சகோதர அன்புள்ளவன் ஒளியில் நிலைகொண்டிருக்கிறான். அவனில் இடறல் இல்லை
1Jn2:10. He who loves his brother abides in light,there is no cause for stumbling in him.
1Jn3:14;Jn8:31;Rom14:13;2Pet1:10;Hos6:3;Mt13:21;18:7;Lk17:1,2;Rom9:32,33.
1யோவா2:10. சகோதர அன்புள்ளவன் ஒளியில் நிலைகொண்டிருக்கிறான். அவனில் இடறல் இல்லை. 1யோவா3:14;யோவா8:31;ரோம14:13;2பேது1:10;ஓசி6:3;மத்13:21;18:7;லூக்17:1,2;ரோம9:32,33.
இடறல் இல்லாத வாழ்வு
இடறல் என்பதற்கான மூலச்சொல் ஒருவர் நடந்து செல்லும் பாதையில் குச்சியோ, கற்களோ, பள்ளமோ ஏற்படுத்தி தடை செய்தலாகும். இச்சொல் இவ்விடத்தில் இரு பொருளை தருகின்றது. இவன் ஒருவருக்கும் இடறலாக இருக்கமாட்டான், இவனை ஒருவரும் இடறிவிழ செய்ய இயலாது என்பதாகும்.
கற்பனைகளை கைக்கொண்டு தேவனிடத்தில் அன்புகூருகிறவன் ஒருவரிலொருவர் அன்புகூருகிறவனாகவும், தன் சொந்த சகோரனிடத்தில் அன்புகூருகிறவனாகவும் இருக்கிறான். இப்படிபட்டவன் இருளைவிட்டு நீங்கி ஒளியில் நிலைகொண்டிருக்கிறான். இவனில் இடறலும் இல்லை. இவனும் இடறலாக இருப்பதில்லை.
ஒளியில் நிலைகொண்டிருக்கிறவன் என்றால் ஒளியை உடையவனாயிருக்கிறான் என்றும், ஓளியிலே வாழ்கிறான் என்றும், ஒளியாய் இருக்கிறான் என்றும் பொருளாகின்றது. இவன் ஒருவருக்கும் இடறலாய் இருப்பதில்லை. தான் செய்கிற ஒரு செயல் ஒருவருக்கு நன்மையை உண்டாக்கியதா அல்லது வருத்தத்தை உண்டக்கியதா என்பதை குறித்த சிந்தை உள்ளவனாயிருக்கிறான். ஆகையினால் இவனால் ஒருவரும் இடறமாட்டார்கள். அப்படியே இடறல் உண்டாக்கும் ஒன்றை அவன் செய்தாலும் அவற்றை உடனே சரி செய்து கொள்கிறவனாயிருக்கிறான். ஒளி அவனில் இருப்பதினால் தன் இருதயத்தையும், பிறரின் இருதயத்தையும் பார்க்கும் அகப்பார்வை உடையவனாயிருக்கிறான். இவனுக்கு முன்பாக மறைவானது ஒன்றுமில்லாதிருப்பதினால் பிறரை இடற வைத்து தானும் இடறுகிறவனாகவோ அல்லது தானும் இடறி பிறரையும் இடறவைக்கிறவனாகவோ இருக்கமாட்டான்.
சகோதர சிநேகம் தான் ஆவிக்குரிய வாழ்வின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக இருக்கிறது. காண்கின்ற சகோதரனிடத்தில் அன்புகூராதவன் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?. இரட்சிக்கப்பட்ட சகோதரானாயிருந்தாலும் அவன் தன் உடன் சகோதரனாயிருப்பதினால் அவனை பகையாது அவனுக்கு உதவி செய்து அன்பு பாராட்டி வாழ்வது மேலானது. ஒரேயொரு விஷயத்தில் அவனோடு ஒத்துப்போவதில்லை. அது என்னவெனில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத நிலையேயாகும். மற்றபடியாக எல்லா நிலைகளிலும் அச் சகோதரனை உளபூர்வமாக நேசிக்க வேண்டும். உலகரீதியாக ஒத்தாசை செய்ய வசதியில்லாதிருந்தாலும் உளபூர்வமாக நேசிப்பதே இடறலில்லாத வாழ்வுக்கான காரியமாகும்.
இடறல் இல்லாத வாழ்வு……
வார்த்தைகளிலும் செயல்களிலும் வெளிப்பட வேண்டும்…
தன் இருதயத்தை ஆராய்வதைபோல பிறரின் இருதயத்தையும் ஆராய வேண்டும்…
பிறிதொருவரை குற்றபடுத்துவதை விடவும் அதே தவறை தானும் செய்திருக்கிறேனா என்பதை ஆராய வைக்கும்….
ஆவியின் நிறைவான வாசமாகும்….
சந்தகுணம், அன்பு ஆகியவைகளின் பெருக்கமாகும்….
சிலகேள்விகள் ?
மீட்கபட்டவர்கள் மீட்கபடாதவர்களை வெறுப்பாக நடத்துவது சரியானதா?...
இரட்சிக்கப்படாதவர்கள் மேல் அன்பும் கரிசனையும் காண்பிக்காதவர்கள் எவ்விதத்தில் தேவ பிள்ளைகளாயிருப்பர்?...
சகவிசுவாசி, சக ஊழியனை குறை சொல்லிவிட்டு ஜெபிக்கும் ஜெபம் எத்தகையது?...
உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். பிலிப்பியர் 1:9-11.
Comments
Post a Comment