மைகள் - Christian Truths
- Get link
- X
- Other Apps
(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்)
கிறிஸ்தவ வாழ்வில் நாம் கட்டியெழுப்பப்பட வேண்டிய அடிப்படை உண்மைகள்
【தேவனுடய வசனத்தோடுள்ள நமது தொடர்பு】
★பைபிள் தேவனுடைய வார்த்தை
★ஏனெனில் தேவன் பேசி சொல்லியதாவது போன்ற சொற்றொடர்கள் ஆங்காங்கு காணப்படுகிறது. யோசுவா1:1
மேலும்….
2பேதுரு 1:20,21 - வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
2தீமோத்தேயு 3:16 - வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
இது எப்படிப்பட்ட வார்த்தை ?
★ குறைவற்றது
சங்கீதம் 19:7 - கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
★ ஒழிந்துப் போகாதது
மத்தேயு 24:35 - 35 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
★ ஜீவனுள்ளது
எபிரேயர் 4:12 - தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
★ தூய்மையானது
சங்கீதம் 19:8 - கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.
★ உண்மையானது
சங்கீதம் 19:9 - கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
【ஆதி வார்த்தை】
1யோவான்1:1 - ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தை.
புடமிடப்பட்ட வார்த்தை - பரிசோதிக்கப்பட்ட வார்த்தை
சங்கீதம் 12:6 - கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.
நீதி 30:5, சங்கீதம் 119:140
இந்த வார்த்தைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்ன ?
★ கேட்கிறேன்
லூக்கா 8:21 - தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள்..
மத்தேயு 11:25 – காதுள்ளவன் கேட்கக்கடவன்.
★ வாசிக்கிறேன்
வெளி1:3 - இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
ஏசாயா 34:16
★ தியானிக்கிறேன்
சங்கீதம் 1:2 - கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
55:17 - அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்;
119: 148 - உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.
யோசுவா 1:8 - இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.
★ உட்கொள்ளுகிறேன்
எரேமியா 15:16 - உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது.
★ சுமக்கிறேன்
★ காத்திருக்கிறேன்
சங்கீதம்5:3 - கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
சனீதம் 119:123,114,147 - உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
★ விசுவாசிக்கிறேன்
சங்கீதம் 106:12 - அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்.
★ காத்துக்கொள்கிறேன்
லூக்கா11:28 - தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்.
நீதி3:3 - நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
7:2 - என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
★ அறிவிக்கிறேன் - பேசுகிறேன்
சங்கீதம் 116:10 - விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்.
மல்கியா 2:7 - ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே.
இந்த தேவ வார்த்தையில் நாம் பழகிக்கொண்டால் ?
★ இது இருளில் நமக்கு வெளிச்சமாயிருக்கும்
சங்கீதம் 119:105 - உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
2பேதுரு1:19 - அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.
★ இடறாமல் முன்னேற உதவும்
இதை தியானிக்கும்போது உன்னில் அபிஷேகம் இறங்கும்.
சங்கீதம் 39:3 - 3 என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம்செய்தேன்.
★ இந்த அக்கினி சுத்திகரிக்கும்
யோவான் 17:17,19 - உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
★ இதனால் உனக்கு ஜெயம் உண்டாகும்
வெளி12:11 - மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
இயேசு வசனத்தைக் கொண்டு சாத்தானை ஜெயித்தார். வசனம் பட்டயமாயிருந்து வெற்றியைத் தருகிறது. இதனால் உனக்கு குணமாகுதல் உண்டாகும்
சங்கீதம் 107:20 - அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
வசனத்தினால் குணமாக்கினார் இயேசுகிறிஸ்து.
★ நாம் பாவம் செய்யாதபடிக்கு தடுக்கும்
சங்கீதம் 119:11 - நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
நம்மை உணர்த்தி பாவம் செய்யாதபடி தடுக்கும். ஆகவே நாம் ஆவிக்குரிய வாழ்வில் கட்டியெழுப்பட இந்த வசனங்களை உறுதியாய் பிடித்துக் கொள்வோமாக.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment