CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பாவம் செய்யாதவன் - One who does not sin

பாவம் செய்யாதவன்

1Jn5:18a. We know that whoever is born of God does not sin. 1Jn5:1,4;2:24;3:9;4:6;Jn1:13;3:2-5;Jas1:18;1Pet1:23.

1யோவா5:18a.தேவனால் பிறந்த எவரும் பாவம் செய்வதில்லை. 1யோவா5:1,4;2:24;3:9;4:6;யோவா1:13;3:2-5;யாக்1:18;1பேது1:23.

1யோவா3:9 ல் வித்தை தன்னுள் கொண்டுள்ளவன் பாவம் செய்வதில்லை என்று அறிந்தோம். இங்கு தேவனால் பிறந்தவன் பாவம் செய்வதில்லை என்பதை கவனிப்போம். தேவனால் பிறந்தவன் இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனென்று அறிந்து நம்பி அறிக்கையிட்டு விசுவாசிக்கிறவன். அவனுக்குள் இயேசுகிறிஸ்து வாழ்கின்றார். இயேசு கிறிஸ்து தேவனால் பிறந்தவரும் தேவனுடைய குமாரனுமாகையினால் இயேசுவை ஏற்றுக்கொண்டவனும் தேவனால் பிறந்தவனாகவும் தேவனுடைய பிள்ளையுமாகவும் மாறுகின்றான். இயேசு கிறிஸ்து பாவம் செய்யாதவராகையினால் இவனும் பாவம் செய்வதில்லை. 

☆ இவ்வாக்கியம் எத்தகைய பாவத்தை குறிக்கின்றது?. மரணத்துக்கு ஏதுவான பாவத்தையே குறிப்பிடுகின்றது. மரணத்துக்கு ஏதுவான பாவம் என்பது இயேசுவை இழந்துபோன அனுபவமாகும். இயேசுவை மறுதலிக்கிறவனும், மறுபடியும் சிலுவையில் அறைகிறவனுமாயிருக்கிறான். தான் அறிக்கையிட்டு ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவை விட்டுவிட்டு அந்நிய தெய்வங்களுக்கும், புறமத அனுசாரங்களுக்கும் இடம் கொடுத்து அவைகளை அறிக்கையிடுவது ஆகும். 

☆  தேவனால் பிறந்தவன் மரணத்துக்கு ஏதுவான பாவத்தை செய்யாதிருந்தாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவங்களாகிய கோபம், எரிச்சல், விட்டுகொடுக்காத தன்மை, கசப்பு, வைராக்கியம், மாம்ச சுபாவம், உலக ஈடுபாடு போன்ற அனேக தவறுகளில் ஏதோவென்றை செய்கிறவனாக இருக்கக்கூடும். இந்த தவறுகளும்கூட அவன் தேவனால் பிறந்திருப்பதினால் அவனில் நிலைகொள்ளாதிருக்கும். இடறிபோனதை அறியும் உணர்வு  உள்ளவனாக இருப்பதினால் விரைவில் இந்த தவறுகளிலிருந்து வெளியேறுவான். அதற்காக தனனை தேவனிடம் சமர்ப்பிக்க திறந்த உள்ளத்தோடே அவரிடம் சேருவான். தேவனால் பிறந்தவனின் இருதயம் திறக்கப்பட்ட புஸ்தகத்தைப்போல, கிழிக்கப்பட்ட இருதயத்தைப்போல காணப்படும். நல்லது கெட்டது எதையும் தன் தேவன் முன்னிலையிலும் சபை முன்னிலையிலும் மறைத்து வாழ்கிறவனாக் இருக்கமாட்டான். மரணத்துக்கு ஏதுவல்லாத தவறுகளை- பிழைகளை பரிகரிக்க தன்னை அவரிடம் சமர்ப்பணம் செய்கிறவனாகவும் இருப்பான். 

☆ பாவம் செய்யாதவன் ஒருவனும் இல்லையே என்று இரட்சிக்கப்படாத ஒருவன் கூறலாம். இயேசுவை தன்னுள் கொண்டுள்ளவனும் கிறிஸ்துவின் சீஷத்துவ பணிக்கு ஒப்புக்கொடுத்தவனும் பாவம் செய்யாதவன் ஒருவனும் இல்லையென்று சொல்லுவதும் பிரசங்கிப்பதுமே மகா பெரியா பாவமாகும். தன்னையே பாவம் செய்யாதவன் – குற்றமிழைக்காதவன் – தவறு செய்யாதவன் – கசப்பான வைராக்கியம் இல்லாதவன் – அன்புள்ளவன் – கீழ்படிதலுள்ளவன் என்று சாட்சிபகரக் கூடியவனுமாயிருக்க வேண்டும். தன்னை குறித்து சாட்சிக் கொடுக்க தைரியமுள்ளவனே தேவனால் பிறந்தவனாயிருக்கிறான். இந்த தைரியம் நம்மில் எத்தனை பேரிடம் உள்ளது?. தவறு செய்துவிட்டோம் என்பதை ஒத்துக்கொள்வதும், திரும்ப தவறு செய்யாதபடிக்கு தன்னை திருத்திக்கொள்வதும் , தான் செய்த தவறுக்காக ஆண்டவரிடம் மன்றாடிக்கொள்வதும் நம்மிடம் இருக்குமானால் நாம் தேவனால் பிறந்தவர்களே. பிரர் நம்மை குற்றம் சாட்டும்போது கோபத்தோடு நடந்துக்கொள்வதும், மறுப்பதும், தவறை சரியென்று சாதிப்பதும் தேவனால் பிறந்தவனின் அடையாளமல்ல. 

☆ மாற்றப்பட வேண்டியதை மாற்றியே ஆக வேண்டும். 

யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்மாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். யோவான் 3:1-5.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்