CCM Tamil Bible Study - கேட்பது கிடைக்குமா? - If we ask anything to his will,
- Get link
- X
- Other Apps
நாம் கேட்பது கிடைக்குமா?
1Jn5:14. Now this is the confidence that we have in Him, that if we ask anything according to His will, He hears us. 1Jn3:22;Mt7:7-11;21:22;Jn14:13;15:7;16:24;Jas1:5,6;4:3;5:16;Jer29:12,13;33:3;Ps106:15.
1யோவா5:14. நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால். 1யோவா3:22;மத்7:7-11;21:22;யோவா14:13;15:7;16:24;யாக்1:5,6;4:3;5:16;எரே29:12,13;33:3;சங்106:15.
☆ நாம் நம்பும் தேவன் எஜமானாயிருக்கிறார். சகலவற்றிற்கும் அவரே எஜமான். தமக்கு சித்தமானவர்களுக்கு அவர் கொடுக்கிறார் என்றாலும் எல்லாருக்கும் எல்லாவற்ரையும் கொடுக்கிறார் என்பதையும் மறக்க வேண்டாம். எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுக்கிறார் என்பது தேவனுடைய பிள்ளைகளுக்கும் பொருந்தும். அதேவேளையில் தேவனுடைய பிள்ளைகளுக்கு அவர் கொடுக்க விரும்புவது என்ன? என்பதை நாம் அறியவேண்டியவர்களாயுள்ளோம். உணவு, உடை, உறைவிடம், பணம், பொருள் ஆகிய யாவும் யாவருக்கும் கிடைக்கிறது. அப்படியானால் தேவனுடைய பிள்ளைகள் தேவனிடம் கேட்க வேண்டியது என்ன என்று நாம் அறிவது நல்லது.
☆ அவர் நன்மையான ஈவுகளைக் கொடுக்கிறார். அவைகளை பரலோகத்திலிருந்து கொடுக்கிறார். பாவிகளுக்கும் தேவனை நம்பாதவர்களுக்கும் அவைகளை அவர் கொடுப்பதில்லை. இயேசு கிறிஸ்து நல்ல ஈவுகள் என்று கூறுகின்றார். பவுல் பூமியிலுள்ளவைகளல்ல, மேலானவைகள் என்று கூறுகின்றார். அவர் எதை தமது பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்புகின்றார் என்று அறிவது அவசியமாயுள்ளது. அதை அவரிடம் கேட்பதுவே அவரது சித்தப்படி கேட்பது ஆகும். பூமிக்குரியது யாவும் உழைப்பினாலும் பரம்பரை அமைப்பினாலும் சொந்தமாக்கிக்கொள்ள முடியும். ஆனால் நமது உழைப்பினாலோ வேறு எவ்விதத்தினாலோ பெறமுடியாத ஒன்று கீழ்படிதலினாலும், இணங்கி வாழ்வதினாலும் கிடைக்கின்றது. அதையே நாம் கேட்கும்படி வழிநடத்தப் படுகின்றோம்.
☆ அவருக்கு சித்தமானது என்னவென்பதை விவிலியம் நமக்கு கற்றுக்கொடுத்திருந்தாலும் அவைகளை குறித்த வெளிச்சத்தை பரிசுத்த ஆவியானவரே நமக்கு தர முடியும். ஆகையினால் பூமிசாராததும், மனிதரால் எளிதில் பெறவியலாததும், மீட்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கிடைப்பதுமாகிய பரிசுத்த ஆவியை நாம் அவரிடத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ள கடனாளிகளாயிருக்கிறோம். பரிசுத்த ஆவியினாலேயன்றி ஒருவரும் தேவனுக்குரியவைகளை அறிந்துக்கொள்ளவியலாது. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே பரலோகத்துக்குரிய நன்மைகளை, பரலோக ஆசீர்வாதங்களை தேவனிடம் கேட்க முடியும். பரிசுத்த ஆவியை தன்னுள் கொண்டுள்ள ஒருவர் நிச்சயமாக அழிந்துப்போகும் பொருட்கள் மீது ஆவல் கொள்ளமாட்டார்.
☆ அப்படியானால் நாம் தேவனிடம் கேடகவேண்டியது என்ன?. அவர் தமது பரிசுத்தவான்களுக்கு கொடுத்திருப்பதும், கொடுத்துக்கொண்டிருப்பதும் என்ன?. பலம் அவசியமானது. பலவீனபடுத்தும் பாவ உலகில் ஆவிக்குரிய வாழ்வில்நிலைத்து நிற்க தேவபலம் அவசியமானது. திருப்தியான மனம் அல்லது போதுமென்கிற மனம் அவசியமானது. நிம்மதி, சந்தோஷம், சமாதானம் யாவும் இதிலே இணைந்து நிற்கிறது. இந்த மனம் இல்லாமல் திருப்தியடையாத இந்த உலக மாந்தரிடையில் நாம் வாழவியலாது. நீடித்த வாழ்வு அவசியம். இதில் ஞானம், ஆரோக்கியம் யாவும் அடங்கும். சரீரத்தை செம்மையாக பேணும் ஞானம் அவசியப்படுகின்றது. ஆரோக்கியம் இல்லாமலும் நீண்டவாழ்வு இல்லாமலும் தேவனுடைய பணிகளை பரிபூரணமாக நிறைவேற்றி முடிக்கவியலாது. ஏறக்குறைய மீந்தவையெல்லாம் இங்கே நமக்கு கிடைக்கிறது. இந்த மூன்றும் மேலானவைகளாகும். தமது பரிசுத்த ஆவியால் இவைகளை கொடுக்கிறார்.
☆ ஆக நாம் அவரின் சித்தப்படி கேட்கவேண்டியது பரிசுத்த ஆவி, தேவபலம், திருப்தியுள்ள மனம், நீண்ட ஆயுள் என்பவைகளே. இவைகளை கேளுங்கள். கேட்க பழக்குவியுங்கள்.
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். மத்தேயு 7:7-12
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். யோவான் 4:10
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment