CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - ஊழியருக்கு பலன் - பரிசுத்தவான்களுக்கு பலன்

வெளி11:18c. தீர்க்கத்தரிசியாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் பலனளிக்கும் காலம் வந்தது. வெளி22:12;மத்5:12;2தெச1:5-7;எபஇ11:25,26. 

ஊழியருக்கு பலன் - பரிசுத்தவான்களுக்கு பலன்

பலன் என்ற சொல் புதிய ஏற்பாட்டில் 29 தடவைகள் வந்துள்ளது. செய்த பணிகளுக்கான கூலி, வெகுமதி, சம்பளம் என்று பொருள்படும். இங்கு இரு கூட்டத்தாருக்கான மெய்ப்பலன் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகளுக்கும் பரிசுத்தவான்களுக்கும் புதிய மெய் பலன் கொடுக்கப்பட வேண்டிய காலம் வந்தது. 

பழைய ஏற்பாட்டில் ஏராளமான தீர்க்கதரிசிகள் பற்பல விதமான குறைவுகளையும், பாடுகளையும், இழப்புகளையும் சந்தித்தனர். தேவன் விரும்புகிறதை தேவன் சொல்லுகிறதை அப்படியே பேசுகிற - செய்கிறவர்களாய் இருந்த தீர்க்கதரிசிகள் தேவனுக்கு அடிமைகளாக ஊழியக்காரர்களாக இருந்து பணி செய்தும் நன்மைகளை பெற்றுக் கொள்ளவில்லை. வேலையாள் கூலிக்கு பாத்திரவானாய் இருந்தும் பலன் பெறாதவர்களாக இவ்வுலகை விட்டுப் போயினர் .அவர்களுக்கு மெய் பலன் - நற்பலன் கொடுக்க வேண்டிய காலம் வந்தது. 

இவர்களைப் போல கிறிஸ்துவுக்கு உறுதியாக உண்மையாக விசுவாசத்திலும் சத்தியத்திலும் தரித்து நின்ற பரிசுத்தவான்களுக்கும் பலன் கொடுக்க வேண்டிய காலம் வந்தது. தீர்க்கதரிசிகளைப் போல இந்த பரிசுத்தவான்களும் இவ்வுலகில் பலனின்றி வாழ்ந்தார்கள். உலகம் இவர்களுக்கெல்லாம் பாத்திரமாக இருக்க வில்லை. ஆகவே அதற்குரிய பலன் கொடுக்க ஆண்டவர் வருகிறார். 

மனிதர்கள் கொடுக்கலாம் கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் ஆண்டவருக்கு உண்மையாக பணி செய்கிறவர்களுக்குரிய பலாபலன்கள் பரலோக கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. அதற்குரிய காலம் வரும் போது அவைகள் சரியாக கொடுக்கப்படும். பலிபீடத் தண்டையில் பலாபலன்களுக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் பலா பலன் கொடுக்கப்படும். தேவன் அநீதியுள்ளவர் அல்ல. உழைப்பின் கூலியை கேட்டாலும் கேட்காவிட்டாலும் கொடுக்கக்கூடியவர். அவருடைய ராஜ்யப் பணிக்காக வெறுமனே உழைக்க அவர் அழைப்பதில்லை. 

தேவன் தமது பணியாளர்களுக்காக இருவிதமான பலாபலன்களை வைத்துள்ளார். 

இவ்வுலகம் சார்ந்த பலாபலன்களாகிய உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றையும் ஒவ்வொருவருக்கும் தருகிறார். ஆனால் எல்லாம் விட்டு வருகிறவர்களுக்கு மட்டுமே.  இவைகளில் அவர் குறைவு வைப்பதில்லை. இரண்டாவது எதிர்கால பலாபலன்களாக நித்திய வாழ்வு, ஜீவ கிரீடம், புதிய பூமியில் ஆண்டவரோடு வாழுதல், வளமையான மகிழ்ச்சியான வாழ்வு, அழியாமை போன்ற பல நன்மைகளையும் கொடுக்கிறார். 

உண்மையாக திருப்பணி செய்கிறவர்களும் பரிசுத்தமாய் ஜீவியம் செய்கிறவர்களும் நித்தியத்தில் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்