CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - வேண்டுதல் செய் - Pray to God

வேண்டுதல் செய்

1Jn5:16a. If anyone sees his brother sinning a sin which does not lead to death, he will ask, and He will give him life. Gen20:7,17;Ex30:10-14;34:9;Num12:13;14:11-21;Deu9:18-20;Job42:7-9;Ps106:23;Eze22:30;Am7:1-3;Jas5:14,15.

1யோவா5:19a. மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை தன் சகோதரன் செய்யக்கண்டால் வேண்டுதல் பண்னக் கடவன். 

ஆதி20:7,17;யாத்30:10-14;34:9;எண்12:13;14:11-21;உபா9:18-20;யோபு42:7-9;சங்106:23;எசே22:30;ஆமோ7:1-3;யாத்5:14,15. 

☆ நடபடிகள் புத்தகத்தின் முந்திய ஆசிரியர் ரால்ப் மகோனி அவர்கள் கூறும்போது ஒருவருக்காக ஜெபிக்கும் முன்பதாக அந்நபரைக்குறித்த தேவசித்தம் என்ன என்பதை அறிந்துக்கொண்டு ஜெபியுங்கள் என்று கூறுகிறார். யோவான் நிருப ஆசிரியர் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் உண்டு என்றுக் கூறுகின்றார். அப்படியானால் அவைகள் எப்படிப்பட்டவைகள் என்று அவர் பட்டியலிடாமல் இருந்துவிட்டார். விவிலியத்தை வாசிக்கும்போது பல சந்தர்ப்பங்களில் சில பாவங்கள் மன்னிப்பை பெற்றுள்ளன என்பதை அறிய முடிகின்றது. மன்னிப்பைக் கொடுக்கிறவர் தேவன். ஒருவருக்கு மன்னிப்பைக் கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை அவரே தீர்மானிக்கின்றார். அப்படியானால் ஒரு நபரை மன்னிக்க தேவன் விருப்பமுள்ளவராயிருப்பாரானால் அந்நபருக்காக அவரிடம் வேண்டுதல் செய்வது அவசியமாகும். 

☆ வேண்டுதல் செய்தால்தான் மன்னிப்பைக் கொடுப்பாரா?. மன்னிப்பைக் கொடுக்க விரும்பினால் ஜெபிக்க வைக்காமலே கொடுக்கலாமே என்று நாம் அனுமானிக்க முடியும். ஆனால் ஜெபத்தின் உண்மை தன்மையையும், ஜெபிக்கிறவருக்குள் உள்ள உண்மையான உள் உணர்வையும் ஆண்டவர் அறிய விரும்புகிறார். மேலும் மன்னிப்பை பெற வேண்டிய மனிதனின் அர்ப்பணிப்பை வேண்டுதல் செய்கிறவர் மூலமாக கொண்டுவர விரும்புகிறார். மேலும் ஆண்டவரும் , வேண்டுதல் செய்கிறவரும் மன்னிப்பை பெற வேண்டியவனுக்காக இணைந்து செயல்பட விரும்புகிறார். இருவரின் ஒன்றிப்பே ஒருவருக்கு மன்னிப்பைக் கொண்டு வருகிறது. 

☆ மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்துக்காக ஜெபிக்க கூறியிருப்பதினால் இரண்டு காரியங்களை  நாம் அறிய வேண்டும். பாவம் என்பது மரணத்தையே பிறப்பிக்கும். அப்படியானால் இவ்விடத்தில் சொல்லப்பட்டுள்ள பாவம் எனப்படுவது குற்றங்கள், தவறுகள் போன்றவைகளாகும். இவைகள் தண்டனைக்குரியவைகள். இந்த குற்றங்களினிமித்தம் தேவனிடமிருந்து அடிவிழுந்து காயமுண்டாகி அவதிப்படுவதற்கு பதிலாகவேண்டுதல் செய்யச் சொல்கிறார். மரணத்தை பிறப்பிக்காத குற்றங்கள் நிச்சயம் காயத்தை உண்டாக்கும். இந்த காயங்களினால் உண்டாகும் வேதனை, பின்மாற்றங்கள் தேவனுக்கு அவகீர்த்தியை உண்டுபண்னலாகாது என்பதற்காகவே அப்படிப்பட்டவர்களுக்காக வேண்டுதல் செய்ய சொல்கிறார். 

☆ மன்னிப்பை பெறதக்க இடத்தில் உள்ள குற்றம் செய்த சகோதரனுக்காக வேண்டுதல் செய்யாத ஒருவர் ஆண்டவரின் கோபத்துக்கு ஆளாகின்றான். ஏனெனில் இவன் வேண்டுதல் செய்யாததினால் தேவன் அவனுக்கு மன்னிப்பையும் ஜீவனையும் கொடுக்கவில்லை. அவன் தன் பாவத்திலே நிறைவு பெற்று மரித்துப்போகின்றான். இவனுக்காக வேண்டுதல் செய்யாததினிமித்தம் செத்தவனின் இரத்தபழி இவனிடம் கேடகப்படும். ஆகவே, தேவசித்தம் அறிந்து ஜெபிக்க நம்மை ஒப்புக்கொடுப்பது மிகவும் அவசியமாகின்றது. 

☆ கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்? 

நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப் பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார். மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள்; அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே. கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள், இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள். ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்: கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே. ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவரென்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக. 

உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான். எண்ணாகமம் 14:11-19.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்