CCM Tamil Bible Study - அந்திகிறிஸ்து - Antichrist
- Get link
- X
- Other Apps
அந்திகிறிஸ்து
1Jn2:18b. Antichrist is coming, even now many antichrists have come, 1Jn4:3;2:22;2Jn1:7;Mt24:5;Mk13:6;Act20:29,30;2Thes2:3-12;1Tim4:1-3;2Tim3:1-6;4:3,4;2Pet2:1.
1யோவா2:18b. அந்திகிறிஸ்து வருகிறானென்று கேள்விபட்டப்படி அநேக அந்திகிறிஸ்துக்கள் உள்ளார்கள். 1யோவா4:3;2:22;2யோவா1:7;மத்24:5;மாற்13:6;அப்20:29,30;2தெச2:3-12;1தீமோ4:1-3;2தீமோ3:1-6;4:3,4;2பேது2:1.
அந்திகிறிஸ்து
அந்திகிறிஸ்து என்பதற்கு கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல் இருவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்று கிறிஸ்துவுக்கு பதிலாக வெளிப்படுகிறவன். அதாவது தன்னை கிறிஸ்துவாக காண்பிக்கிறவன் என்று பொருள். இதனை கள்ள கிறிஸ்து என்றும் கூறலாம். இன்னொன்று கிறிஸ்துவுக்கு எதிராக எழும்புகிறவன், கிறிஸ்துவை எதிர்க்கிறவன் என்று பொருளாகும். அதாவது கிறிஸ்துவை எதிர்ப்பதினிமித்தமாய், கிறிஸ்துவை வெறுப்பதினிமித்தமாய், கிறிஸ்துவை அழிக்க வேண்டும் என்று நினைப்பதினிமித்தமாய் கிறிஸ்துவின் சபையையும், சபையின் அங்கங்ககளையு,ம் ஊழியர்களையும் கிறிஸ்தவ நிறுவனங்களையும், கிறிஸ்துவ பெயர்களையும் அழிக்க நினைக்கிறவனாக இருக்கிறான். இங்கே யோவான் அப்போஸ்தலர் இரண்டாம் வகையினரை குறித்து குறிப்பிடுகின்றார்.
யார் அந்திகிறிஸ்து என்பதற்கு 2:22;4:3 ஆகிய பகுதிகளில் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணாதவனே கிறிஸ்துவை எதிர்க்கிறவனாகவும், வெறுக்கிறவனகவும் இருக்கிறான். நாசரேத்தூர் இயேசுவே மேசியாவாகிய கிறிஸ்து என்றும், அவரே தேவனால் அனுப்பப்பட்ட இரட்சகர் மீட்பர் என்றும் விசுவாசியாதவனே அந்திகிறிஸ்து.
கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் இக்காலத்தில் சபைக்குள்ளும் சபைக்கு வெளியேயும் இருக்கிறார்கள். சபைக்குள் இருந்துக்கொண்டு இயேசுவுக்கு எதிராக செயல்படுவோர் மூன்று வகையினராக இருக்கிறார்கள். இயேசுவை ஆவியாக மட்டுமே கருதுகிறவர்கள். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதாக கூறிக்கொண்டு பாவத்தின் வழியில் நடக்கிறவர்கள். இயேசுவை அக்காலத்துக்குரியவர் என்று மட்டுமே நம்ப வேண்டும். இக்காலத்துக்கு அவரது வார்த்தைகள் மட்டுமே போதுமானது என்றும் கூறுகிறவர்கள். இவர்கள் இயேசுவின் ஆளுமையை மறுதலிப்பதினால் - இரட்சண்ய கிரியையை அவமடைய செய்வதினால் இக்காலத்தின் அந்திகிறிஸ்துகளாக இருக்கிறார்கள்.
சபைக்கு வெளியே உள்ள கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள் இயேசுவின் ஆளுமையையும், இயேசுவின் உபதேசங்களையும், இயேசுவின் நற்கிரியைகளையும் முற்றிலுமாக நிராகரிக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் ஒரு சாரார் இயேசு யூதர்களுக்குரியவர், நமக்குரியவர் அல்ல என்று கூறுகிறார்கள். இன்னொரு சாரார் இயேசு ஒரு மனிதர் மட்டுமே அவர் கடவுளல்ல, காந்தி, பெரியார் போன்ற சீர்திருத்தவாதி என்று கூறுகிற நாத்திக வாதிகள். மூன்றாமவர் இயேசு கிறிஸ்துவினால் அழிக்கப்பட வேண்டிய வலுசர்ப்பத்தையும், கள்ள தீர்க்கதரிசியையும், பிசாசையும் பின்பற்றி மனசாட்சியில்லாமல் , ஈவிரக்கமில்லாமல் காட்டுமிராண்டிகளை போல செயல்படுகிறவர்கள். இந்த மூன்று சாராரும் கிறிஸ்துவுக்கு எதிராக நிற்பதாக கூறிக்கொண்டு அவருடைய சரீரமாகிய சபையையும், கூடிவருகிற கூடுகையின் ஆலயத்தையும், அவருக்காய் உழைக்கின்ற ஊழியர்களையும் அழித்துப்போட துணிகின்றார்கள்.
அநேக அந்திகிறிஸ்துகள் எழும்பியுள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நிறத்தில் இந்த அந்திகிறிஸ்துகள் செயல்படுகின்றன. இடத்துக்கும் நபருக்கும் கலாச்சாரத்துக்கும் தகுந்தாற்போல் தங்களை மாற்றிக்கொண்டு கிறிஸ்துவுக்கு எதிராக எழும்புகிறார்கள். அன்று இயேசுவை எதிர்ப்போர் கறுப்பு நிறமாக அறியப்பட்டனர். இன்றோ அவர்கள் நிறமிகளாக அறியப்படுகின்றனர்.
கேள்வி ?
இயேசு கிறிஸ்து என்ற ஆளுமையை நீர் ஏதாவதொருவிதத்தில் அவமானபடுத்டியுள்ளீரா? அ;ல்லது எதிர்த்துள்ளீரா?..
கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்த…
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment