CCM Tamil Bible Study - பூமியின் மேல் அதிகாரம்
- Get link
- X
- Other Apps
வெளி 11:6c. தங்களுக்கு வேண்டும் போதெல்லாம் பூமியை சகல வித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. எசே7:1-12:28;14;சங்105:26-36;எரே5:14.
பூமியின் மேல் அதிகாரம்
சாத்தான் பூமி முழுவதும் தன் அதிகாரத்துக்குட்பட்டது என்றும், எனக்கு இஷ்டமானபடி தான் செய்வேன் என்றும் கூறிக்கொண்டு பூமியை கெடுக்கவும் தேவனுடைய ஜனங்களை பழிவாங்கவும் செய்து மேலாண்மை உடையவனாக இருக்கும்போது இயேசு கிறிஸ்து முழு உலகின் மீதும் தம் மரணம் உயிர்ப்பின் மூலம் அதிகாரம் பெற்றவராய் எழுந்தருளினார். இயேசு கிறிஸ்து இந்த பூமியில் தமது அதிகாரத்தை ஒரு அளவுக்குள் மட்டுமே வைத்துக் கொண்டார். அவர் தம்முடைய அதிகாரம் முழுமையையும் இன்னும் வெளிப்படுத்தவில்லை. இதற்கிடையில் தமது அதிகாரத்தை தம் அடியவர்களுக்கு கொடுத்திருந்தும் அதை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. ஆனாலும் தமது இரு சாட்சிகளின் மூலமாக முழு அதிகாரத்தையும் இந்த பூமியில் செயல்படுத்துகின்றார்.
மனுக்குலம் பாவம் செய்யும்போது தேவன் தமது வாதைகள் நான்கை அடிக்கடி பயன்படுத்துவதுண்டு. அதாவது பட்டயம், பஞ்சம், துஷ்ட மிருகங்கள், கொள்ளை நோய் ஆகிய நான்கு கொடிய தண்டனைகள் ஆகும்.(எசே 14:21). எரேமியா மூன்று வாதைகள் என்று கூறுகின்றார். (29:17). இவ்விதம் பூமியை தேவன் வாதித்த அதே வாதைகளை கொண்டு இந்த இரண்டு சாட்சிகளும் வாதிப்பார்கள். பட்டயத்தை எழும்பப் பண்ணுவார்கள். பஞ்சத்தை வரவைப்பார்கள். துஷ்ட மிருகங்களை உலாவ விடுவார்கள். கொள்ளை நோயை வரவழைப்பார்கள். இவ்விதமாக நான்கு வாதைகளினாலும் பூமியை வாதிப்பார்கள்.
தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு இந்த பூமியையும் எதிர்ப்பாளர்களையும் வாதிப்பதற்கு அதிகாரம் உண்டு. இயேசு கிறிஸ்து சகல வித அதிகாரம் உடையவராய் இருந்தும் நன்மை செய்கிறவராக மட்டுமே தன்னை காண்பித்தது போல ஊழியக்காரர்களும் எல்லா போராட்டங்களையும் சகித்து நன்மை செய்கிறவர்களாக இருக்கிறார்கள். எல்லா ஊழியக்காரர்களின் கண்களில் உள்ள கண்ணீரைத் துடைப்பதற்கும், பலிபீடத்தண்டையில் கிடந்து கொண்டு பழி வாங்கப்படும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை நிறைவேற்றுவதற்கும் தமது சாட்சிகளை பூமியில் வரவைத்து பூமியை வாதைகளினால் வாதிக்கிறார். ஆகையினால் தேவனுடைய ஊழியர்கள் தேவனுடைய வேளை வருவது வரையிலும் கிறிஸ்துவின் இரட்சிப்பின் நற்செய்தியை அறிவித்து மக்களை நெருப்பிலிருந்து தப்ப வைக்கிறவர்களாக செயல்பட வேண்டும். அதிகாரம் இல்லை என்பதினால் அல்ல ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படும் படியாகவே துன்பங்களை அனுபவிக்கின்றோம்.
இவ்வுலகம் தேவனுக்கும் தேவ மனிதர்களுக்கும் தேவ ஜீவன்களுக்கும் கட்டுப்பட்டது என்பதை நாம் உணர்ந்து கொண்டு ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
வாதைகள் எழும்பும் கடைசி காலம் ஆரம்பமாயிற்று.
ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்ன படியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.
எரேமியா 5:14
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment