(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்)
ரூத்தின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட நகோமியின் குடும்பம்
ரூத் 4:11 – 17.
★ ரூத் என்றால் சிநேகிதி என்று பொருள்.
★ மனைவியும் ஒரு சிநேகிதி. – துணைவி.
★ புருஷனுக்கு துணையாள்..
★ வீட்டுக்கு – மனைக்கு மனையாள்…
நகோமியின் குடும்பம் கட்டப்பட ரூத் என்ன விலைகொடுத்தாள்?
நகோமி வீட்டுக்கு வந்த மருமகளாகிய ரூத் எப்படிப்பட்ட பெண்ணாயிருந்தாள்?
1. மாமியார் குடும்பத்துக்கு தயை செய்கிறவளாயிருந்தாள்
1:8 – மரித்து போனவர்களுக்கும் எனக்கும் தயை செய்ததுபோல…
தயை என்றால் கிரேஸ் என்று பொருள்… பட்சதாபம், அனுசரணையாக நடந்துக் கொள்ளுதல், பலன் எதிர்பாராமல் நன்மை செய்தல் ஆகும்.
பரிதாபப்பட்டு அல்ல, மன உற்சாகமாய் தயை செய்தாள்…
இவள் மாமியாருக்கு செய்த தயை திரும்ப இவளுக்கு கிடைத்தது.
2:10 - நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது.
2. மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டாள்
1:14 – ரூத்தோ விடாமல் அவளைப் பற்றிக்கொண்டாள்.
கெட்டியாய் பிடித்துக்கொண்டாள்.
மாமியோடு நெருக்கமாய் நடந்துக் கொண்டாள்.
மாமியோடு இணக்கமாய் நடந்துக் கொண்டாள்.
மருமகள் மாமியோடு இணக்கமாய் நடந்துக்கொள்வது குடும்பத்துக்கு ஆசீர்வாதமானதாகும்.
குடும்ப தலைவர்கள் போதகரோடு நெருக்கமாய் நடந்துக்கொள்வதும், குடும்ப தலைவிகள் போதகர் அம்மாவோடு நெருக்கமாய் நடந்துக்கொள்வதும் ஆசீர்வாதமாகும்.
3. மாமியை பின்தொடர மன உறுதியாயிருந்தாள்
1:18. - அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.
ஸ்திரமாய் நின்றாள்..
பின்பற்ற உறுதியாய் நின்றாள்.
எப்படி பின்பற்றினாள்?
2:11 – உன் புருஷன் மரணமடைந்த பின்பு நீ உன் மாமியாருக்காக செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும் உன் ஜென்ம தேசத்தையும்விட்டு முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எனக்கு தெரியும்..
மாமியாரின் அடிச்சுவடுகளை பின்தொடர்ந்து சென்றாள்.
பவுல் – பிலி3:17 - சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.
4. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தாள்
2:2,7 - மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள்.
அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக் கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக் கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்.
வீட்டுக்கு வந்த பெண் : மாமி நான் வெளியூர் பெண், எனக்கு யார் வேலை தருவார் என்று வீட்டில் முடங்கவில்லை.
மாமி - எனக்கு வேலை கிடைக்கும், என் மாமியாகிய நீங்கள் நம்புகிற தேவன் எனக்கு வாய்க்கப்பண்ணுவார் என்று புறப்பட்டாள்.
அழகான பெண் அழுக்கு உடை உடுத்திக்கொண்டு வேலை தேடி வயல் வெளிக்கு சென்றாள்.
ஆம். பவுல் ..
1கொரி4:12 - எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.
எபே4:28 - குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
2தெச3:6-12.
5. பிறரிடம் பணிவாகவும், பிறருக்கு மரியாதை கொடுக்கிறவளாகவும் நடந்துக் கொண்டாள்
2:10 - அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி.
வேலை ஸ்தலத்தில் யாவருக்கும் மரியாதை கொடுக்கணும்.
உதவியாயிருந்தவருக்கு எப்பொழுதும் மரியாதை கொடுக்கணும்.
வேலை கொடுக்கிறவருக்கு உரிய மரியாதை கொடுக்கணும்.
பெரிய மனிதர்களை மதித்தல்
வயோதிபர்களை மதித்தல்..
1பேதுரு 2:17 – எல்லாரையும் கனம் பண்ணுங்கள், ராஜாவை கனம் பண்ணுங்கள்..
அவரவரின் போதகர்கள் மிகுந்த கனத்துக்குரியவர்கள். அவர்களை குற்றபடுத்துவது, எதிர்த்து நிற்பது, கண்டுக்காமல் இருப்பது பாவமாகும்.
6. இஸ்ரயேலின் தேவனையே தன் அடைக்கலமாகக் கொண்டாள்
2:12 - உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக.
தன் தேவர்களை விட்டு விட்டு தன் மாமியாரின் தேவனை துணையாகக் கொண்டாள்.
சங்கீதம் 146:5 - யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
நாமும் அந்நிய தெய்வங்களை விட்டுவிட்டு இஸ்ரயேலரின் தேவனைஅடைக்கலமாக கொண்டதினால் அவர் நம்மை கைவிடமாட்டார்.
எபி 6:18 - நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
7. தானும் திருப்தியாய் சாப்பிட்டு மீந்ததை தன் மாமிக்கு வைத்திருந்தாள்
2:14,18 - அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள்.
தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள்.
மீந்ததை குப்பையில் எறியும் பழக்கம் இல்லை.
யாருக்கோ கொடுத்துவிடும் பழக்கம் இல்லை.
தன் வீட்டாருக்காக சேர்த்து வைத்தாள்.
மீந்ததை ஒன்றும் சேதமாகாமல் சேர்க்க வேண்டும் என்று இயேசு கூறினார்.
யோவான் 6:12 - அவர்கள் திருப்திடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
8. ஒருவரும் தன் மேல் குற்றம் சாட்டாதபடிக்கு உத்தமமாய் நடந்துக் கொண்டாள்
2:23 - கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடே கூடியிருந்து, தன் மாமியினிடத்தில் தங்கினாள்.
வேலைக்குப்போன இடத்தில் அங்குள்ளவர்களோடு சேர்ந்து ஜாலி அடித்து வயல்வெளியில் தங்காமல் எவ்வளவு நேரமாயினும் தன் மாமியிடம் மட்டுமே தங்கினாள்.
பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு…
வயது முதிர்ந்தவர்களோடு பயணித்தல்..
இக்காலத்தில் தலைமுறை இடைவெளி அதிகமாயிற்று.
அதுதான் சகல பிரச்சனைக்கும் காரணம்..
இளம் பெண்களின் பாதுகாப்பு குடும்பத்தின் மூத்தவர்களிடம் உள்ளது.
இதனால்தான் இவளை நற்குணம் உள்ளவள் என்றும் குணசாலி என்றும் கூறினர்.
9. இவள் மாமியின் சொல்படி நடந்தாள்
3:5,6 - அதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.
கூச்சமாயிருந்தாலும் பெரியவாளின் பேச்சைக் கேட்டு நடந்துக் கொண்டாள்.
அம்மா பேச்சு கேட்டு நடக்கும் பெண் நிச்சயம் மாமியின் பேச்சைக் கேட்டும் நடந்துக் கொள்ளும்.
10. நற்சாட்சி உடையவளாயிருந்தாள்
3:10,11 - மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பர்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது. இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
கொஞ்ச நாளில் அவளின் குணம் பிரசித்தமாயிற்று.
உள்ளவர்கள் குணசாலியாயிருப்பதை விடவும் இல்லாதவர்கள் குணசாலியாயிருப்பதில்தான் மேன்மையே உள்ளது.
குடும்பம் கட்டபட மருமகளிடம் நற்குணம், நற்சாட்சி, நற்கிரியை அவசியமாகும்.
வீட்டுக்கு வருகிற பெண் பணம் பொன் பொருள் கொண்டு வருகிறாளோ இல்லையோ நல்ல குணங்களை கொண்டு வந்தால் குடும்பம் கட்டப்படும்.
குடும்பம் கட்டப்பட வேண்டுமாயின், கணவன் வரம்பு மீறி போகாமல் தடுக்கும் பெண்கள் தேவை.
ஊதாரி செலவு, அதிகபட்ச கடன் இவைகளில் மனைவியானவள் புருஷனை கட்டுபடுத்தினால் குடும்பம் கட்டப்படும்.
சிக்கனம் பெண்களிடம் இருக்க வேண்டும்..
பெண்கள் வீட்டின் கண்கள்.
இக்காலத்தில் பெண்கள் அழகுக்கும், ஆடம்பரத்துக்கும், கட்டுபாடில்லாத பழக்கவழக்கங்களுக்கும் அடிமைபட்டுள்ளனர்.
இந்த நிலை மாற வேண்டும்.
ஆம்
ரூத்தால் நகோமியின் குடும்பம் கட்டப்பட்டது.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக…
Comments
Post a Comment