CCM Tamil Bible Study - புத்தி தந்த இயேசு - Jesus who gave wisdom
- Get link
- X
- Other Apps
புத்தி தந்த இயேசு
1Jn5:20a. And we know that the Son of God has come and has given us an understanding, Mt13:11;Lk21:15;24:45;Jn17:3,14,25;1Cor1:30,31;2Cor4:6;Eph1:17-19;3:18;Col2:2,3.
1யோவா5:20a. தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியை தந்திருக்கிறார். மத்13:11;லூக்21:15;24:45;யோவா17:3,14,25;1கொரி1:30,31;2கொரி4:6;எபே1:17-19;3:18;கொலோ2:2,3.
☆ புரிந்துக்கொள்ளும் ஆற்றல், நல்லது கெட்டது என்று அறியும் ஆற்றல் ஆகிய பொருளை தருகின்றது புத்தி என்றச் சொல். ஞானம், புத்தி, அறிவு ஆகியவைகள் கர்த்தருடைய வசனங்களோடும், கிறிஸ்துவோடும், பரிசுத்த ஆவியோடும் இணைந்து தனி ஜெபம் செய்கின்றவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற உன்னத அனுபவமாகும். ஒருவரும் எதிர்த்து பேசவியலாத வாக்கையும், ஞானத்தையும் கிறிஸ்துவின் சீஷர்கள் பெற்றுக்கொண்டார்கள். பேசவேண்டியதை பேசும் ஆற்றலையும் பெற்றிருந்தார்கள். இவைகள் யாவும் பிறருக்கு சாட்சி பகரவும், கிறிஸ்துவை பிரசங்கிக்கவும் தேவன் தந்துள்ளவைகளாயுள்ளது. அதே வேளையில் புத்தியாய் வாழ்வதற்குரிய புத்தியை தேவகுமாரன் தந்துள்ளார் என்பதை நாமறிய வேண்டும்.
☆ அவர் வாசம் பண்ணும் ஆலயமாகிய சரீரத்தை பழுதடையாமல் பாதுகாத்துக் கொள்வதற்கும், மனசாட்சியில் சூதுவாதுகள் போன்ற தாறுமாறுகளின் ஆவிகள் வெறுப்புகள் கசப்புகள் வைராக்கியங்கள் இல்லாமல் வெள்ளிந்திரியமாக வெளிப்படையாக வாழ்வதற்கும், சாத்தானின் ஆளுகைக்குள் அடிமைபட்டுக் கிடக்கும் இவ்வுலகத்தில் சாத்தானின் தந்திரங்களிலிருந்து தப்பி பிழைத்து தேவனுக்குரியவராய் காணப்படுவதற்கும், இவ்வுலகில் தேவன் செய்யும் காரியங்களை அறியக்கூடிய ஞானகண்கள் உடையவர்களாயிருப்பதற்கும் இந்த புத்தி அவசியமாயுள்ளது.
☆ மற்றவர்களுக்கு பிரசங்கிக்கிற நாமே சரீரத்திலும், ஆத்துமாவிலும் ஆகாதவர்களாய் போகாதபடிக்கு இந்த புத்தியை தந்திருக்கின்றார். வரங்களை பெற்றுக்கொண்ட நாம், வசதிகளை பெருக்கிக் கொண்ட நாம் நீண்டநாள்கள் வாழ்ந்திருந்து தேவனுடைய மகத்தான கிரியைகளுக்கு உயிருள்ள சாட்சிகளாக வாழ்வதற்கு வழிதெரியாமல் பாதி வயதிலே தேவனால் தரப்பட்டுள்ள திருப்பணிகளை கூட செய்து முடிக்காமல் தேவனுடைய இராஜ்யத்துக்கு போகிறேன் என்று சொல்லிச் செல்வதற்காகவா அவர் நமக்கு புத்தியை தந்துள்ளார்?.
தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான். 1சாமுவேல் 18:5
நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். நீதிமொழிகள் 2:11
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். நீதி 3:13
சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள். 1கொரிந்தியர் 4:20
நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார். 2தீமோத்தேயு 2:6
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment