CCM Tamil Bible Study - சாட்சிகளின் காலம் முடிந்தது
- Get link
- X
- Other Apps
வெளி11:7a. அவர்கள் தங்கள் சாட்சியை சொல்லி முடித்திருக்கும் போது பாதாளத்திலிருந்து ஏறுகிற மிருகம் அவர்களோடு யுத்தம் பண்ணி அவர்களை ஜெயித்து அவர்களை கொன்று போடும். வெளி11:3;லூக்13:32;யோவா17:4;19:30;அப்20:24;2தீமோ4:7.
சாட்சிகளின் காலம் முடிந்தது
சாட்சிகள் ஜெயிக்கப்படதக்கவர்கள் அல்ல. அவர்களை ஜெயிக்கவோ கொல்லவோ ஒருவராலும் இயலாது. ஆனால் அவர்களுக்குரிய காலங்கள் வகுக்கப்பட்டிருக்குமானால் அவர்கள் ஜெயிக்கப்படவும், கொல்லப்படவும் கூடும். இங்கு மிருகம் குறித்து நான் கூறவில்லை. இந்த சாட்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை கொடுத்திருந்தார் தேவன். அந்த காலம் முடிந்துவிட்டது. தேவனுடைய செயலின் முடிவும் சாத்தானுடைய வேளையும் ஒரே சமயத்தில் உண்டாகும் போது தேவனுடைய ஜனம் துக்கத்திலும் சாத்தானின் கூட்டம் அக்களிப்பிலும் மிதக்கும். ஆனாலும் தேவ ஜனங்களின் துக்கம் அர்ப்ப நிமிஷம். ஆகையினால் துக்கம் சந்தோஷமாக மாறும் வேளை வரையிலும் துக்கத்தை சுமக்க வேண்டும்.
தேவன் தமது தீர்க்கதரிசிகளுக்கும் ஊழியக்காரர்களுக்கும் குறிப்பிட்ட காலங்களை கொடுத்துள்ளார். அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் தேவனால் அனுப்பப்பட்டவர்களுமாய் இருந்தால் அந்த முடிவு காலத்தை முன்னதாகவே அறிந்து சகல ஏற்பாடுகளையும் செய்து முடிப்பார்கள். மனித சரீரம் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதற்காக கட்டமைக்கப்பட்டிருந்தாலும் பாவத்தின் பெருக்கமும் தேவனுடைய சாபமும் மனித வாழ்வை குறைந்துப் போக வைத்துவிட்டது.
மனித வாழ்வு புகையை போன்றதும் நிழலை போன்றதுமாக மாறிவிட்டதினால் தேவ ஆவியை பெற்றவர்கள் தங்களுக்குரிய முடிவு காலங்ளுக்கு முன்னதாகவே தங்கள் பணியை முடித்து அடுத்து வரும் தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு தேவனுடைய வேளைக்காக காத்திருக்க வேண்டும். சபைகளின் இறுதி காலமும் சாத்தானின் எழுச்சியும் ஒரே நேரத்தில் உண்டாகும். ஆகவே தேவ மனிதர்கள் எச்சரிக்கையுடன் அனைத்து காரியங்களையும் செயல்படுத்த வேண்டும். விசுவாசத்தை அவரே துவக்கி வைப்பார். துவக்குகிற அவரே விசுவாசத்தை முடிக்கிறதை நாம் அறியாவிட்டால் அந்தோ பரிதாபம்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment