(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்)
நாங்கள் சோர்ந்து போவதில்லை
2கொரிந்தியர் 4:16.
★ நாம் தேவனால் கட்டியெழுப்பப்பட சோர்ந்து போகாமலிருக்க வேண்டும்.
லூக்கா 18:1 – சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்.
ரோமர் 2:7 – சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
கலாத்தியர் 6:9 – நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
எபேசியர் 3:13 – உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்.
எபிரேயர் 12:3-5 - நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே. அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
★ சோர்ந்துபோகுதல் இடிக்கப்படுதலுக்கும், பிடுங்கபடுதலுக்கும் வழி வகுக்கும், எனவே சோர்ந்துபோகாதிருப்போம்.
பவுல் தனது வாழ்வில் சோர்ந்து போகாமலிருக்க கொண்டிருந்தவைகள் என்ன?
1. வசனம் 8 – 12 ல்
8,9 - நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை என்பதாகும்.
ஏன் நாங்கள் இப்படி ஆவதில்லை?
★ வசனம் 10 - கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
★ சிலுவை சுமந்து பழகியவனுக்கு இந்த பாடுகள் பெரிய பாதிப்புகளை கொடுப்பதில்லை.
மேலும்…
வசனம் 7 - இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
★ வசனம் 11,12 ல் எங்களில் அவரின் ஜீவனை கொண்டிருக்கிறோம்.
இயேசுவின் ஜீவன் நம்மில் இருக்குமானால் ஒன்றும் நம்மை உடைக்காது…
உடைக்கப்பட உடைக்கப்பட நாம் உருவாக்கப்படுவோம்….
இன்று நாம் எத்தகைய சிந்தையாயிருக்கிறோம்?
2. வசனம் 13 – நான் விசுவாசத்தின் ஆவியை உடையவனாயிருக்கிறேன் என்று கூறுகிறார்
★ இந்த விசுவாசத்தின் ஆவி எபிரேயர் 11:1 க்குள் நம்மை நடத்தும்.
★ இந்த விசுவாசத்தின் ஆவியை கொண்டிருக்கிறவனிடம் மோதுகிறவர்கள் நொறுங்கிப்போவார்கள்.
1பேதுரு 2:6 ல் இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
3. வசனம் 14. மரணமோ, இழப்போ வந்தாலும் அவர் முன்னிலையில் நிற்பேன்
★ கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
★ ரோமர் 8:11 ல் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
4. வசனம் 16. இந்த பாடுகள் யாவும் எங்களை புதிதாக்குகிறது.
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது
★ இந்த பாடுகள் யாவும், எங்களில் இருந்த கசடுகள், வெறுப்புகள், கசப்புகள் யாவையும் நீக்குகிறது.
★ உபத்திரவம் வந்ததினால் நான் பிரமாணங்களை கற்றுக்கொள்கிறேன். சங்கீதம்119:67,71.
புது படைப்பாக மாறுகிறேன்..
5. வசனம் 17. இந்த போராட்டங்களெல்லாம் எங்களுக்கு லேசானவைகளாக தெரிகிறது..
காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது
★ ஏனெனில் நாம் பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுகிறேன்.. கொலோசேயர் 3:1.
இது எனக்கு நித்திய கனமகிமையை தரும்.
இது அற்பகால – கொஞ்சகால தேவ கோபத்தால் எனக்கு உண்டானது. ஏசாயா 54:8.
ஆகவே நான் சோர்ந்து போவதில்லை. நான் அவரால் கட்டியெழுப்படும் நாள் வரையிலும் பொறுத்திருப்பேன். ஆமென்.
Comments
Post a Comment