(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்)
இயேசுவே ஆறுதல்தரும் கிறிஸ்துவாக வருகிறார்
நாம் கட்டியெழுப்பப்படும்படியாக
இயேசுவே ஆறுதல்தரும் கிறிஸ்துவாக வருகிறார்
இயேசுவின் மரணத்தின் மூலமாக ஆறுதல்.
நம் இருதயம் ஸ்திரப்பட ஆறுதல் நமக்கு அவசியமாகும்.
ஏசாயா 40:1,2 ல் - என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்.
இயேசு கிறிஸ்து நமக்கு எப்படி ஆறுதலைக் கொண்டு வருகிறார்?
1. இயேசு கிறிஸ்து தன்னை பலியிட்டு அவரின் ஆறுதலை தருகிறார்
யோவான் 12:24,25 - மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.
ஒரு விதையானது பலன் தர வேண்டுமானால் மண்ணில் புதைக்கப்பட வேண்டும்.
அது தன்னை இழந்து மிகுதியான பலன் கொடுக்கிறது..
இயேசு நமக்குள் நற்பலனாகிய ஆறுதலை தரும்படியாக சிலுவையில் தம் ஜீவனை விட்டார்.
மண்ணில் புதைக்கப்பட்டார்.
2கொரிந்தியர் 1:3,4,5 - நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.
2. இயேசு தன்னை பலியிட்டு உலகத்தின் அதிபதியை தள்ளி நமக்கு ஆறுதல் உண்டாக செய்தார்
யோவான் 12:31,32 - இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான். நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
உலகத்தின் அதிபதி..
அந்தகார லோகாதிபதி..
ஆகாயத்து அதிகார பிரபு..
வானமண்டல ஆவி…
ஆகிய இந்த சாத்தான் வானத்துக்கு ஏறி தேவனிடமிருந்து எந்த நன்மையும் நாம் பெறாதபடி செய்தான்.
இயேசுவோ தமது மரணத்தின் மூலம் வானத்துக்கு ஏறி அவனை கீழே தள்ளிவிட்டார்.
எபேசியர் 4:8-10 - அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.
நம்மை பரலோகத்தில் சேர்த்துக்கொள்ளும் வழியை உண்டாக்கினார்.
தேவனோடு சேர்ந்து கொள்ளவோ, தேவன் நம்மோடு சேர்ந்து கொள்ளவோ முடியாதபடி தடுத்த அதிபதி தோற்கடிக்கப்பட்டான்.
நமக்கு ஜீவ மூச்சு உண்டானது.
பிரச்சனை முடிந்தது.
ஆறுதல் உண்டாயிற்று…
3. பாவத்தோடு சேர்ந்த எல்லா தீங்கானவைகளையும் தமது மரணத்தின் மூலம் அகற்றி ஆறுதலடைய செய்தார்
ஏசாயா 61:1-4 - கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள். அவர்கள் நெடுங்காலம் பாழாய்க்கிடந்தவைகளைக் கட்டி பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க்கட்டுவார்கள்.
நொறுக்கப்படுதல், சிறையிருப்பு, கட்டப்பட்ட நிலை, துயரம், சாம்பல், ஒடுங்கின ஆவி, பாழாய் போன நிலை, நிர்மூலமாக்கப்பட்ட நிலை, இடித்து தள்ளப்பட்ட நிலை ஆகிய யாவும் இயேசுவின் மரணத்தினால் மாற்றப்பட்டது.
எப்படி?...
கட்டவிழ்த்து, காயங்கட்டி, விடுதலை தந்து, சிங்காரமடைய செய்து, ஆனந்த தைலத்தினால் அபிஷேகித்து, துதியின் உடை தந்து ஆறுதல் படுத்தினார்…
நம்மை மட்டுமல்ல, நமது குடும்பத்தையும், பணிகளையும் சிறப்படைய செய்தார்.
இதனால் நமக்கு கிடைக்கும் சிறப்பு…
ஏசாயா 61:5-7 - மறுஜாதியார் நின்றுகொண்டு உங்கள் மந்தைகளை மேய்த்து, அந்நிய புத்திரர் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சத்தோட்டக்காரருமாயிருப்பார்கள். நீங்களோ கர்த்தரின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய பணிவிடைக்காரரென்பார்கள்; நீங்கள் ஜாதிகளின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக்கொண்டு மேன்மைபாராட்டுவீர்கள். உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்.
இதற்கு நாம் செய்யவேண்டியது என்ன?...
யோவான் 12:26 - ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஊழியம் என்றால் இடிக்கப்பட்டவர்களை கட்டியெழுப்புவது ஆகும்.
இதற்குரிய பலன் என்ன?
யோவான் 12:26 - ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
ஆம் நாம் ஆறுதலடைந்து நமது வாழ்வையும் பிறரது வாழ்வையும் கட்டியெழுப்புவோமாக…
கர்த்தர் உங்களுக்கு சகல ஆறுதலையும் பெருக செய்வாராக…ஆமென்…
Comments
Post a Comment