CCM Tamil Bible Study - பொல்லாங்கன் தொடான் - Evil will not touch
- Get link
- X
- Other Apps
பொல்லாங்கன் தொடான்
1Jn5:18c. and the wicked one does not touch him. 1Jn2:13,14;3:12;Mt13:19;4:3;24:24;2Thes2:8;Lk11:23-26;Eph6:16;1Thes5:22;Jn3:20.
1யோவா5:18c. பொல்லாங்கன் தேவனால் பிறந்தவனை தொடான். 1யோவா2:13,14;3:12;மத்13:19;4:3;24:24;2தெச2:8;லூக்11:23-26;எபே6:16;1தெச5:22;யோவா3:20.
☆ பொல்லாங்கன் என்பது ஒரு நபரை குறிப்பதாயுள்ளதால் பொல்லாங்கானதை செய்கிறவனும், பொல்லாப்பு செய்கிற எவரையும் குறிக்கின்றதாயுள்ளது என்று கூறலாம். அவன் நன்மை செய்தும் துன்புறுத்துகிறவனாயும், தீமையையே தன் தொழிலாகக் கொண்டவனாயும், பிறரை அழிக்க துணிவு கொண்டவன் போன்ற காரியங்களை செய்கிறவனாயுமிருக்கிறான். பிறர் பாதிக்கப்படும்படியாய் செயல்படுகிறவர்கள் யாவருமே பொல்லாங்கர்களாகவே உள்ளனர். பொல்லாங்கனால் உண்டானவர்கள் சகோதரர்களை பகைப்பவர்களாயிருப்பர். பிசாசும் பொல்லாங்கனாகவே கருதப்படுகின்றான். அனேக தீமைகளும் பிசாசினால் தூண்டப்பட்டே நடந்தேறுகின்றது. இப்படிப்பட்ட தீமைகளினால் தேவனால் பிறந்தவன் பாதிக்கப்படுவதில்லை என்று யோவான் கூறுகின்றார். சுவிசேஷத்தினிமித்தமோ, வசனத்தினிமித்தமோ, விசுவாசத்தினிமித்தமோ, கிறிஸ்துவினிமித்தமோ, கிறிஸ்தவனாயிருப்பதினிமித்தமோ தொடப்படுவதைப்பற்றி யோவான் இங்கு எழுதவில்லை. உபத்திரவங்களை யோவானும் தாராளமாக அனுபவித்துள்ளார். பிசாசினாலும், பிசாசுக்குரியவர்களினாலும், விபத்துகளினாலும், இயற்கை அழிவுகளினாலும் , தீராத வியாதிகளினாலும் தேவனால் பிறந்தவன் தொடப்படுவதில்லை என்று கூறுகின்றார். அப்படியே தொடப்பட்டாலும் அவைகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். ஏனெனில் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து இவர்களுக்குள் வாழ்கிறார்.
☆ எதிராளியாகிய பிசாசானவன் ஏதாவது ஒரு முறையில் தன்னை தொடக்கூடாதபடிக்கு காத்துக்கொள்ள தவறியதினால் தான் பொல்லாங்கனால் அழிவுக்குள்ளாக்கப்படுகின்றான். விபத்துகளினால் இழக்கப்படுகின்ற தேவ மனிதர்கள் தங்களை பொல்லாங்கன் தொடக்கூடாதபடிக்கு காத்துக்கொள்ள தவறியதின் விளைவேயாகும்.
☆ இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை மையமாக வைத்துக்கொண்டு இவ்வசனம் தேவனால் பிறந்தவனின் ஆத்துமாவை பொல்லாங்கன் தொடான் என்று கூறி ஆத்துமா நரகத்திலே கொண்டுப்போகபடாது என்று கூறுகின்றார்கள். ஒருபுறம் இது உண்மையாயிருக்கலாம். அப்படியானால் கிறிஸ்துவினிமித்தம் படுகிற உபத்திரவங்களினால் இழந்து போகிறவர்களை அடையாளம் கண்டுக்கொள்ள இயலாமற் போய்விடும்.
☆ ஒருவருடைய மரணத்தினால் தேவ நாமம் மைகிமைபடுமானால் - ஆத்தமாக்கள் இரட்சிக்கப்படும்படியாய் சாட்சி உண்டாகுமானால் அதுவே தேவனுக்கு பிரியமானதாகும். தேவனுடைய நாமம் அவகீர்த்தியடையும்படியாக வியாதிகளினாலும் , விபத்துகளினாலும் இழந்துபோவது நிச்சயமாகவே பொல்லாங்கனின் தொடுதலின் விளைவேயாகும். இந்த பொல்லாங்கன் நம்மை தொடாதபடிக்கு ஞானமாய் நடந்துக்கொள்ள வேண்டும்.
☆ பாவம் எந்த அளவுக்கு நம்மை தொடாதபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேபோல பொல்லாங்கனும் நம்மை தொடக்கூடாதபடிக்கு கவனமாய் வாழ வேண்டும்.
அக்கிரமத்தοன் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும் இரட்சிக்கப்படத்தக்கதாக சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். 2தெசலோனிக்கேயர். 2:7-12
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment