அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளது
1Jn2:12. I write to you, little children,
Because your sins are forgiven you for His name’s sake. 1Jn1:7,9;Lk5:20;7:47-50;24:47;Act4:12;10:43;13:38;Rom4:6-8;Eph1:7;Col1:14.
1யோவா2:12. பிள்ளைகளே அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளது. 1யோவா1:7,9;லூக்5:20;7:47-50;24:47;அப்4:12;10:43;13:38;ரோம4:6-8;எபே1:7;கொலோ1:14.
பாவ மன்னிப்பு
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பாவமன்னிப்பாகிய மீட்பு அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு கிடைக்கிறது. இந்த செய்தி சுவிசேஷங்களிலும், அப்போஸ்தலர் நடபடிகளிலும், நிருபங்களிலும் காணப்படுகின்றது. இது பாரம்பரிய செய்தியாகும். இதனையே யோவான் அப்போஸ்தலரும் இங்கு குறிப்பிடுகின்றார். மீட்கப்பட்டவர்களை பிள்ளைகள் என்று அழைக்கின்றார். வயது முதிர்ந்த நிலையில் இவ்வாறு அழைக்கின்றார். அதாவது இயேசுவின் நாமத்தினால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்.
பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளது என்பதை யோவான் நினைப்பூட்டக் காரணம் என்ன ?
முதலாவது, பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் இயேசு கிறிஸ்துவினால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். இயேசு தமது ஜீவனை கொடுத்து நம்மை தம்முடையவர்களாக்கியுள்ளார்.
இரண்டாவது, பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் இயேசு கிறிஸ்துவை தங்களில் முழுமையாக கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். பாவங்கள் மன்னிக்கப்பட்டவனில் கிறிஸ்து வாழ்வதினால் அவன் கிறிஸ்தவனாக மாறுகின்றான். கிறிஸ்துவின் சாயல், கிறிஸ்துவின் சிந்தை, கிறிஸ்துவின் குணம் உடையவனாகின்றான்.
மூன்றாவது, பாவங்கள் மன்னிக்கப்பட்டவன் பிறிதொருமுறை பாவம் செய்வானானால் இயேசுவை மறுபடியும் துக்கப்படுத்துகிறவனாகவும், அவரை அவமான படுத்துகிறவனாகவும் காணப்படுகிறான். இரட்சிப்பு என்பது அன்றாடம் பாவம் செய்து அன்றாடம் மன்னிப்பு பெறுவதல்ல. கிடைத்த மீட்பை பாவம் செய்யாமலும், குற்றமிழைக்காமலும் காத்துக்கொள்வதேயாகும்.
நான்காவது, பாவங்கள் மன்னிக்கப்பட்டவன் திரும்பவும் பாவம் செய்வானானால் தேவனுடைய கோபாக்கினைக்குரியவனாகின்றான். எபிரேயர் 6:1-8. அவன் மறுதலித்து போனவனாகவும், பின்மாற்றத்துக்குள்ளானவனாகவும் கருதப்படுகின்றான். மீட்போடு சம்பந்தபட்ட தேவன், கிறிஸ்து, பரிசுத்த ஆவி, விவிலியம், ஊழியகாரர், சபையை உதாசினபடுத்துகிறவனாகையினால் இரண்டாம் விசை மீட்பு என்பது லகுவானதல்ல.
ஐந்தாவது, பாவங்கள் மன்னிக்கப்பட்டு திரும்பவும் பாவகுழியில் விழுந்து மனந்திரும்ப விரும்புகின்றவர்கள்மேல் தேவன் தமது கிருபையை இன்னொருவிசை காண்பிக்க விருப்பமுள்ளவராயிருக்கிறார். 1யோவான் 2:1,2; யாக்கோபு 5:19,20. ஆனாலும் எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. சிலருக்கே இந்த வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதை குறித்து நாம் கேள்வி எழுப்ப முடியாது.
சில கேள்விகள் ?
பாவங்கள் மன்னிக்கப்பட்டேன் என்று சொல்லுகிறவன் மறுபடியும் தவறுகளை செய்ய காரணம் என்ன?.....
அனேகர் பாவமன்னிப்பு பெற்றிருக்கிறேன் என்ற உணர்வுடன் வாழ முடியாமல் தடுமாறுகிற காரணம் என்ன?...
பாவங்கள் மன்னிக்கப்பட காணிக்கைகள் கொடுப்பதினாலும், தொழுகையில் கலந்துக் கொளவதினாலும், சுவிசேஷ பணி செய்வதினாலும் பிறிதொருமுறை சாத்தியமா?..
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். சங்கீதம் 32:1-5.
Comments
Post a Comment