CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - உங்களுக்கு எழுதுகிறேன் - I write to you

 1யோவா5:13. தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன். 

1யோவா5:10;3:23;1:1,2;யோவா20:31;21:24;அப்3:16;4:12;2கொரி5:1;1தீமோ1:15,16;1பேது5:12;2பேது1:10,11.

உங்களுக்கு எழுதுகிறேன்

    வாய்மொழி பாரம்பரியமாயிருந்த சுவிசேஷ செய்தியானது காகிதங்களிலும், தோல் சுருக்களிலும் எழுதப்பட்டு மறுக்கமுடியாததும், மாற்றமுடியாததுமான ஆதாரங்களாக உருவாக்கப்பட்டது. இவையாவும் பரிசுத்த ஆவியானவரின் வேலையேயாகும். தேவனுடைய கைவிரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளை பெற்றுக்கொண்ட மோசேயை கவனிக்கும்போது தேவன் பேசுகிறவர் மட்டுமல்ல, எழுதுகிறவருங்கூட என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். தேவனுடைய மனிதன் தேறினவனாக காணப்பட வாயினால் பிரசங்கிக்கிறவனாக மட்டுமல்லாது கைகளினால் எழுதும் ஆற்றலையும், கற்றுக்கொடுக்கும் உபதேச ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும்.

    புதிய ஏற்பாடு எழுதப்பட்டதின் நோக்கம் மூன்று நிலைகளைக் கொண்டது. இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்து நம்பி அறிக்கையிட்டவர்கள். அவர்கள் விசுவாசித்து அறிக்கையிட்டதை ஆதாரமூலமாக எழுத்தேடுகளில் எழுதிவைத்தார்கள். எழுதிவைக்கப்பட்டுள்ளதை வாசிக்கிறவனும், கேட்கிறவனும் இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசித்து அறிக்கையிட வேண்டும். இதற்காகவே எழுதப்பட்டுள்ளது. சுவிசேஷம் இரட்சிக்கப்படாதவர்களுக்கல்ல, இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறவர்களுக்காகவே எழுதப்பட்டது. விசுவாசித்ததை உறுதிபடுத்திக் காண்பிக்கவே எழுத்தேடுகள் காணப்படுகின்றன. நமது விசுவாசமும் எழுதப்பட்டதின் நோக்கமும் ஒன்றாயிருக்குமானால் நமக்குள் நித்திய ஜீவன் உண்டாயிருக்கும். 

    தேவனுடைய மனிதர்களின் எளிய விசுவாசத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல்களை உளவியல், தத்துவியல் மற்றும் நூலாராய்ச்சி முறைகளில் ஆய்ந்து கண்டுபிடிக்க முடியாது. ஆவியானவரின் நடத்துதல் படி எழுதப்பட்டுள்ளவைகள் அவருடைய ஆவியானவரை கொண்டு மட்டுமே அறிய இயலும். இயேசுவை உயர்த்திக்காட்டுவதும், அவரின் செய்தியை உணர்த்திக்காட்டுவதுமே ஆவியின் வேலையாகும். 

எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணாதிருப்போமாக.

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். யோவான் 14:26.

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். யோவான் 16:13,14.

நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். 

வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 2தீமோ3:14-17

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்