CCM Tamil Bible Study - வீதியில் உடல்கள்
- Get link
- X
- Other Apps
வெளி11:8a. அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். வெளி11:9;சங்79:2,3;எரே26:23;எசே37:11.
வீதியில் உடல்கள்
இங்கு நாம் நகரம் குறித்து தியானிக்க வில்லை. வீதியில் கிடக்கும் உடல்கள் குறித்து தியானிக்கின்றோம். இதில் அடங்கியுள்ள ஒரு சில உண்மைகளை இன்றைய நாளில் தியானிப்போம்.
முதலாவது நாகரிகமற்ற தன்மையை குறிக்கின்றது. நாகரிகம் வளர்ந்த காலங்களுக்கு முன்பாக இறந்து போகும் உடல்களை புதர்களிலும் காடுகளிலும் தெருக்களிலும் வீசிச் செல்வதுண்டு. நாகரீகம் வளர்ந்த பின்பு சடலங்களை முறையாக புதைக்கும் பண்புகள் வளரலாயிற்று. அதே வேளையில் திரும்பவும் அநாகரிகமான முறையில் மக்கள் பழங்கால முறைமைகளுக்கு சென்று விட்டனரோ என்று சந்தேகப்படுகின்றோம். மேலும் இவர்களை வெறுத்த மனுகுலம் பழிவாங்கும் செயலாக இவர்களின் உடல்களை தூக்கி தெருவிலே வீசினார்கள். இதனை ஒன்பதாம் வசனத்தில் நாம் விளக்கமாக காணலாம். பழமைக்கு திரும்புவது குறித்து அனேகர் நன்று என்று கூறுகின்றார்கள். ஆனால் மனிதாபிமானமற்ற - அநாகரிகமான - ஒழுக்கமற்ற - சீர்கேடுகள் நிறைந்த பழங்கால கலாச்சாரம் திரும்பவும் மக்களிடையே பரவி குடும்ப அமைப்புகள் யாவும் சிதறிப் போய்க் கொண்டிருக்கின்றதாயுள்ளதோ?. எதையும் தூக்கி எறியும் மனோபாவம் மனிதர்களிடையில் பெருத்து விட்டது.
இரண்டாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பல பாடுகளை அனுபவித்து மண்ணுக்குள் மூன்று நாள் அடக்கப்பட்டதை போல இவர்களும் பல பாடுகளை அனுபவித்து மண்ணின் மேல் தள்ளப்பட்டார்கள். பூமி மேல் அதிகாரம் பெற்றவர்கள் பூமியின் மேல் ஆதரவற்றவர்களாய் கிடக்கிறார்கள். பற்பலவிதமான அற்புதங்களை செய்தவர்கள் உயிரற்ற உடல்களாக அனாதை உடல்களாக தள்ளப்பட்டுள்ளார்கள். எவ்வளவு பெரிய பரிசுத்தவானும் ஒரு நாள் இவர்களைப் போல பூமியின் மண்ணிலே கிடத்தப்படுவான். மண்ணில் இருந்து வந்தவன் மண்ணுக்கு திரும்புவான் என்ற வசனத்தை போல் மண்ணோடு சங்கமித்துள்ளார்கள். எனக்கும் பிடிக்காது, நான் பெரிய மனிதன் என்று சொல்லுகிற ஒவ்வொருவரும் இந்த மண்ணை தொட்டு விட்டு தான் செல்ல வேண்டும். மண் வணக்கத்திற்குரியது அல்ல. மண் கால்கள் சம்பந்தப்பட்டது. ஒருவர் ஜிவிக்கிறார் என்றால் மண்ணை மிதிக்கிறார் என்று பொருள். ஒருவர் ஜீவித்து போனார் என்றால் மண்ணோடு ஒட்டி போனார் என்று பொருள். தான் மிதிக்கும் மண்ணில் ஒரு நாள் மனிதன் தள்ளப்படுவான். ஆகையால் மறுரூபம் அடைந்து விண்ணுக்கு போகும் சரீரம் உடையவர்களாக வாழ்வது மேலானது.
மண்ணை நினைத்து விண்ணை அடைய முயற்சி செய்...
மண் விட்டு விண் சென்ற இயேசுவை மட்டுமே நம்பு...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment