CCM Tamil Bible Study - பெயர் தெரியாத பட்டணம்
- Get link
- X
- Other Apps
வெளி 11:8b. அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய் சொல்லப்படும். அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.
பெயர் தெரியாத பட்டணம்
தேவனுடைய வெளிப்பாடுகளிலும் வார்த்தைகளிலும் மனிதக் கண்களினாலும் மனித ஞானத்தினாலும் புரிந்து கொள்ள இயலாத அனேக விஷயங்கள் அடங்கியுள்ளன. பூமிக்கு அடுத்த காரியங்களைச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் உரைகளையே புரிந்து கொள்ள இயலாமலிருக்க பரத்துக்கு அடுத்த காரியங்களை எப்படி புரிந்து கொள்ள முடியும்?. பரத்திலிருந்து கொடுக்கப்பட்டாலொழிய ஒருவரும் ஒன்றையும் புரிந்து கொள்ளவும் முடியாது பெறவும் முடியாது. மேலும் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டுள்ளவைகளின் இரகசியங்களை பரிசுத்த ஆவியினால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
இங்கே பதியப்பட்டுள்ள நகரம் குறித்து சில வியாக்கியானிகளும் பல ஆவிக்குரிய மனிதர்களும் ரோமாபுரி என்று கூறுகின்றார்கள். ஆனால் ரோமாபுரியில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை. என்றாலும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் போது எருசலேம் பகுதிகள் ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்ததினால் இது ரோமாபுரியையே குறிக்கின்றது என்றும் வாதிடுகின்றார்கள். இரண்டு சாட்சிகளும் இஸ்ராயேல் சார்ந்தவர்கள். இஸ்ராயேலில் தோன்றியவர்கள். அங்கே தான் சாட்சியை அறிவிக்கிறார்கள். அவர்கள் தான் இயேசு கிறிஸ்துவை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவன் இரண்டாம் முறையாக சுவிசேஷத்தை சாட்சிகளின் மூலமாக அறிவிக்கின்றார். அப்படியானால் இது எருசலேமைத் தான் குறிக்கும் என்று நம்பலாம்.
எருசலேம் மகாநகரம் என்று விவிலியம் அறிவிக்கின்றது. எருசலேமின் வீதிகளில் சாட்சிகளின் உடல்கள் கிடக்கின்றது. பல தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையும் உடலையும் பார்த்த இஸ்ராயேலர்களுக்கு சாட்சிகளின் உடல்களைக் கொண்டிருப்பது பெரிய விஷயம் ஒன்றுமில்லை என்று தேவனுடைய சாட்சிகளை கொல்வதற்கு ஏற்றார் போல் இஸ்ராயேலர்கள் மூன்று விதமான தீமைகளிலே வாழ்வார்கள். முதலாவது தேவனுக்கு எதிரானவனின் தலைமையை கொண்டிருப்பர். இரண்டாவது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்களாக இருப்பார்கள். மூன்றாவது முரட்டாட்டமும் மனக்கடினமும் கொண்டிருக்கும்படியான அறிவு, ஆற்றல், செல்வம் ஆகிய மூன்றையும் உலகத்தில் உள்ள மற்ற எந்த மக்களையும் விட அதிகமாக கொண்டிருப்பர்.
இக்காலத்தில் இந்த எருசலமை போல சபைகளின் நிலைமைகள் காணப்படுகின்றதா?
மகா நகரம் இரத்தக் கறைகளின் நகரமா?
இது மாற்றமடைந்த நகரமாக மாறுமா?
.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment