CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - மூன்றரை நாட்கள்

வெளி 11:9

ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாசைக்காரர்களிலும், ஜாதிகளிலும் உள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள். அவர்களுடைய உடல்களை கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். வெளி10:11;13:7;17:15;5:9;19:17,18;சங்79:2,3;பிர6:3;ஏசா33:1;எரே7:33;மத்7:2. 

மூன்றரை நாட்கள்

சாட்சிகளின் உடல்கள் ஏறக்குறைய 84 மணி நேரமாக தெருக்களில் கிடக்கும். சகல ஜனங்களுக்கும் தீர்க்கதரிசனம் சொல்லி சகல ஜனங்களையும் கலங்க பண்ணினதினால் இவர்களின் உயிரற்ற உடல்கள் யாவரும் பார்க்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கலங்கப் பண்ணினவன் செத்துப் போனான், பயமுண்டாக்கினவன் மடிந்து போனான், சகல வாதைகளினாலும் வாதித்தவன் அற்று போனான், பூமாதேவியை துக்கப்படுத்தினவன் உயிரற்ற உடலால் தூக்கி வீசப்பட்டான் என்று பறை அறிவித்து உலகமெங்கும் அறிவிக்கப்படும். உலகமெங்கும் காணும் படியாக பெரிய பெரிய திரைகள் வைக்கப்படும். இவர்களின் உடல்களை பார்த்து ஆனந்தமடைய சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்படும். 

இத்தகைய காரியங்கள் எதனை குறிக்கின்றது?

முதலாவது இது மிருகத்தின் ராஜாங்கத்தை குறிக்கும். முழு உலகமும் பின்பற்றும் படியாக எழும்பி வந்துள்ள ராஜாங்கத்தை குறிக்கும். சாட்சிகளின் ஆற்றலை விடவும் மிகப்பெரிய ஆற்றல் உள்ளவன் என்று தன்னை காண்பித்துக் கொள்கின்றான். 

இரண்டாவது மக்களின் வெறுப்பை குறிக்கும். ஆடம்பரமாக வாழ்வதையும், சிற்றின்பமாக வாழ்வதையும், சுதந்திர ஜீவியாக ஜெவிப்பதையும் பாவம் என்று சொல்லி மக்களை வெறுப்பேற்றிய சாட்சிகளை இவ்வுலக மக்கள் முற்றிலுமாக வெறுத்தார்கள். தங்கள் வெறுப்பை அவர்கள் உயிரோடிருக்கும்போது காண்பிக்க இயலாததினால் இப்பொழுது காண்பிக்கின்றார்கள். தேவனுடைய வசனத்தின் மீதும், கிறிஸ்தவர் மீதும், கிறிஸ்துவின் சாட்சிகளாகிய ஊழியர்கள் மீதும், சபைகள் மீதும் மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் பகையும் இதில் விளங்குகிறது. 

மூன்றாவது இவர்களுக்கு பின்பு இவர்களின் உபதேசங்களை எடுத்துச் செல்லவும் அவர்களை பின்பற்றி பிரசங்கிக்கவும் ஒருவரும் எழும்பாதபடிக்கு அச்சவுணர்வுகளை கொண்டிருக்கும் படிக்கு இவ்விதம் செய்துள்ளார்கள். இதனை பார்க்கும் மக்கள் பயந்து இவர்களை பின்பற்ற மாட்டார்கள். இயேசுவின் காலத்துக்கு பின்பு அவருடைய செய்திகளை அவரின் பின்னடியார்கள் பின்பற்றி பரப்புரை செய்தது போல நடவாதபடிக்கு தடுக்க இந்த ஏற்பாடுகள். 

உலக ராஜங்கத்தின் ஆக்ரோஷமான எழுச்சி எழும்ப போகின்றது. அடிமைத்தனத்தின் மத்தியில் இருந்து ஒருவன் எழும்புவான். இஸ்ராயேலர்கள் இயேசுவை பின்பற்றக் கூடாதபடிக்கு அவர்களை ஒடுக்கி அழிக்கும்படிக்கு ஒருவன் எழும்பி ஆட்சி புரிவான். 

முழு உலகமும் இவன் ராஜாங்கத்தால் அதிரும்.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்