CCM Tamil Bible Study - வாயை மதுரமாக்கும் புஸ்தகம்
- Get link
- X
- Other Apps
வெளி10:10. நான் அந்த சிறு புஸ்தகத்தை தூதனுடைய கையிலிருந்து வாங்கி அதை புசித்தேன். என் வாய்க்கு அது தேனை போல மதுரமாய் இருந்தது. நான் அதை புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.
சங்19:10;110:103;நீதி16:21,24;சங்104:34;எசே3:3.
வாயை மதுரமாக்கும் புஸ்தகம்
யோவான் தூதனிடமிருந்து சிறு புத்தகத்தை வாங்கி அதை புசித்த போது அது மதுரமாய் இருந்தது. வாய்க்கு இனிமையாய் இருந்தது. யோவான் தன் கண்களினால் பார்ப்பதற்கும், தன் காதுகளினால் கேட்பதற்கும், தன் நாவினால் சுவைப்பதற்கும் இனிப்பாய் இருக்கும்படியாக இந்த புத்தகத்தை தேவன் வடிவமைத்துள்ளார். அதைப்போலவே கர்த்தருடைய வார்த்தைகளடங்கிய விவிலியமும் கண்களினால் பார்க்கும்படியும், காதுகளினால் கேட்கும் படியும், வாயினால் படிக்கும் படியும் தக்கதாக செறிவூட்டப்பட்டுள்ளது. பார்த்து, கேட்டு, படித்து, தியானிப்பதற்கு கர்த்தருடைய வாக்கியங்களில் இனிமையை பெறாதவன் அதன் கிரியைகளை அனுபவிக்க முடியாது.
கர்த்தருடைய வாக்கியங்கள் பாலாகிய மென்மையான ஆகாரமாய் இருக்கிறது. அது மென்மையாகவும் இனிமையாகவும் இருப்பதற்காகவே கவிதைகளாகவும், உரைகளாகவும், வரலாறுகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையினால் தான் வாக்குத்தத்தங்களாலும் ஆசீர்வாதங்களினாலும் நற்கிரியைகளினாலும் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. விவிலியத்தை வாசிப்பதற்கும் தியானிப்பதற்கும் பிரியம் கொள்ளும்படியாகவே தேவன் தமது ஆவியை தந்துள்ளார். அவருடைய ஆவியை கொண்டு அவருடைய வாக்கியங்களை தியானிக்கும் போது அக்னி மூண்டு அபிஷேகம் உண்டாகும். அப்பொழுது ஆவியானவர் கசப்பான கடினமான உபதேசங்களை கற்றுக் கொள்ளும்படியாக வழிநடத்துகிறார்.
இரட்சிக்கப்படுகிற ஒருவன் தன்னுடைய துவக்கத்தில் எளிமையான உபதேசங்களினால் தன்னை கட்டமைத்துக் கொள்ள வேண்டும். கர்த்தருடைய வாக்கியங்களை தீவிரமாக சொந்தமாக்கிக் கொள்ள அதை பிரியமான ஆகாரமாக்கிக் கொள்ள வேண்டும். அன்றாட போஜனமாக்கிக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்தான பாலாக்கி கொள்ள வேண்டும். வசனங்களை மனப்பாடம் செய்து கொள்வது, எழுதி பழகிக் கொள்வது, சத்தமாக வாசித்து பழகுவது போன்ற அனுபவங்கள் யாவும் மதுரத்தின் விளைவேயாகும்.
எவரொருவர் விவிலியத்தை தேனிலும் மதுரமாக கருதுகிறாரோ அவர் விவிலியத்தை ஆராயாமலும், தியானிக்காமலும், வாசிக்காமலும் இரார்.
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 1:2
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment