CCM Tamil Bible Study - பொல்லாங்கனிடம் அகப்பட்ட உலகம் - World lies under sway of wicked one
- Get link
- X
- Other Apps
பொல்லாங்கனிடம் அகப்பட்ட உலகம்
1Jn5:19. We know that we are of God, and the whole world lies under the sway of the wicked one. 1Jn4:4,5;Jn15:18,19;Rom1:28-30;3:9-18;Gal1:4;Tit3:3;Jas4:4.
1யோவா5:19. உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 1யோவா4:4;யோவா15:18,19;ரோம1:28-30;3:9-18;கலா1:4;தீத்3:3;யாக்4:4.
☆ உலகம் தேவனுடைய சாயலை வெளிபடுத்துவதில்லை, தேவனுடைய தன்மையையும் வெளிபடுத்துவதில்லை, தேவனுடைய அம்சத்தையும் கொண்டிருக்கவில்லை. உலகம் தேவனுடைய ஞானத்தினாலும் அறிவினாலும் உண்டாக்கப்பட்டது. ஆகவே உலகை நாம் பார்க்கும்போது தேவனுடைய அநந்த ஞானத்தையும், அறிவையும் காணமுடியும். உலகத்தை அழகு தேவதையாக பார்க்கின்ற பார்வையெல்லாம் அந்நிய மத உபதேசங்களாகவும், பாவத்தின் விளைவாகவும் உள்ளது. ஞானோந்திரியமாக உண்டாக்கப்பட்ட உலகம் சிதைந்து உருமாறி போயிருப்பது பாவத்தின் விளைவேயாகும். இந்த நிலைமைக்கு அடிப்படை காரணம் தேவனால் தள்ளப்பட்ட சாத்தானேயாகும். முழு உலகமும் தேவனுடைய சாயலாக படைக்கப்பட்ட ஆதி மனிதனின் கட்டுபாட்டிலே கொடுக்கப்பட்டது. தேவ உலகத்தின் அதிகாரியாகிய தேவன் பூலோகத்தின் அதிகாரியாகவும் இருந்தார். பரலோகத்தின் பிரதிநிதியாக வைக்கப்பட்டிருந்த தூதனைப்போல பூலோகத்தின் பிரதிநிதியாக ஆதி மனிதனையும் நியமித்தார். பரலோகில் நியமிக்கப்பட்டவனும் விழுந்து போனான். அவனை மீட்க சித்தம் கொள்ளாமல் அழிக்க சித்தம் கொண்டார். பூலோகத்தில் நியமிக்கப்பட்ட மனிதனும் விழுந்துபோனான். உலகத்தின் அதிகாரத்தை இழந்தான். ஆனால் விழுந்துபோன மனிதனை மீட்க சித்தம் கொண்ட தேவன் தமது குமாரனை பாவ மாம்சத்தின் சாயலாகவும், பாவம் போக்கும் பலியாகவும் அனுப்பி மனிதனை மீட்டெடுத்தார். இதனால் இரு விளைவுகள் உண்டானது. அதிகாரம் இழந்த மனிதனின் ஏக பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட தேவமனிதனாகிய கிறிஸ்து முழு உலகின்மேலும் அதிகாரமுடையவரானார். 2 வது வீழ்ச்சியடைந்த மனுகுலம் மீட்சியடைந்த ஏக தேவ மனிதனின் பின்னால் அணிவகுத்து முழு உலகையும் கிறிஸ்துவின் ஆளுகைக்குள் கொண்டுவர வாய்ப்பாயமைந்தது.
☆ பொல்லாங்கனாகிய சாத்தானின் அதிகாரத்துக்குள்ளும் பாவத்தின் இருளுக்குள்ளும் முழு உலகமும் விழுந்து கிடக்கிறது என்பது உண்மையே. பாவம் செய்கிறவர்கள் பெருக பெருக உலகம் சாத்தானுக்கு அடிமைபட்டுக் கிடக்கும். பிசாசானவன் மனிதனின் உள்ளங்களில் பாவ சிந்தனைகளை வைத்து அவைகளிலே வாழவைக்கின்றான். சுதந்தரம் என்ற பேச்செல்லாம் பாவம் செய்வதற்கும் அக்கிரமம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. நீதியின் ஆயுதமாக ஒப்புக்கொடுக்கவேண்டிய மனித மாண்புகளை அநீதியின் ஆயுதங்களாக ஒப்புக்கொடுக்கிறான். ஆதிகால இருளை அகற்றி வெளிச்சமாக்கிய சுவிசேஷத்தினிமித்தம் ஒளியூட்டப்பட்ட பல மகோன்னதர்கள் ஆதிகால இருளை மறுபடியும் தோண்டியெடுத்து ஆதிகால அக்கிரமங்களுக்கும் பாவங்களுக்கும் அழைத்துச் செல்கிறார்கள். அறிய முயற்சித்தவர்கள் அனுபவிக்க துணிந்து விட்டார்கள். இதனால் பிரிவினைகளும் பாவங்களும் பெருகி உலகம் மாயைக்குள் மறுபடியும் விரைந்தோடுகின்றது.
☆ சுவிசேஷத்தின் ஒளியை பெற்றவர்கள் இவைகளிலிருந்து விலகிவாழக் கற்றுக்கொள்ளவில்லையெனில் ஒருவராலும் தடுக்கவியலாத ஆதி பேரிருள் முழு உலகையும் மூடிப்போடப்போகின்றது.
☆ தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். ரோமர் 8:19-25.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment