CCM Tamil Bible Study - கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம் - We are in Christ
- Get link
- X
- Other Apps
இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம்
1Jn5:20b. that we may know Him who is true; and we are in Him who is true, 1Jn2:6,24;4:16;Jn10:30;14:20,23;15:4;17:20-23;2Cor5:17;Phil3:9.
1யோவா5:20b. நாம் சத்தியமுள்ள இயேசுகிறிஸ்துவுக்குள் இருக்கிறோம். 1யோவா2:6,24;4:16;யோவா10:30;14:20,23; 15:4;17:20-23;2கொரி5:17;பிலி3:9.
IN CHRIST - EN CHRISTOS - கிறிஸ்துவுக்குள் என்ற சொல் புதிய ஏற்பாட்டில் ஏறக்குறைய 76 தடவைகள் (KJV) வருகின்றது. இந்த வார்த்தையோடு இணந்தவிதமாய் அவருக்குள் - ஆவிக்குள் - தேவனுக்குள் போன்ற சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. விவிலிய இறையியலில் ஆழம் கண்டுபிடிக்கவியலாத பொருள் செறிவுகொண்ட சொல்லே கிறிஸ்துவுக்குள் என்பதாகும். இயேசு கிறிஸ்துவை உளமார ஏற்றுக்கொண்ட ஒருவர் எவ்விதத்திலும் வேறுமதங்களோடும், நபர்களோடும், இஸங்களோடும் இணைத்து பார்க்காமல் கிறிஸ்துவுக்குள் மட்டுமே வாழ்கிறவன் என்று தன்னை காண்பிப்பதாகும். இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் யாவரும், ஆதி சபை பிதாக்கள் யாவரும் இவ்வாறே காணப்பட்டனர். இச்சொல் பவுலின் நிருபங்களில்தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்நிய மார்க்கம், அந்நிய கலாச்சாரம் போன்றவைகளோடும் , ஆட்சியாளர்களோடும் போராடி கிறிஸ்துவை மனித மனங்களுக்குள் கொடுப்பதற்காக போரடியதின் விளைவாக இச்சொல்லை பயன்படுத்துகின்றார். கிறிஸ்துவுக்குள் வாழ்கிறவன் எவ்விதத்திலும் தன்னை கிறிஸ்துவுக்குரியவனாகவே காண்பிப்பான். உயிரை இழக்கும் நிலை வந்தாலும் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்த அனுபவத்தை ருசித்தவனாக இருப்பதினால் அதற்கு வெளியே இருப்பவைகள் யாவும் குப்பை என்று கருதுவான். தாயின் வயிற்றுக்குள் வளரும் குழந்தையை போலவே தன்னை கிறிஸ்துவுக்குள் வளரும் குழந்தையாக கருதி தேவனுடைய இராஜ்யத்தில் பிறப்பிக்கப்பட்டவனாக அறிந்திருப்பான். தன்னை பெற்ற தாயை மறவாதிருப்பதுபோலவே தன்னை தேவனுடைய இராஜ்யத்துக்குள் பிறப்பித்த இயேசு கிறிஸ்துவை விட்டு வெளியேறவோ, அவ்விதம் சிந்திக்கவோ செயலற்றவனாவான். ஒரு ஊழியகாரனோ, ஒரு விசுவாசியோ தன்னை கிறிஸ்துவுக்குள் வாழ்கிறவனாக அறிந்திருக்கவும் வேண்டும், உலகிற்கு காண்பிக்கவும் வேண்டும். தனது அடையாளம் கிறிஸ்துவே. கிறிஸ்துவுக்குள் அடங்கிப்போனவனை மரணம் கூட கிறிஸ்துவை விட்டு பிரிக்கமுடியாது.
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2கொரிந்தியர் 5:17
நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறேனென்று காணப்படும்படிக்கும்,
இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் பாக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும். அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். பிலிப்பியர் 3:9-11
ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். பிலிப்பியர் 2:1,2
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment