Posts

Showing posts from March, 2021

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - சிலுவை கூறும் செய்தி 3 - The message of the Cross 3

 சிலுவை கூறும் செய்தி - 3 சாபமான கிறிஸ்து கலா3:13. கிறிஸ்து நமக்காக சாபமாகி.. நம்மை மீட்டுக்கொண்டார். உபா21:23;2சாமு17:23;18:10,141,5;21:3-14;எஸ்த7:10;9:14;மத்27:5;1பேது2:24;ரோம9:3.  இயேசு நமக்காக சாபமானார்  கிறிஸ்து நமக்காக சாபமானனார் என்று பவுல் கலாத்திய சபைக்கு கூறுகின்றார். சாபம் என்றால் முழுமையான வெறுப்புக்குள்ளாகுதல், பழி சுமத்தல், சாபவார்த்தைகளை தன்மேல் சுமத்தல். தெய்வ நிந்தனை, தேய்வ பழிக்கு ஆளாகுதல் ஆகும். இயேசு தெய்வ குற்றம் செய்தவராகவும், தெய்வ நிந்தனைக்குரியவராகவும், வெறுப்புக்குரியவராகவும் மாறினார்.  தேவனிடத்தில் ஆசீர்வாதம் மட்டுமே உண்டு. ஆகையினால்தான் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று அழைக்கப்படுகின்றார். ஆசீர்வாதத்தை தன்னகத்தே கொண்டிருப்பதால் அவரிடமிருந்து புறப்பட்டு வந்த இயேசு கிறிஸ்துவும் ஆசீர்வாத கிறிஸ்துவாகவே வெளிப்பட்டார். அதே வேளையில் ஆசீர்வாதத்திற்குரிய வழிமுறைகளில் நடவாதிருக்கும்போது சபிக்கவும் செய்துள்ளார். ஆசீர்வாதமானது தன்மையாகவும் வாக்காகவும் வெளிப்பட, சாபமோ வாக்காக மட்டுமே இருக்கிறது. தேவனுடைய ஆசீர்வாதத்திற்குரிய வாக்குகளுக்கு கீழ்படியாமல் ச...

CCM Tamil Bible Study - சிலுவை கூறும் செய்தி 2 - The message of the Cross 2

 இயேசுவின் சிலுவை கூறும் செய்தி - 2 இயேசு பாவமாக்கப்பட்டார் 2கொரி5:21. பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார். ஏசா53:4-6,9- 12;சக13:7;ரோம8:3;எபே5:2;1பேது3:18;1யோவா2:1,2;1தீமோ1:15;எபி12:3;1பேது2:24;யோவா1:29. பாவமாக்கப்பட்ட இயேசு தேவன் பரிசுத்தமுள்ளவர். தேவகுமாரனும் பரிசுத்தமுள்ளவர். தேவ ஆவியும் பரிசுத்தமுள்ளவர். ஆகையினால் பரிசுத்த ஆவி எனப்படுகிறார். தேவகுமாரனிடத்தில் பாவமில்லை என்று விவிலியம் கூறுகின்றது. ஏனெனில் அவர் தேவனிடத்தில் இருந்தவர், தேவனிடமிருந்து வந்தவர், தேவனாலே பிறந்தவர். இந்த தேவகுமாரனாகிய கிறிஸ்து பாவியாகவும், பாவ மனுஷனாகவும், குற்றவாளியாகவும், தண்டனைக்குரியவராகவும் ஆக்கப்பட்டார் என்றும் விவிலியம் கூறுகின்றது.  பாவம் என்றால் அழுக்கானது – அசுத்தமானது என்று பொருள். தூய்மைக்கு எதிரானது ஆகும். இயேசு கிறிஸ்து அழுக்காகக்கப்பட்டார், அசுத்தமாக்கப்பட்டார். வெண்மையானவர் வெண்மையிழந்தார். பாவம் என்பது இருளானது. ஒளியில்லாதது. இயேசு கிறிஸ்து வெளிச்சமாயிருந்தும் பாவத்தை சுமந்ததினால் இருளாக்கப்பட்டார். ஒளி இழந்தவராய் காணப்பட்டார்.  பாவம் என்பது தேவனை விட்டு விலகிச் செல்வது...

CCM Tamil Bible Study - சிலுவை கூறும் செய்தி 1 - The message of the Cross 1

  இயேசுவின் சிலுவை கூறும் செய்தி – 1 நம்நிமித்தம் அவர் பலவீனப்பட்டார்  2கொரிந்தியர் 13:4. அவர் பலவீனத்தினால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும்… பிழித்திருக்கிறார். லூக்22:43,44;1கொரி15:42-44;எபி5:7;1பேது3:18;மத்8:17;2கொரி12:5-10.  இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்திருந்தாலும் பாவமில்லாதவராயிருந்ததினால் மாம்சத்திலும் பலமுள்ளவராயிருந்தார். ஆவியிலும் பலமுள்ளவராயிருந்தார். ஆத்துமாவிலும் பலமுள்ளவராயிருந்தார். ஆகையினால்தான் திடனற்றவர்களை தேற்றும்படியான வார்த்தைகளை கொடுத்தார். இயலாத நிலையிலிருந்தவர்களுக்கு அற்புதங்கள் செய்தார். அதிகாரத்திலிருந்தவர்கள் முன்பாக மண்டியிட்டும், அவர்களுக்கு ஒத்துப்போயும் இருக்கவில்லை. முடிவாக பாவத்தினால் நலிந்துபோன மனிதர்களுக்காக சிலுவையை ஏற்றுக்கொள்வதிலும் தயக்கம் காட்டவில்லை. இவ்விதம் பலத்தின்மேல் பலமுடையவராயிருந்த இயேசு பலவீனமாய் சிலுவையில் அறையப்பட்டார் என்று பவுல் கூறுகின்றார். இதற்குரிய காரணம் என்ன? நம்முடைய பலவீனங்களை சுமந்துக்கொள்ளும்படி பலவீனரானார். மத் 8:17. நம்முடைய வியாதிகளை, துக்கங்களை சுமந்து கொண்டதினிமித்தம் அவர் பலவீனரானார். ஏசா53:4. இதனா...

CCM Tamil Bible Study - சமாதானமாக இருப்பது எப்படி? - How to be peace?

(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்)   இயேசுவின் மரணத்தினால் சமாதானம் கிடைத்தது ஏசாயா 53:5.   சமாதானம் சமாதானம் என்றால் முழுமை சார்ந்தது, நல்லது சார்ந்தது, நலம் சார்ந்தது, அமைதி சார்ந்தது, செழிப்பு சார்ந்தது ஆகும்.  இந்த சமாதானம் ஆதியில்தேவனோடு – படைத்தவரோடு இருந்தபோது இருந்தது. ஆதி 3:8. பாவத்தினால் பகைமை, வெறுப்பு, வருத்தம், வியர்வை, வலி, வறட்சி, பலவீனம், குறைவுகள் போன்றவைகள் உண்டானது. ஆதி 3.  இதனால் நாம் தேவனுக்கு பகையாளியானோம். நாம் இடிக்கப்பட்ட நிலைக்கு ஆளானோம். அதன்பின்பு… தேவன் ஆபிரகாமை சந்தித்து உடன்படிக்கை செய்தார். வாக்குதத்தங்களை கொடுத்தார்..உறுதிமொழிகளைக் கொடுத்தார்..அமைதி வாழ்வை ஏற்படுத்தினார்…தேவ சமதானம் பெற்ற ஆபிரகாம் கட்டியெழுப்பபட்டார்.  இஸ்ராயேல் சபையாக எழும்பியபோது இஸ்ராயேலரின் சபையில் இந்த சமாதானம் வாழ்த்துதலாக – ஆசீர்வாதமாக வழங்கப்பட்டது.  எண்னாகமம் 6;22-27. இந்த சமாதானத்தை நிரந்தரமாக தம்முடைய ஜனங்களுக்கு கொடுக்கும்படியாக தீர்க்கதரிசிகளை ஏற்படுத்தி நிரந்தர சமாதானம் தருகிற ஒருவார் வருவார் என்று கூற வைத்தார்.  அவர் சமாதான பிரபு எனப்பட்ட...

CCM Tamil Bible Study - அந்திகிறிஸ்து - Antichrist

அந்திகிறிஸ்து 1Jn2:18b. Antichrist is coming, even now many antichrists have come, 1Jn4:3;2:22;2Jn1:7;Mt24:5;Mk13:6;Act20:29,30;2Thes2:3-12;1Tim4:1-3;2Tim3:1-6;4:3,4;2Pet2:1.  1யோவா2:18b. அந்திகிறிஸ்து வருகிறானென்று கேள்விபட்டப்படி அநேக அந்திகிறிஸ்துக்கள் உள்ளார்கள். 1யோவா4:3;2:22;2யோவா1:7;மத்24:5;மாற்13:6;அப்20:29,30;2தெச2:3-12;1தீமோ4:1-3;2தீமோ3:1-6;4:3,4;2பேது2:1.  அந்திகிறிஸ்து அந்திகிறிஸ்து என்பதற்கு கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல் இருவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்று கிறிஸ்துவுக்கு பதிலாக வெளிப்படுகிறவன். அதாவது தன்னை கிறிஸ்துவாக காண்பிக்கிறவன் என்று பொருள். இதனை கள்ள கிறிஸ்து என்றும் கூறலாம். இன்னொன்று கிறிஸ்துவுக்கு எதிராக எழும்புகிறவன், கிறிஸ்துவை எதிர்க்கிறவன் என்று பொருளாகும். அதாவது கிறிஸ்துவை எதிர்ப்பதினிமித்தமாய், கிறிஸ்துவை வெறுப்பதினிமித்தமாய், கிறிஸ்துவை அழிக்க வேண்டும் என்று நினைப்பதினிமித்தமாய் கிறிஸ்துவின் சபையையும், சபையின் அங்கங்ககளையு,ம் ஊழியர்களையும் கிறிஸ்தவ நிறுவனங்களையும், கிறிஸ்துவ பெயர்களையும் அழிக்க நினைக...

CCM Tamil Bible Study - கடைசி காலம் - The last period

கடைசி காலம் 1Jn2:18a. Little children, it is the last hour; and as you have heard that 2Tim3:1;Heb1:2;1Pet1:5,20;2Pet3:3;Jud1:18;Isa2:2;Mic4:1;Jn6:39,40;Act2:17. 1யோவா2:18a. பிள்ளைகளே  இது கடைசி காலமாயிருக்கிறதே. 2தீமோ3:1;எபி1:2;1பேது1:5,20;2பேது3:3;யூதா1:18;ஏசா2:2;மீகா4:1;யோவா6:39,40;அப்2:17. கடைசி காலம் விவிலியமானது துவக்கத்தையும் இறுதியையும் விபரித்து கூறுகின்றது. உலகத்தின் துவக்கத்தையும் முடிவையும், மனிதனின் துவக்கத்தையும் முடிவையும் கூறுகின்றது. தேவன் துவக்கமும் முடிவுமாயிருக்கின்றார் என்பது விவிலிய போதனை. எனவே அவரின் துவக்கம் முடிவு குறித்து அறிய அவருக்குள்ளே நாம் நிறைவடைய வேண்டும். ஆதி மனிதன் அவரில் துவக்கம் பெற்று அவரில் முடிவடைவதற்காகவே உண்டாக்கப்பட்டான். அவரில் துவக்கம் பெற்ற ஆதி மனிதன் அவரில் தன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு பதிலாக பாவத்தில் தன் வாழ்வை முடித்துக்கொண்டான். ஆதி மனிதன் பாவத்திலே தன் வாழ்வை முடித்துக் கொண்டதினால் ஆதி மனிதனுக்கு பின்புள்ள சந்ததிகள் யாவும் பாவத்திலே துவக்கம் பெற்றார்கள். ஆகையினால் தான் என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள் என்று விவிலிய...

CCM Tamil Bible Study - தேவ சித்தம் செய்தல் - Doing the will of God

தேவ சித்தபடி செய்கிறவன் என்றும் நிலைத்திருப்பான் 1Jn2:17b. but he who does the will of God abides forever. Ps143:10;Mt7:21;21:23;Mk3:35;Jn7:17;Rom12:2;Col4:12;1Thes4:3;5:18;Heb10:36;1Pet4:2.  12:17b. தேவ சித்தபடி செய்கிறவன் என்றும் நிலைத்திருப்பான் சங்143:10;மத்7:21;21:23;மாற்3:35;யோவா7:17;ரோம12:2;கொலோ4:12;1தெச4:3;5:18;எபி10:36;1பேது4:2.  தேவ சித்தம் செய்தல் சித்தம் என்பதற்கு ஒருவர் எதை விரும்புகிறாரோ அல்லது தீர்மானித்திருக்கிறாரோ அதன்படி செய்தல் ஆகும். தேவனுடைய சித்தத்தின்படி செய்தவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்துள்ளார்கள். தீர்க்கதரிசிகள் தேவனுடைய இருதயத்தை திறந்து காண்பிக்கிறவர்களாகவும், அவரின் விருப்பத்தை செய்யும்படியாக தங்களை முற்றிலுமாய் ஒப்படைத்தவர்களாகவும் காணப்பட்டனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுதல் என்பதை தனது சொந்த தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக கருதி அதன்படியாகவே நடந்துக் கொண்டார். இயேசு கிறிஸ்துவை பின்பற்றி வந்த அவருடைய சீஷர்களும் தேவ சித்ததை அறியும்படியாக பரிசுத்த ஆவியை பெற்று அவர் வழிகாட்டுகிறபடியாக நடந்துக்கொண்டனர். பரிசுத்த ஆவிய...

CCM Tamil Bible Study - உலகமும் அதன் இச்சையும் - The world and its lusts

உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துப்போகும் 1Jn2:17a. And the world is passing away, and the lust of it.Mt24:35;1Cor7:31;1:10,11;4:14;1Pet1:24;Ps39:6;73:18-20;90:9;102:6;Isa40:6-8. 1யோவா2:17a. உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துப்போகும். மத்24:35;1கொரி7:31;1:10,11;4:14;1பேது1:24;சங்39:6;73:18-20;90:9;102:6;ஏசா40:6-8. ஒழிந்துபோகும்... வானமும் பூமியும் ஒழிந்துப்போகும் என்பது இயேசுகிறிஸ்துவின் போதனையாகும். அப்படியென்றால் வானத்தில் காணப்படுகிறவைகள் யாவும், பூமியில் காணப்படுகிறவைகள் யாவும் ஒழிந்துபோகும் என்பதாகும். இயேசு கிறிஸ்து இயற்கையின் மாற்றத்தையோ, அல்லது சுழற்சிமுறை மாற்றத்தை குறித்தோ குறிப்பிடாமல் அவைகள் முற்றிலும் அழிந்து போகும் என்றே கூறினார்.  யோவான் ஆக்கியோன் குறிப்பிடும்போது உலகம் ஒழிந்துபோகும் என்கிறார். இயேசு சொல்லியதையே மறுபடியும் குறிப்பிடுகின்றார். அதோடு உலகத்தின் இச்சையும் ஒழிந்துபோகும் என்றும் குறிப்பிடுகின்றார். உலகமும் அதன் பொருட்களும் பாவத்தினிமித்தம் சாத்தானின் ஆளுகைக்குள் வந்துவிட்டது. தேவனுடைய மகிமையை வெளிபடுத்த வேண்டிய உலகமும் அதன் பொருட்களும் தேவனிடமிருந்து மனிதர்களை ...

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்) இயேசுவே ஆறுதல்தரும் கிறிஸ்துவாக வருகிறார் நாம் கட்டியெழுப்பப்படும்படியாக  இயேசுவே ஆறுதல்தரும் கிறிஸ்துவாக வருகிறார் இயேசுவின் மரணத்தின் மூலமாக ஆறுதல். நம் இருதயம் ஸ்திரப்பட ஆறுதல் நமக்கு அவசியமாகும்.  ஏசாயா 40:1,2 ல் - என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்.  இயேசு கிறிஸ்து நமக்கு எப்படி ஆறுதலைக் கொண்டு வருகிறார்? 1. இயேசு கிறிஸ்து தன்னை பலியிட்டு அவரின் ஆறுதலை தருகிறார் யோவான் 12:24,25 - மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.  ஒரு விதையானது பலன் தர வேண்டு...

CCM Tamil Bible Study - உலகில் அன்புகூராதிருங்கள் - Do not love the world

உலகில் அன்புகூராதிருங்கள் 1Jn2:15. Do not love the world or the things in the world. If anyone loves the world, the love of the Father is not in him. 1Jn4:5;5:4,5,10;Mt6:24;Lk16:13;Jn15:19;Rom12:2;Gal1:10;Eph2:2;Col3:1,2;1Tim6:10;Jas4:4. 1யோவா2:15. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். 1யோவா4:5;5:4,5,10;மத்6:24;லூக்16:13;யோவா15:19;ரோம12:2;கலா1:10;எபே2:2;கொலோ3:1,2;1தீமோ6:10;யாக்4:4.  உலகில் அன்புகூராதிருங்கள் பலவிதமான நெருக்கடிகளையும், உபத்திரவங்களையும் அனுபவித்த யோவான் அப்போஸ்தலர் தன் வாழ்க்கையில் அனுபவித்து இவ்வாறு எழுதுகின்றார். கர்த்தருடைய வாக்கியங்களை கைக்கொண்டு தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டவன் மாம்சத்தில் பகையாளியாக அல்ல, மனதளவில், ஆவியில் பகையாளியாக காணப்பட வேண்டும். அதாவது, பிசாசு, உலகம், மாம்சம் ஆகிய மூன்றையும் வெறுக்கிறவனாக தேவனையும் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவையும் மட்டுமே சிநேகிக்கிறவனாகவும் இருக்க வேண்டும் என்று எழுதுகிறார்.  ஆவிக்குரிய மனிதர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் உலகத்தையும், மாம்சத்தையும் அடையாளம் கண்டுகொள்ளாததுவேயாகும். பாவத்தையும...

CCM Tamil Bible Study - ரூத், நகோமியின் குடும்பம் - Ruth and Naomi's family

(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்) ரூத்தின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட நகோமியின் குடும்பம் ரூத் 4:11 – 17. ★ ரூத் என்றால் சிநேகிதி என்று பொருள்.  ★ மனைவியும் ஒரு சிநேகிதி. – துணைவி.  ★ புருஷனுக்கு துணையாள்.. ★ வீட்டுக்கு – மனைக்கு மனையாள்… நகோமியின் குடும்பம் கட்டப்பட ரூத் என்ன விலைகொடுத்தாள்? நகோமி வீட்டுக்கு வந்த மருமகளாகிய ரூத் எப்படிப்பட்ட பெண்ணாயிருந்தாள்? 1. மாமியார் குடும்பத்துக்கு தயை செய்கிறவளாயிருந்தாள் 1:8 – மரித்து போனவர்களுக்கும் எனக்கும் தயை செய்ததுபோல… தயை என்றால் கிரேஸ் என்று பொருள்… பட்சதாபம், அனுசரணையாக நடந்துக் கொள்ளுதல், பலன் எதிர்பாராமல் நன்மை செய்தல் ஆகும்.  பரிதாபப்பட்டு அல்ல, மன உற்சாகமாய் தயை செய்தாள்… இவள் மாமியாருக்கு செய்த தயை திரும்ப இவளுக்கு கிடைத்தது.  2:10 - நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது. 2. மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டாள்  1:14 – ரூத்தோ விடாமல் அவளைப் பற்றிக்கொண்டாள். கெட்டியாய் பிடித்துக்கொண்டாள். மாமியோடு நெருக்கமாய் நடந்துக் கொண்டாள். மாமியோடு இணக்கமாய்...

CCM Tamil Bible Study - ஜெயிக்க வேண்டிய நிலை - Condition to be overcome

ஜெயிக்க வேண்டிய நிலை 1Jn2:13b. yound men because you have overcome the wicked one. 1Jn2:14;Tit2:6-8;1Jn4:4;5:4,5;3:125:18;Mt13:19,38;Eph6:10-12;1Pet5:8,9;Ps148:12;Pr20:29;Joe2:28. 1யோவா2:13b. வாலிபரே நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினால் எழுதுகிறேன். 1யோவா2:14;தீத்2:6-8;1யோவா4:4;5:4,5;3:125:18;மத்13:19,38;எபே6:10-12;1பேது5:8,9;சங்148:12;நீதி20:29;யோவே2:28.  ஜெயிக்கவேண்டிய நிலை யோவான் இந்த வசனத்திலும் இதற்கு பின்வரும் வசனத்திலும் தமது வாசகர்களை மூன்று பகுதியாக பிரித்து பொருள் கொள்கின்றார். பிதாக்கள் ஆவிக்குரிய முதிர்ச்சியுடையவர்கள் என்றும் வாலிபர்கள் ஆவிக்குரிய வாழ்வுக்கான எதிர்விளைவுகளை எதிர்த்து போரிடுகிறவர்கள் என்றும் , பிள்ளைகள் மீட்கப்பட்ட அறிமுக நிலையிலே இருப்பவர்கள் என்றும் பகுத்து கூறுகின்றார். இக்கால சபையிலும் இப்படிபட்ட ஸ்திதி உடையவர்களாக விசுவாசிகள் காணப்பட வேண்டும்.  வாலிபர்கள் பொல்லாங்கனாகிய சாத்தானை ஜெயித்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் என்னவெனில் அவர்கள் பலவான்களாகவும், தேவ வசனத்தை தங்களுக்குள் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். தேவனோடு நல்ல தொடர்புடையவர்களாகவும், வ...

CCM Tamil Bible Study - ஆதி முதல் இருக்கிறவர் - Who is from the beginning

பிதாக்களே ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிரீர்கள் 1Jn2:13a. I write to you, fathers, Because you have known Him who is from the beginning. 1Jn2:14;2Tim5:1;Jn2:3,4;Lk10:22;Jn8:19;14:7;17:3;Ps91:14. 1யோவா2:13a. பிதாக்களே ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிரீர்கள். 1யோவா2:14;2தீமோ5:1;யோவா2:3,4;லூக்10:22;யோவா8:19;14:7;17:3;சங்91:14.  பிதாக்களே… இங்கே பிதாக்கள் எனப்படுவோர் வயது முதிர்ந்தோர் என்றும், முந்தி கிறிஸ்துவுக்குள்ளானவர்கள் என்றும், ஆதிமுதலே தேவனுடைய கட்டளைகளை கைக்கொண்டு அவருக்கு கீழ்படிந்து, அவரை நேசித்து, அவருக்குரியவர்களாய் வாழ்ந்தவர்கள் என்றும் அறியலாம். சுவிசேஷம் அவர்களிடத்தில் வந்தபோது அதை தேவ வார்த்தையாக ஏற்றுக்கொண்டு இயேசு கிறிஸ்துவை ஆதியிலிருக்கிறவராக நம்பி விசுவாசித்து அப்படியே அறிக்கை செய்தவர்கள்.  கர்த்தராகிய இயேசு தம்மை பிதாவோடு ஒப்பிட்டு பேசியதை கேட்டவர்களாக மாத்திரமல்ல, கேட்டு விசுவாசிக்கிறவர்களாக காணப்பட்டனர். நிருபத்தை எழுதிய ஆக்கியோனைப்போல இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்தவர்கள். இயேசுவை அறிவதே நித்திய வாழ்வாகும். இயேசுவை அ...

CCM Tamil Bible Study - பாவ மன்னிப்பு - Forgiveness of sins

அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளது 1Jn2:12. I write to you, little children, Because your sins are forgiven you for His name’s sake. 1Jn1:7,9;Lk5:20;7:47-50;24:47;Act4:12;10:43;13:38;Rom4:6-8;Eph1:7;Col1:14. 1யோவா2:12. பிள்ளைகளே அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளது. 1யோவா1:7,9;லூக்5:20;7:47-50;24:47;அப்4:12;10:43;13:38;ரோம4:6-8;எபே1:7;கொலோ1:14.  பாவ மன்னிப்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பாவமன்னிப்பாகிய மீட்பு அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு கிடைக்கிறது. இந்த செய்தி சுவிசேஷங்களிலும், அப்போஸ்தலர் நடபடிகளிலும், நிருபங்களிலும் காணப்படுகின்றது. இது பாரம்பரிய செய்தியாகும். இதனையே யோவான் அப்போஸ்தலரும் இங்கு குறிப்பிடுகின்றார். மீட்கப்பட்டவர்களை பிள்ளைகள் என்று அழைக்கின்றார். வயது முதிர்ந்த நிலையில் இவ்வாறு அழைக்கின்றார். அதாவது இயேசுவின் நாமத்தினால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்.  பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளது என்பதை யோவான் நினைப்பூட்டக் காரணம் என்ன ? முதலாவது, பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் இய...

CCM Tamil Bible Study - இடறல் இல்லாத வாழ்வு - Life without risk

சகோதர அன்புள்ளவன் ஒளியில் நிலைகொண்டிருக்கிறான். அவனில் இடறல் இல்லை 1Jn2:10. He who loves his brother abides in light,there is no cause for stumbling in him. 1Jn3:14;Jn8:31;Rom14:13;2Pet1:10;Hos6:3;Mt13:21;18:7;Lk17:1,2;Rom9:32,33.  1யோவா2:10. சகோதர அன்புள்ளவன் ஒளியில் நிலைகொண்டிருக்கிறான். அவனில் இடறல் இல்லை. 1யோவா3:14;யோவா8:31;ரோம14:13;2பேது1:10;ஓசி6:3;மத்13:21;18:7;லூக்17:1,2;ரோம9:32,33.  இடறல் இல்லாத வாழ்வு      இடறல் என்பதற்கான மூலச்சொல் ஒருவர் நடந்து செல்லும் பாதையில் குச்சியோ, கற்களோ, பள்ளமோ ஏற்படுத்தி தடை செய்தலாகும். இச்சொல் இவ்விடத்தில் இரு பொருளை தருகின்றது. இவன் ஒருவருக்கும் இடறலாக இருக்கமாட்டான், இவனை ஒருவரும் இடறிவிழ செய்ய இயலாது என்பதாகும்.       கற்பனைகளை கைக்கொண்டு தேவனிடத்தில் அன்புகூருகிறவன் ஒருவரிலொருவர் அன்புகூருகிறவனாகவும், தன் சொந்த சகோரனிடத்தில் அன்புகூருகிறவனாகவும் இருக்கிறான். இப்படிபட்டவன் இருளைவிட்டு நீங்கி ஒளியில் நிலைகொண்டிருக்கிறான். இவனில் இடறலும் இல்லை. இவனும் இடறலாக இருப்பதில்லை.      ஒளியில் ...

CCM Tamil Bible Study - நாங்கள் சோர்ந்து போவதில்லை - We never get tired

(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்) நாங்கள் சோர்ந்து போவதில்லை 2கொரிந்தியர் 4:16. ★ நாம் தேவனால் கட்டியெழுப்பப்பட சோர்ந்து போகாமலிருக்க வேண்டும்.  லூக்கா 18:1 – சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும். ரோமர் 2:7 – சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். கலாத்தியர் 6:9 – நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். எபேசியர் 3:13 – உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன். எபிரேயர் 12:3-5 - நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே. அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. ★ சோர்ந்துபோகுதல் இடிக்...

CCM Tamil Bible Study - பிரகாசிக்கும் ஓளி - Shining light -

இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது 1Jn2:8b. darkness is passing away, and the true light is already shining. Mt4:14-16;Lk1:78,79;Jn12:46;Act17:30;26:17,18;Ro13:12;2Cor4:4-6;Eph5:8;1Thes2:5-8;Isa9:2.  1யோவா2:8b. இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது. மத்4:14-16;லூக்1:78,79;யோவா12:46;அப்17:30;26:17,18;ரோம13:12;2கொரி4:4-6;எபே5:8;1தெச2:5-8;ஏசா9:2.  பிரகாசிக்கும் ஓளி      அஞ்ஞான இருள் நீங்கிபோவதினால் மெய்யான ஒளி பிரகாசிக்கிறது. கற்பனைகளுக்கு கீழ்படிதல் இருளை விலக்கும் ஒன்று. அன்புகூருதல் மெய்யான ஒளியாகும். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுதல் இருளை விலக்குதல் ஆகும். இரட்சிக்கப்பட்டு பாவம் போக கழுவப்படுதல் மெய்யான ஒளியின் பிரகாசம் ஆகும்.  இருள் இரு காரியங்களை செய்தது. ஒன்று கீழ்படியாமைக்குள் மனுகுலத்தை வைத்திருந்தது. இன்னொன்று பொய்யான ஒளியை கொடுத்து கொண்டிருந்தது. முந்தினது தன்னிஷ்டம்போல் நடக்க தூண்டுகிறதாயிருந்தது. பிந்தியது அறியாமைக்குள் வைத்திருந்தது. இதனை மனம் குருடாகிப்போன நிலை என்று கூறலாம்.      இய...

CCM Tamil Bible Study - இயேசுவைப் போல் நட - Walk like Jesus

இயேசுவைப் போல் நட 1Jn2:6b. He who says he abides in Him ought himself also to walk just as He walked. 1Jn1:7;Mt11:29;Jn13:15;1Cor11:1;Eph5:1,2;3:16,17;1Pet2:21;Ps85:13. 1யோவா2:6b. அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும். 1யோவா1:7;மத்11:29;யோவா13:15;1கொரி11:1;எபே5:1,2;3:16,17;1பேது2:21;சங்85:13.       இயேசு கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன் இயேசு நடந்தபடியே நடக்க வேண்டும். இதன் பொருளை இருவிதங்களில் புரிந்துக் கொள்கிறார்கள். ஒன்று இயேசு செய்ததுபோல அற்புதங்கள் நடக்க வேண்டும் என்பதாகும். இன்னொன்று இயேசு பேசியதைப்போல பேச வேண்டும் என்பதாகும். இவ்விதம் செய்வதும் பேசுவதும் நல்லதுதான். ஆனால் இவைகளைவிட வேறு இரு காரியங்களையும் இப்பகுதி போதிக்கின்றது என்பதை மறவாதிருப்போமாக. ஒன்று Imitation. அதாவது இயேசுவை மறு பிரதியாக காண்பித்தல் ஆகும். தோற்றத்திலும், சாயலிலும் இயேசுவைப்போல காணப்படுவது ஆகும். கிறிஸ்து நாதர் அனுசாரம் என்ற நூலை படிக்கவும். இன்னொன்று இயேசுவை பின்பற்றுதல் ஆகும். இதனை பின்தொடர்தல் என்றும் கூறலாம். அவரது அடிச்சுவடுகளை ஒற்றி நடத்தல் ஆகும்.  ...

Stay with Jesus - CCM Tamil Bible Study - இயேசுவுக்குள் நிலைத்திரு

இயேசுவுக்குள் நிலைத்திரு 1Jn2:6a. He who says he abides in Him ought himself. 1Jn2:28;3:6,24;4:16;2Jn1:9;Jn15:4-6;Act14:22;Phil4:1;1Thes3:8;2Tim3:14. 1யோவா2:6a. அவருக்குள் நிலைத்திருக்கிரேன் என்று சொல்லுகிறவன். 1யோவா2:28;3:6,24;4:16;2யோவா1:9;யோவா15:4-6;அப்14:22;பிலி4:1;1தெச3:8;2தீமோ3:14.  அவருக்குள் நிலைத்திரு நிலைத்திரு என்பதற்கு பற்றிக்கொண்டிரு என்று பொருள். அதாவது அவரை விட்டு வெளியேறாதே, தாமதித்தாலும் விட்டு விலகாதே, ஒத்தாசை இல்லையெனினும் வெளியேறாதே என்று பொருளாகும். மீட்கப்பட்டவர்கள் மீட்டவரின் ஆளுகைக்குள், அன்புக்குள், கட்டளைக்குள், அதிகாரத்துக்குள் தரித்திருக்க வேண்டும். அவரின் சொல்லுக்கு கீழ்படிகிறவராயிருக்க வேண்டும். அவருக்குள் என்பதினால் அவரின் சரீரமாகிய சபைக்குள், அவரின் ஆவிக்குள் தரித்திருக்க வேண்டும். அவர் கொடுத்திருக்கின்ற பொறுப்புகளுக்குள் தரித்திருக்க வேண்டும். அவர் நம்மை வைத்துள்ள சபைக்குள் தரித்திருக்க வேண்டும். பிரசங்கிக்கப்படுகிற வசனத்திலும், கொடுக்கப்படுகிற ஆலோசனையிலும் நிலைத்திருக்க வேண்டும்.  தன்னை கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கிறவனாகவும், கிறிஸ்து தன்னில...

CCM Church Kallakurichi

Image
Cross Carrying Missions CCM Church, Emapper Phone: 04151-220291  E-mail: ccmchurch63@gmail.com