Posts

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - ஊழியருக்கு பலன் - பரிசுத்தவான்களுக்கு பலன்

வெளி11:18c. தீர்க்கத்தரிசியாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் பலனளிக்கும் காலம் வந்தது. வெளி22:12;மத்5:12;2தெச1:5-7;எபஇ11:25,26.  ஊழியருக்கு பலன் - பரிசுத்தவான்களுக்கு பலன் பலன் என்ற சொல் புதிய ஏற்பாட்டில் 29 தடவைகள் வந்துள்ளது. செய்த பணிகளுக்கான கூலி, வெகுமதி, சம்பளம் என்று பொருள்படும். இங்கு இரு கூட்டத்தாருக்கான மெய்ப்பலன் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகளுக்கும் பரிசுத்தவான்களுக்கும் புதிய மெய் பலன் கொடுக்கப்பட வேண்டிய காலம் வந்தது.  பழைய ஏற்பாட்டில் ஏராளமான தீர்க்கதரிசிகள் பற்பல விதமான குறைவுகளையும், பாடுகளையும், இழப்புகளையும் சந்தித்தனர். தேவன் விரும்புகிறதை தேவன் சொல்லுகிறதை அப்படியே பேசுகிற - செய்கிறவர்களாய் இருந்த தீர்க்கதரிசிகள் தேவனுக்கு அடிமைகளாக ஊழியக்காரர்களாக இருந்து பணி செய்தும் நன்மைகளை பெற்றுக் கொள்ளவில்லை. வேலையாள் கூலிக்கு பாத்திரவானாய் இருந்தும் பலன் பெறாதவர்களாக இவ்வுலகை விட்டுப் போயினர் .அவர்களுக்கு மெய் பலன் - நற்பலன் கொடுக்க வேண்டிய காலம் வந்தது.  இவர்களைப் போல கிறிஸ்துவுக்கு உறுதியாக உண்மையாக விசுவாசத்திலும் சத்தியத...

CCM Tamil Bible Study - மரித்தோரின் நியாயதீர்ப்பு

வெளி11:18b.மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிற காலம் வந்தது. வெளி6:10,11;20:4,5,12,15;ஏசா26:19-21;தானி7:9,10;12:1,2;எபி9:27.  மரித்தோரின் நியாயதீர்ப்பு தேவன் இவ்வுலகையும் மனுக்குலத்தையும் நியாய தீர்ப்புக்கு உட்படுத்த படைக்கவில்லை. தாம் உண்டாக்கின மனிதனைக் கொண்டு சாத்தானை நியாயம் தீர்க்கவே மனிதர்களை படைத்தார். ஆனால் மனித குலம் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்ட சாத்தானின் சதியினால் பாவக் கண்ணியில் அகப்பட்டது. தேவனால் சாயல் பெற்றவன் சாத்தானின் மாய வலையில் சிக்கி தேவனுக்கு கோபம் உண்டாக்கினான். பாவம் மனிதனுக்குள் என்றைக்கு பிரவேசித்து மனிதர்களை தேவனை விட்டு விலகியதோ அன்றைக்கே நியாயத்தீர்ப்பு வந்தது. ஏற்கனவே சாத்தானின் கூட்டத்தாருக்கு விதிக்கப்பட்டிருந்த நியாய தீர்ப்பு இப்பொழுது முழு உலகத்திற்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.  மரித்தோரின் நியாய தீர்ப்பு எனும்போது இரண்டு விதங்களில் இதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியதாகும்.  முதலாவது மரித்தோர் என்பது பாவத்தில் மரித்தோரை குறிக்கின்றது. மீட்பைப் பெற்றுக் கொள்ள விரும்பாமல் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு திருமுழுக்கை பெற்றுக் கொள்ளாமல் பாவத்...

CCM Tamil Bible Study - மூன்றரை நாட்கள்

வெளி 11:9 ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாசைக்காரர்களிலும், ஜாதிகளிலும் உள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள். அவர்களுடைய உடல்களை கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். வெளி10:11;13:7;17:15;5:9;19:17,18;சங்79:2,3;பிர6:3;ஏசா33:1;எரே7:33;மத்7:2.  மூன்றரை நாட்கள் சாட்சிகளின் உடல்கள் ஏறக்குறைய 84 மணி நேரமாக தெருக்களில் கிடக்கும். சகல ஜனங்களுக்கும் தீர்க்கதரிசனம் சொல்லி சகல ஜனங்களையும் கலங்க பண்ணினதினால் இவர்களின் உயிரற்ற உடல்கள் யாவரும் பார்க்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கலங்கப் பண்ணினவன் செத்துப் போனான், பயமுண்டாக்கினவன் மடிந்து போனான், சகல வாதைகளினாலும் வாதித்தவன் அற்று போனான், பூமாதேவியை துக்கப்படுத்தினவன் உயிரற்ற உடலால் தூக்கி வீசப்பட்டான் என்று பறை அறிவித்து உலகமெங்கும் அறிவிக்கப்படும். உலகமெங்கும் காணும் படியாக பெரிய பெரிய திரைகள் வைக்கப்படும். இவர்களின் உடல்களை பார்த்து ஆனந்தமடைய சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்படும்.  இத்தகைய காரியங்கள் எதனை குறிக்கின்றது? முதலாவது இது மிருகத்தின் ராஜாங்கத்தை குறிக்கும். முழு உலகமும் பின்பற்றும் படியாக எழும்பி வந்த...

CCM Tamil Bible Study - பெயர் தெரியாத பட்டணம்

வெளி 11:8b. அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய் சொல்லப்படும். அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.  பெயர் தெரியாத பட்டணம் தேவனுடைய வெளிப்பாடுகளிலும் வார்த்தைகளிலும் மனிதக் கண்களினாலும் மனித ஞானத்தினாலும் புரிந்து கொள்ள இயலாத அனேக விஷயங்கள் அடங்கியுள்ளன. பூமிக்கு அடுத்த காரியங்களைச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் உரைகளையே புரிந்து கொள்ள இயலாமலிருக்க பரத்துக்கு அடுத்த காரியங்களை எப்படி புரிந்து கொள்ள முடியும்?. பரத்திலிருந்து கொடுக்கப்பட்டாலொழிய ஒருவரும் ஒன்றையும் புரிந்து கொள்ளவும் முடியாது பெறவும் முடியாது. மேலும் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டுள்ளவைகளின் இரகசியங்களை பரிசுத்த ஆவியினால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.  இங்கே பதியப்பட்டுள்ள நகரம் குறித்து சில வியாக்கியானிகளும் பல ஆவிக்குரிய மனிதர்களும் ரோமாபுரி என்று கூறுகின்றார்கள். ஆனால் ரோமாபுரியில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை. என்றாலும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் போது எருசலேம் பகுதிகள் ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்ததினால் இது ரோமாபுரியையே குறிக்கின்றது என்றும் வ...

CCM Tamil Bible Study - வீதியில் உடல்கள்

வெளி11:8a. அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். வெளி11:9;சங்79:2,3;எரே26:23;எசே37:11.  வீதியில் உடல்கள் இங்கு நாம் நகரம் குறித்து தியானிக்க வில்லை. வீதியில் கிடக்கும் உடல்கள் குறித்து தியானிக்கின்றோம். இதில் அடங்கியுள்ள ஒரு சில உண்மைகளை இன்றைய நாளில் தியானிப்போம்.  முதலாவது நாகரிகமற்ற தன்மையை குறிக்கின்றது. நாகரிகம் வளர்ந்த காலங்களுக்கு முன்பாக இறந்து போகும் உடல்களை புதர்களிலும் காடுகளிலும் தெருக்களிலும் வீசிச் செல்வதுண்டு. நாகரீகம் வளர்ந்த பின்பு சடலங்களை முறையாக புதைக்கும் பண்புகள் வளரலாயிற்று. அதே வேளையில் திரும்பவும் அநாகரிகமான முறையில் மக்கள் பழங்கால முறைமைகளுக்கு சென்று விட்டனரோ என்று சந்தேகப்படுகின்றோம். மேலும் இவர்களை வெறுத்த மனுகுலம் பழிவாங்கும் செயலாக இவர்களின் உடல்களை தூக்கி தெருவிலே வீசினார்கள். இதனை ஒன்பதாம் வசனத்தில் நாம் விளக்கமாக காணலாம். பழமைக்கு திரும்புவது குறித்து அனேகர் நன்று என்று கூறுகின்றார்கள். ஆனால் மனிதாபிமானமற்ற - அநாகரிகமான - ஒழுக்கமற்ற - சீர்கேடுகள் நிறைந்த பழங்கால கலாச்சாரம் திரும்பவும் மக்களிடையே பரவி குடும்ப அமைப்புகள் ...

CCM Tamil Bible Study - சாட்சிகளின் காலம் முடிந்தது

வெளி11:7a. அவர்கள் தங்கள் சாட்சியை சொல்லி முடித்திருக்கும் போது பாதாளத்திலிருந்து ஏறுகிற மிருகம் அவர்களோடு யுத்தம் பண்ணி அவர்களை ஜெயித்து அவர்களை கொன்று போடும். வெளி11:3;லூக்13:32;யோவா17:4;19:30;அப்20:24;2தீமோ4:7.  சாட்சிகளின் காலம் முடிந்தது சாட்சிகள் ஜெயிக்கப்படதக்கவர்கள் அல்ல. அவர்களை ஜெயிக்கவோ கொல்லவோ ஒருவராலும் இயலாது. ஆனால் அவர்களுக்குரிய காலங்கள் வகுக்கப்பட்டிருக்குமானால் அவர்கள் ஜெயிக்கப்படவும், கொல்லப்படவும் கூடும். இங்கு மிருகம் குறித்து நான் கூறவில்லை. இந்த சாட்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை கொடுத்திருந்தார் தேவன். அந்த காலம் முடிந்துவிட்டது. தேவனுடைய செயலின் முடிவும் சாத்தானுடைய வேளையும் ஒரே சமயத்தில் உண்டாகும் போது தேவனுடைய ஜனம் துக்கத்திலும் சாத்தானின் கூட்டம் அக்களிப்பிலும் மிதக்கும். ஆனாலும் தேவ ஜனங்களின் துக்கம் அர்ப்ப நிமிஷம். ஆகையினால் துக்கம் சந்தோஷமாக மாறும் வேளை வரையிலும் துக்கத்தை சுமக்க வேண்டும்.  தேவன் தமது தீர்க்கதரிசிகளுக்கும் ஊழியக்காரர்களுக்கும் குறிப்பிட்ட காலங்களை கொடுத்துள்ளார். அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் தேவனால் அனுப்பப்பட்...

CCM Tamil Bible Study - பூமியின் மேல் அதிகாரம்

வெளி 11:6c. தங்களுக்கு வேண்டும் போதெல்லாம் பூமியை சகல வித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. எசே7:1-12:28;14;சங்105:26-36;எரே5:14.  பூமியின் மேல் அதிகாரம் சாத்தான் பூமி முழுவதும் தன் அதிகாரத்துக்குட்பட்டது என்றும், எனக்கு இஷ்டமானபடி தான் செய்வேன் என்றும் கூறிக்கொண்டு பூமியை கெடுக்கவும் தேவனுடைய ஜனங்களை பழிவாங்கவும் செய்து மேலாண்மை உடையவனாக இருக்கும்போது இயேசு கிறிஸ்து முழு உலகின் மீதும் தம் மரணம் உயிர்ப்பின் மூலம் அதிகாரம் பெற்றவராய் எழுந்தருளினார். இயேசு கிறிஸ்து இந்த பூமியில் தமது அதிகாரத்தை ஒரு அளவுக்குள் மட்டுமே வைத்துக் கொண்டார். அவர் தம்முடைய அதிகாரம் முழுமையையும் இன்னும் வெளிப்படுத்தவில்லை. இதற்கிடையில் தமது அதிகாரத்தை தம் அடியவர்களுக்கு கொடுத்திருந்தும் அதை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. ஆனாலும் தமது இரு சாட்சிகளின் மூலமாக முழு அதிகாரத்தையும் இந்த பூமியில் செயல்படுத்துகின்றார்.  மனுக்குலம் பாவம் செய்யும்போது தேவன் தமது வாதைகள் நான்கை அடிக்கடி பயன்படுத்துவதுண்டு. அதாவது பட்டயம், பஞ்சம், துஷ்ட மிருகங்கள், கொள்ளை நோய் ஆகிய நான்கு கொடிய தண்டனைகள் ஆகும்.(எசே ...

CCM Tamil Bible Study - தண்ணீர் மேல் அதிகாரம்

வெளி 11:6b. அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும் அதிகாரம் உண்டு. யாத்7:14-23;வெளி8:8;16:4.  தண்ணீர் மேல் அதிகாரம் மனித வாழ்வுக்கு நீர் மிகவும் அவசியமானதாகும். பூமி சூரியனின் வெப்பத்தால் எரிந்து போகாமலிருக்க இந்த நீர் மிகவும் அவசியமானது. உழைப்புகளினூடே மனித உடல் சூடேறி செயலிழந்து போகாமல் இருக்கவும் இரத்தமானது சரியாக செயல்படவும் நீர் அவசியமாகின்றது. நீரானது நிலத்திலிருந்தும், வானத்திலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகின்றது. வானத்து மழையை தடுத்த தீர்க்கதரிசிகள் பூமியின் நீரை வற்றிப் போக பண்ணவில்லை. பூமியில் உள்ள நீரை இரத்தமாக மாற செய்கின்றார்கள். பூமியின் நீர் இரத்தமாக மாறும் அதே வேளையில் வானத்து மழை இல்லாததால் பூமியின் நீர் வற்றிக் கொண்டே போய் முடிவில் பூமியெல்லாம் இரத்தம் கலந்த நிறமியாக காட்சியளிக்கும்.  தாகம் உள்ளவர்களுக்கு தண்ணீரை குடிக்க கொடுக்கும் மனித மாண்புகள் யாவும் அகற்றப்படுகின்றது. தண்ணீருக்காய் அலைந்து ஓடும் மக்கள் கூட்டத்தை எங்கும் பார்க்கலாம். நீருக்காய் அடித்துக் கொள்கிற காலங்கள் இதுவாகும். இப்பொழுதே நீருக்காய் போராடுகின்றார்கள். இரக்கம், தயவு, கருணை, காருண்யம், மனி...

CCM Tamil Bible Study - வாயை மதுரமாக்கும் புஸ்தகம்

வெளி10:10. நான் அந்த சிறு புஸ்தகத்தை தூதனுடைய கையிலிருந்து வாங்கி அதை புசித்தேன். என் வாய்க்கு அது தேனை போல மதுரமாய் இருந்தது. நான் அதை புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.  சங்19:10;110:103;நீதி16:21,24;சங்104:34;எசே3:3.  வாயை மதுரமாக்கும் புஸ்தகம் யோவான் தூதனிடமிருந்து சிறு புத்தகத்தை வாங்கி அதை புசித்த போது அது மதுரமாய் இருந்தது. வாய்க்கு இனிமையாய் இருந்தது. யோவான் தன் கண்களினால் பார்ப்பதற்கும், தன் காதுகளினால் கேட்பதற்கும், தன் நாவினால் சுவைப்பதற்கும் இனிப்பாய் இருக்கும்படியாக இந்த புத்தகத்தை தேவன் வடிவமைத்துள்ளார். அதைப்போலவே கர்த்தருடைய வார்த்தைகளடங்கிய விவிலியமும் கண்களினால் பார்க்கும்படியும், காதுகளினால் கேட்கும் படியும், வாயினால் படிக்கும் படியும் தக்கதாக செறிவூட்டப்பட்டுள்ளது. பார்த்து, கேட்டு, படித்து, தியானிப்பதற்கு கர்த்தருடைய வாக்கியங்களில் இனிமையை பெறாதவன் அதன் கிரியைகளை அனுபவிக்க முடியாது.  கர்த்தருடைய வாக்கியங்கள் பாலாகிய மென்மையான ஆகாரமாய் இருக்கிறது. அது மென்மையாகவும் இனிமையாகவும் இருப்பதற்காகவே கவிதைகளாகவும், உரைகளாகவும், வரலாறுகளாகவும் வடிவமைக்கப்பட்ட...