CCM Tamil Bible Study - சிலுவை கூறும் செய்தி 2 - The message of the Cross 2
- Get link
- X
- Other Apps
இயேசுவின் சிலுவை கூறும் செய்தி - 2
இயேசு பாவமாக்கப்பட்டார்
2கொரி5:21. பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார். ஏசா53:4-6,9-12;சக13:7;ரோம8:3;எபே5:2;1பேது3:18;1யோவா2:1,2;1தீமோ1:15;எபி12:3;1பேது2:24;யோவா1:29.
பாவமாக்கப்பட்ட இயேசு
தேவன் பரிசுத்தமுள்ளவர். தேவகுமாரனும் பரிசுத்தமுள்ளவர். தேவ ஆவியும் பரிசுத்தமுள்ளவர். ஆகையினால் பரிசுத்த ஆவி எனப்படுகிறார். தேவகுமாரனிடத்தில் பாவமில்லை என்று விவிலியம் கூறுகின்றது. ஏனெனில் அவர் தேவனிடத்தில் இருந்தவர், தேவனிடமிருந்து வந்தவர், தேவனாலே பிறந்தவர். இந்த தேவகுமாரனாகிய கிறிஸ்து பாவியாகவும், பாவ மனுஷனாகவும், குற்றவாளியாகவும், தண்டனைக்குரியவராகவும் ஆக்கப்பட்டார் என்றும் விவிலியம் கூறுகின்றது.
பாவம் என்றால் அழுக்கானது – அசுத்தமானது என்று பொருள். தூய்மைக்கு எதிரானது ஆகும். இயேசு கிறிஸ்து அழுக்காகக்கப்பட்டார், அசுத்தமாக்கப்பட்டார். வெண்மையானவர் வெண்மையிழந்தார்.
பாவம் என்பது இருளானது. ஒளியில்லாதது. இயேசு கிறிஸ்து வெளிச்சமாயிருந்தும் பாவத்தை சுமந்ததினால் இருளாக்கப்பட்டார். ஒளி இழந்தவராய் காணப்பட்டார்.
பாவம் என்பது தேவனை விட்டு விலகிச் செல்வது, தூரமாய் போவது, பிரிந்து போவது, இணைப்பை துண்டித்துக் கொள்வது ஆகும். இயேசு பாவத்தை சுமந்ததினால் தேவனோடுள்ள இணைப்பை இழந்தார். தேவனை விட்டு விலக்கப்பட்டார். தேவனை விட்டு பிரிக்கப்பட்டார், தேவனால் மறக்கப்பட்டார்.
இந்த மூன்று விஷயங்களினிமித்தம் மட்டுமே இயேசு பாவியாக்கப்பட்டார். அவர் பாவம் செய்ததினால் அல்ல, பிறரின் பாவங்களை சுமந்ததினால் பாவியாக்கப்பட்டார்.
பாவம் என்பது மீறுதல்கள், அக்கிரமங்கள், கீழ்படியாமை, கலகம் விளைவித்தல் ஆகும். இதினிமித்தம் பாவம் செய்கிறவன் தேவனை எதிர்த்து நிற்கிறவனாகவும், தேவனுக்கு எதிராளியாகவும் இருக்கிறான். கிறிஸ்துவை எதிர்த்து நிற்கிற ஒவ்வொருவரும் பாவத்தை தங்களில் கொண்டிருப்பவர்களாவர். இயேசு கிறிஸ்து கீழ்படிகிறவராக இருந்தார். இயேசு கிறிஸ்து பாவகிரியைகளை – துர்கிரியைகளை – அக்கிரமங்களை – துன்மார்க்கமானவைகளை – பொல்லாதவைகளை செய்யாமல் நன்மை செய்கிறவராகவே சுற்றி திரிந்தார். ஆகையினால் கிரியைகளின் அடிப்படையில் இயேசு கிறிஸ்து பரிசுத்தராகவும், தோற்றத்தின் அடிப்படையில் பாவியாகவும் காணப்பட்டார்.
இயேசு கிறிஸ்து மனுகுலத்தின் பாவத்தை சுமந்துக் கொண்டதினால் பாவத்தை மூடாக்காகவும், போர்வையாகவும் கொண்டிருந்தார். உள்ளத்திலும் தன்மையிலும், குணத்திலும் தேவமகனாக காணப்பட்டார்.
இக்காலத்தில் நம்மில் பலரும் தேற்றத்தில் பரிசுத்தமுள்ளவர்களைப்போலவும் உள்ளத்திலோ பட்சிக்கிற ஓநாய்களை போலவும் காணப்படுகின்றனர். இயேசுவின் காலத்தில் பரிசேயர்களும், சதுசேயர்களும், வேதபாரகர்களும் தோற்றத்தில் வெள்ளையடிக்கப்பட்டபட்டவர்களாகவும், உள்ளத்திலோ கல்லறையாகவும் காணப்பட்டனர். இதனால் அவர்கள் மாய்மாலக்காரர்களாக காணப்பட்டனர். அதே மாய்மாலம் இக்காலத்தில் அதிகமாக காணப்படுவதினால் தான் கிறிஸ்தவம் பிறரால் தூஷிக்கப்படுகின்றது. பிரபல்யமான தேவமனிதனாக அறியப்பட்ட ரவி சக்கரியாஸ் இத்தகையவராய் காணப்பட்டார் என்பதை அறிந்து கிறிஸ்தவ உலகம் அதிர்ந்துப் போயுள்ளது.
நாம் வாழும் உலகம் சாக்கடையாகக் காணப்படாலும் பரிசுதத்ததை உள்ளத்திலும் - உள்ளான வாழ்விலும் இழக்காதிருப்பதுவே உன்னதமானது. அப்படிப்பட்டவர்கள் யோசேப்பைப்போல காணப்படுவார்கள்.
விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே. நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள். 1கொரிந்தியர் 5:9-13.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment