CCM Tamil Bible Study - சிலுவை கூறும் செய்தி 1 - The message of the Cross 1
- Get link
- X
- Other Apps
இயேசுவின் சிலுவை கூறும் செய்தி – 1
நம்நிமித்தம் அவர் பலவீனப்பட்டார்
2கொரிந்தியர் 13:4. அவர் பலவீனத்தினால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும்… பிழித்திருக்கிறார். லூக்22:43,44;1கொரி15:42-44;எபி5:7;1பேது3:18;மத்8:17;2கொரி12:5-10.
இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்திருந்தாலும் பாவமில்லாதவராயிருந்ததினால் மாம்சத்திலும் பலமுள்ளவராயிருந்தார். ஆவியிலும் பலமுள்ளவராயிருந்தார். ஆத்துமாவிலும் பலமுள்ளவராயிருந்தார். ஆகையினால்தான் திடனற்றவர்களை தேற்றும்படியான வார்த்தைகளை கொடுத்தார். இயலாத நிலையிலிருந்தவர்களுக்கு அற்புதங்கள் செய்தார். அதிகாரத்திலிருந்தவர்கள் முன்பாக மண்டியிட்டும், அவர்களுக்கு ஒத்துப்போயும் இருக்கவில்லை. முடிவாக பாவத்தினால் நலிந்துபோன மனிதர்களுக்காக சிலுவையை ஏற்றுக்கொள்வதிலும் தயக்கம் காட்டவில்லை. இவ்விதம் பலத்தின்மேல் பலமுடையவராயிருந்த இயேசு பலவீனமாய் சிலுவையில் அறையப்பட்டார் என்று பவுல் கூறுகின்றார்.
இதற்குரிய காரணம் என்ன?
நம்முடைய பலவீனங்களை சுமந்துக்கொள்ளும்படி பலவீனரானார். மத் 8:17. நம்முடைய வியாதிகளை, துக்கங்களை சுமந்து கொண்டதினிமித்தம் அவர் பலவீனரானார். ஏசா53:4. இதனால் நாம் பலவான்களானோம்.
நமது பாவங்களை அவர் தம்மேல் சுமந்து கொண்டதினால் – ஏற்றுக்கொண்டதினால் அவர் பலவீனரானார். நமது பாவத்தின் பாரங்கள் அவரை அழுத்தி பலவீனபடுத்தியது. ஆகவே அவர் பலவீனரானார். மத்11:28, 1பேதுரு 2:24.
பலவீனத்திலும் தூயமை இழக்காமலும், நம்பிக்கை இழக்காமலும் தனக்கு முன்பாக வைத்துள்ள இலக்கை தொடர்ந்து எட்டிப்பிடிக்கும் படியாக தன்னை பின்பற்றி வருகிறவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்படியாக பலவீனரானார். மத்தேயு 11:29,30.
பலவீனம் என்பது பாவத்தின் விளைவாகவோ, தவறுகளின் பலனாகவோ உள்ளது. பலவீனமடையும் ஒவ்வொருவரும் தங்கள் பலவீனத்தினிமித்தம் தேவனை நோக்கி முறையிட வேண்டும் என்பதற்காக அவர் பலவீனரானார். எபிரேயர் 5:7.
உலகமும் மாம்சமும் தன்மேல் அதிகாரம் செலுத்தி தன்னை மேற்கொள்ள இடம் கொடுத்ததினால் பலவீனரானார். அதிகாரங்களும், வல்லமையும் அவரிடமிருந்து வருகிறதாயிருந்தாலும் மானுடம் என்ற நிலையை எடுத்துக் கொண்டதினால் தன்னுடைய அதிகாரத்துக்கும் வல்லமைக்கும் தானே இணங்கி பலவீனரானர். இதன் மூலம் தந்தைக்கு கட்டுப்பட்ட தனயன் என்பதை அறியலாம். லூக்கா 22:53; மத்தேயு 26:53,54;யோவான் 19:11.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மிமித்தம் பலவீனராக விளங்கியதினால் நாம் ஒரு சில கடமைகளை நிறைவேற்ற வேண்டியவர்களாகின்றோம்.
விசுவாசத்தில் பலவீனரை மாத்திரமல்ல சரீரத்தில் பலவீனரையும் தாங்கும் படியாக கட்டளை பெற்றுள்ளோம். ரோமர் 15:1;1தெச5:14;1கொரி8:9.
பிறரின் பலவீனங்களை குறித்து குறை சொல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது உடல் ஊனம் உள்ளவர்கள் குறித்து அவமரியாதை செய்யாமலிருக்க வேண்டும்.
நமது பலவீனத்தை குறித்து பிறர் குறை சொல்லுவதை குற்றபடுத்தாமலும், நாம் பலவானக மாறும்படி பலவீனத்தை தாங்குகிறவர்களாகவும் காணப்பட வேண்டும்.
பலவீனம் வீழ்ந்து விடுவதற்கானதல்ல, திரும்ப கட்டப்படுவதற்கேதுவானது
அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார். தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக. ரோமர் 15:1-6.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment