CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பாவமான அநீதி - Sinful injustice

பாவமான அநீதி

1Jn 5:17. All unrighteousness is sin, and there is sin not leading to death. 1Jn3:4;Deu5:32;12:32;Job34:10;Lk16:9;1Cor6:1;2Thes2:10,11;Jas3:6;2Pet2:12,15.

1யோவா5:17. அநீதியெல்லாம் பாவந்தான். 1யோவா3:4;உபா5:32;12:32;யோபு34:10;லூக்16:9;1கொரி6:1;2தெச2:10,11;யாக்3:6;2பேது2:12,15

☆ நீதிக்கு எதிரானது அநீதி. தேவனுடைய நீதிக்கு எதிரானது அநீதி. தேவன் நீதியினால் தம்மை போர்த்திக் கொண்டுள்ளார். பிசாசோ அநீதியினால் தன்னை போர்த்திக்கொண்டுள்ளது. விசுவாசத்தினால் உண்டாகும் நீதியும் உண்டு. அவிசுவாசத்தினால் உண்டாகும் அநீதியும் உண்டு. கர்த்தருடைய வாக்கியங்கள் நீதியைப் போதிக்கின்றது – படிப்பிக்கின்றது. நீதிக்கு எதிரான காரியங்கள் யாவும் அதாவது, கர்த்தருடைய வாக்கியங்களின்படி வாழாதவர்கள் அநீதியை பிறப்பிக்கின்றார்கள். மாறுபாடான பேச்சுக்கள் அநீதியின் ஆயுதங்கள் ஆகும். அதர்மமான கிரியைகளும், அக்கிரம செய்கைகளும் அநீதியையே பிறப்பிக்கின்றது. நீதியின் சூரியனை மறைக்கும் காரிருளே அநீதி என்ற கார் மேகம். இந்த அநீதி என்ற கார்மேகத்தினால் துன்மார்க்கம் எங்கும் பெருகுகின்றது. 

☆ அநீதி தேவனை தரிசிக்கமுடியாதபடி கண்களை குருடாக்கும். தேவனுக்கு நேராக ஓடவியலாதபடிக்கு தடுக்கும். தேவனோடு இணைந்து பயணிக்கமுடியாத படிக்கு தடுக்கும். அநீதியில் பிரியபடுகிறவர்களோடும், அக்கிரமகாரகளோடும் பொல்லாதவர்களோடும் இணைந்து செல்லத் தூண்டும். அநீதி காரிருளின் கண்கள். நீதிமான்களை தன்னுள் இழுத்துக் கொள்ளும்படி திறந்தேயிருக்கின்றது. அநீதியுள்ளவர்களின் பாதையில் நீதிமான்கள் காணப்படுவது ஆபத்தானது. தேவனுடைய கோபாக்கினையின் நாளில் அநீதிமான்களோடு வாரிக்கொள்ளாதபடிக்கு நீதிமான்கள் விலகிவாழக் கற்றுக்கொள்ள வேண்டும். நீதிக்கும் அநீதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இணைந்து பயணிக்காது. ஆகவே பிரிந்து வாழ அழைக்கப்பட்டோர் இணைந்துவாழ முயற்சிக்கலாகாது. அநீதி ஒரு மாய உலகம். அதில் அகப்பட்டு விட்டொமானால் தப்பித்து வெளியேறவியலாது. அது தன்னிலை மறக்கச் செய்யும் ஏராளமான குளிர்பானங்களை தன்னுள் கொண்டுள்ளது. உள்ளே எச்சரிக்கையுடன் வாழ வழி கிடையாது. அநீதியில் பிரியப்படுகிறவர்களின் உலகம். எனவே நாம் நம் சரீரங்களை அநீதியின் ஆயுதங்களாக ஒப்புக்கொடுக்காமல் நீதிக்குரிய ஆயுதங்களாக ஒப்புக்கொடுத்து வாழ்வோமாக. 

இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள். இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப் போன மரங்களும், தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். யூதா 1:11-15

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்