CCM Tamil Bible Study - மரித்தோரின் நியாயதீர்ப்பு
- Get link
- X
- Other Apps
வெளி11:18b.மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிற காலம் வந்தது. வெளி6:10,11;20:4,5,12,15;ஏசா26:19-21;தானி7:9,10;12:1,2;எபி9:27.
மரித்தோரின் நியாயதீர்ப்பு
தேவன் இவ்வுலகையும் மனுக்குலத்தையும் நியாய தீர்ப்புக்கு உட்படுத்த படைக்கவில்லை. தாம் உண்டாக்கின மனிதனைக் கொண்டு சாத்தானை நியாயம் தீர்க்கவே மனிதர்களை படைத்தார். ஆனால் மனித குலம் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்ட சாத்தானின் சதியினால் பாவக் கண்ணியில் அகப்பட்டது. தேவனால் சாயல் பெற்றவன் சாத்தானின் மாய வலையில் சிக்கி தேவனுக்கு கோபம் உண்டாக்கினான். பாவம் மனிதனுக்குள் என்றைக்கு பிரவேசித்து மனிதர்களை தேவனை விட்டு விலகியதோ அன்றைக்கே நியாயத்தீர்ப்பு வந்தது. ஏற்கனவே சாத்தானின் கூட்டத்தாருக்கு விதிக்கப்பட்டிருந்த நியாய தீர்ப்பு இப்பொழுது முழு உலகத்திற்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
மரித்தோரின் நியாய தீர்ப்பு எனும்போது இரண்டு விதங்களில் இதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியதாகும்.
முதலாவது மரித்தோர் என்பது பாவத்தில் மரித்தோரை குறிக்கின்றது. மீட்பைப் பெற்றுக் கொள்ள விரும்பாமல் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு திருமுழுக்கை பெற்றுக் கொள்ளாமல் பாவத்திலே வாழ்ந்து பாவத்திலே செத்தவர்களை நியாயத்தீர்ப்பதாகும். ஏனெனில் பாவமானது தேவனை விட்டு பிரித்து மரணத்திலே நிலைகொள்ள வைத்து விட்டது. பாவத்தினிமித்தம் தேவனை விட்டு பிரிந்து தனி சாம்ராஜ்யம் கொள்ளலாம் என்று நினைத்த சாத்தானின் சதிக்கு முற்றுப்புள்ளியாக மரணம் விதிக்கப்பட்டது. மரணத்தினிமித்தம் சாத்தானின் கூட்டம் அலற ஆரம்பித்தது. உடனே மரணம் என்பது முடிவல்ல என்றும் அது முக்தி அடைதல் என்றும் போதித்து கள்ளத்தனமான காரியங்களை அறிவிக்கலாயிற்று. இவ்விதமாக பாவத்திலேயே மரித்தவர்கள் தீர்ப்படைவார்கள்.
இரண்டாவது மரித்தவர்கள் யாவரும் நியாயத்தீர்ப்பு நாளில் தேவன் முன்பாக நிற்பார்கள். நன்மை அடையவோ தீமை அடையவோ தேவனின் நியாயசனம் முன்பாக நிற்பார்கள். ஒருவரும் தப்பி போக முடியாது. முக்தி பேறடைந்தவனும் கர்மம் தொலைக்கப்பட்டவனும் நியாயாசனம் முன்பாக நிற்பர். எல்லா தெய்வங்களும் தேவன் முன்பாக நியாய தீர்ப்புக்காக நிற்பார்கள்.
தேவன் நியாயம் தீர்க்கப் போகிறார். அதற்கு முன்பாக சிங்காசன நாதரை பணிந்து அவர் பாதம் சரணடைந்து கொள்...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment