கடைசி காலம்
1Jn2:18a. Little children, it is the last hour; and as you have heard that 2Tim3:1;Heb1:2;1Pet1:5,20;2Pet3:3;Jud1:18;Isa2:2;Mic4:1;Jn6:39,40;Act2:17.
1யோவா2:18a. பிள்ளைகளே இது கடைசி காலமாயிருக்கிறதே. 2தீமோ3:1;எபி1:2;1பேது1:5,20;2பேது3:3;யூதா1:18;ஏசா2:2;மீகா4:1;யோவா6:39,40;அப்2:17.
கடைசி காலம்
விவிலியமானது துவக்கத்தையும் இறுதியையும் விபரித்து கூறுகின்றது. உலகத்தின் துவக்கத்தையும் முடிவையும், மனிதனின் துவக்கத்தையும் முடிவையும் கூறுகின்றது. தேவன் துவக்கமும் முடிவுமாயிருக்கின்றார் என்பது விவிலிய போதனை. எனவே அவரின் துவக்கம் முடிவு குறித்து அறிய அவருக்குள்ளே நாம் நிறைவடைய வேண்டும். ஆதி மனிதன் அவரில் துவக்கம் பெற்று அவரில் முடிவடைவதற்காகவே உண்டாக்கப்பட்டான். அவரில் துவக்கம் பெற்ற ஆதி மனிதன் அவரில் தன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு பதிலாக பாவத்தில் தன் வாழ்வை முடித்துக்கொண்டான். ஆதி மனிதன் பாவத்திலே தன் வாழ்வை முடித்துக் கொண்டதினால் ஆதி மனிதனுக்கு பின்புள்ள சந்ததிகள் யாவும் பாவத்திலே துவக்கம் பெற்றார்கள். ஆகையினால் தான் என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள் என்று விவிலியம் கூறுகின்றது.
பாவத்திலே துவங்கி பாவத்திலே தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் மனிதனை திரும்பவும் தேவனுக்குள் துவக்கி தேவனுக்குள்ளே முடிக்கிறவனாக மாற்ற தேவன் விரும்பினார். அதாவது, பாவத்திலே துவக்கம் பெற்றவன் கிறிஸ்துவிலே தன் வாழ்வை முடித்துக் கொள்வானென்றால் அதன் பின்புள்ள சந்ததிகள் தேவனிலே துவங்கி தேவனிலே முடிவடையும். இதுவே இரட்சிப்பாகும். பாவத்தில் துவங்கினாலும் தன் வாழ்வை கிறிஸ்துவில் முடித்துக் கொள்வதுவே இரட்சிப்பு. கிறிஸ்துவிலே துவங்கி கிறிஸ்துவிலே முடித்துக் கொள்வது புத்திர சுவிகாரம்.
விவிலியம் கடைசி காலங்கள் முறித்து பல விஷயங்களை குறிப்பிடுகின்றது. பாவம் என்ற ஒன்று வந்ததினால்தான் கடைசி காலம் என்ற ஒன்றையும் தேவன் வகுத்தார். உலகத்தின் முடிவையும், மனிதனின் முடிவையும், சாத்தானின் முடிவையும், இஸ்ராயேலரின் வீழ்ச்சி எழுச்சியையும் குறிப்பிடும்படியாக கடைசி காலம், கடைசி நாட்கள் என்று குறிப்பிடுகின்றது. மேலும் கடைசி நாட்களில் தேவாலயம் கட்டப்படும், சுவிசேஷம் எங்கும் அறிவிக்கப்படும், எங்கும் பிதாவை தொழுதுகொள்ளும் ஸ்தலம் உண்டாயிருக்கும், ஆவியானவர் ஊற்றப்படுவார் போன்ற அநேக காரியங்களை விவிலியம் போதிக்கின்றது.
கடைசி காலத்தை முன்னதாக அறிவதே தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதியாகும். யோவான் அப்போஸ்தலர் கடைசி காலத்தில் என்ன வெளிப்படும் என்பதை இங்கு குறிப்பிடுகின்றார்.
கிறிஸ்துவிலே ஆரம்பித்து கிறிஸ்துவிலே நிறைவடைய காத்திருக்கும் தேவமக்கள் கடைசி காலங்கள் குறித்த விழிப்புணர்வு உடையவர்களாயிருக்க வேண்டும். நாம் எல்லா உபகரணங்களையும் கைகளிலே கொண்டிருக்கின்றோம். இவைகளெல்லாம் தேவனுடைய தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டுள்ள கடைசி காலங்களை அறிந்து கொள்வதற்காக தரப்பட்டுள்ளவை. சமுதாயத்தில், அரசியலில், இயற்கையில், மனித உள்ளங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களை அறிவதற்காக தேவன் நமது உள்ளங்களில் ஆவியை ஊற்றியுள்ளார். இன்னும் காலங்களை அறிய இயலாமல் நெடுக ஓடி தண்டிக்கப்படாதபடிக்கு விழித்திருப்போம்.
காலங்கள் தேவனுடைய கையில் இருக்கிறது. மனிதன் அதை தன் கையில் எடுத்துக்கொள்ள தேவனோடு போராடுகிறான். எச்சரிக்கை.
மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 2தீமோத்தேயு 3:1-5.
Comments
Post a Comment