Posts

Showing posts from April, 2021

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பிதாவின் அன்பு - Heavenly Father's love

பிதாவின் அன்பு 1Jn3:1a. Behold what manner of love the Father has bestowed on us, that we should be called children of God. 1Jn4:9,10;Jn3:16;Ro5:8;8:32;Eph2:4,5;3:18,19;2Sam7:19;Ps31:19;36;7-9;89:1,2. 1யோவா3:1a. பிதாவானவர் நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். 1யோவா4:9,10;யோவா3:16;ரோம5:8;8:32;எபே2:4,5;3:18,19;2சாமு7:19;சங்31:19;36:7-9;89:1,2. பிதாவின் அன்பு பிதாவாகிய தேவனின் அன்பு பெரிய அன்பாகும். நண்பர்களின் அன்பை விடவும், கணவன் மனைவியின் அன்பை விடவும், பெற்றோர் பிள்ளைகள் அன்பை விடவும் பெரியது ஆகும். பிதாவானவர் தள்ளப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் சேர்த்துக்கொள்ளும்படியாக நேசிக்கப்பட்ட பிள்ளையை பலியாக ஒப்புக்கொடுத்து தமது அன்பை விளங்கப்பண்ணினார். இந்த அன்பினிமித்தம் தேவனுடைய காணியாட்சிக்கு தூரமாயிருந்த நாம் தேவனுடைய பிள்ளைகளானோம். தேவனால் கொடுக்கப்பட்ட நேசபிள்ளையாகிய இயேசு தமது ஜீவனை கொடுத்து நம்மை மீட்டதினாலே நாம் தேவனுடைய பிள்ளைகளானோம். இயேசுவின் இரட்சண்ய கிரியையை நம்பி விசுவாசிக்கிறவர்கள் யாவரும் தேவனுடைய பிள்ளைகளாகின்றனர்.  புறத்தியாராகிய நாம் தேவனுடைய பிள்ளைகளென...

CCM Tamil Bible Study - நீதி செய்கிறவன் - One who does justice

நீதி செய்கிறவன்  1Jn2:29. If you know that He is righteous, you know that everyone who practices righteousness is born of Him. 1Jn3:9;4:7;5:1;Jn1:13;3:3-5;1Jn3:7,10;Mt7:16-18;Act10:35;Tit2:12-14;Jer13:23;Phil4:8,9.  1யோவா2:29. நீதியை செய்கிறவன் அவரில் பிறந்தவனாயிருக்கிறான். 1யோவா3:9;4:7;5:1;யோவா1:13;3:3-5;1யோவா3:7,10;மத்7:16-18;அப்10:35;தீத்2:12-14;எரே13:23;பிலி4:8,9. நீதி செய்கிறவன் தேவன் நீதியுள்ளவர். தேவனுடைய நீதியை சுமந்து வந்ததினால் கிறிஸ்துவும் நீதியுள்ளவராயிருக்கிறார். கிறிஸ்துவின் நீதியை சுமந்து திரிகிறவனும் நீதி செய்கிறவனாகவும், தேவனால் பிறந்தவனாகவும் இருக்கிறான்.  தேவன் நீதியுள்ளவராயிருப்பதினால் அவர் நியாயம் செய்கிறார். நீதியின் தேவனை பிரியபடுத்துகிறவராயிருப்பதினால் தேவனின் நீதி கிறிஸ்துவில் விளங்கியது. இயேசுகிறிஸ்து தேவனால் பிறந்து தேவ நீதியை வெளிபடுத்துகிறவராயிருந்தார். தேவனுடைய நீதியை கொண்டிருந்ததினால்தான் உலகம் முழுவதும் பாவத்தில் கிடக்கிறது என்பதை அறிந்தார். ஆகையினால் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்றும், தேவனுடைய நீதியை செய்கிறவர்களாக மாற வேண்டும் என்றும...

CCM Tamil Bible Study - வெட்கபாடாதிருக்க வேண்டுமா? - How to be Bold?

இயேசு வெளிப்படும்போது... 1Jn2:28. He appears, we may have confidence and not be ashamed before Him at His coming. 1Jn3:2;Mk8:38;Col3:4;1Tim6:14;2Tim4:8;Ti2:11-13;Heb9:28;1Pet1:7;5:4;rev1:7.  1யோவா2:28. அவர் வரும்போது அவருக்கு முன்பாக வெட்கபடாதிருத்தல். 1யோவா3:2;மாற்8:38;கொலோ3:4;1தீமோ6:14;2தீமோ4:8;தீத்2:11-13;எபி9:28;1பேது1:7;5:4;வெளி1:7.  இயேசு வெளிப்படும்போது... வெளிபடுதல் என்பது முகமுகமாய் காணப்படும்படியாக தோன்றுதல் ஆகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது முதலாம் வருகையிலே யாவரும் காணப்படும்படியாக வெளிப்பட்டார். இதனை தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்று பவுல் கூறுகின்றார். மாம்சத்தில் வந்த இயேசு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, உயிர்த்து, பரலோகத்திற்கு சென்றிருக்கிறார். இயேசு கிறிஸ்து உயிர்த்து பரலோகம் சென்றது வெறும் நம்பிக்கை சார்ந்த ஒன்றல்ல, வரலாற்றில் நடந்த உண்மையாகும். அன்று காணப்படக்கூடியவராக இருந்தவர் இப்பொழுது காணப்படக்கூடாதவராக இருக்கிறார். இந்நிருபத்தை எழுதும்போது காணப்படக்கூடாதவராக இருக்கிற இயேசுவை குறித்தேக் குறிப்பிடுகின்றார் யோவான். காணப்படக்கூடாதவராகிய இயேசுவை காண...

CCM Tamil Bible Study - போதிக்கிறபடி நடந்துக்கொள் - Act as taught

போதிக்கிறபடி நடந்துக்கொள் 1Jn2:27. anointing which you have received from Him abides in you, and you do not need that anyone teach you. 1Cor2:13;Eph4:21;1Thes2:13;1Tim2:7;2Tim1:16,17;1Jn2:28;Jn8:31,32;15:4-7;Col2:6. 1யோவா2:27. அபிஷேகம் உங்களுக்கு போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 1கொரி2:13;எபே4:21;1தெச2:13;1தீமோ2:7;2தீமோ1:16,17;1யோவா2:28;யோவா8:31,32;15:4-7;கொலோ2:6.  போதிக்கிறபடி நடந்துக்கொள் அபிஷேகம் என்ற வார்த்தை ஆவியானவரையும் குறிக்கும், ஆவியினால் நியமனம் செய்யபடுதலையும் குறிக்கும். ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவரில் தேவனின் ஆவியானவர் தங்கி இருக்கிறார். கிறிஸ்து போதித்த சத்தியங்கள் அந்நபரில் நிலைகொண்டிருக்கிறது. வரப்போகிற தேவனுடைய இராஜ்யம் சம்பந்தபட்டவைகளையும் அந்நபரில் கொண்டு வருகிறார். ஆகையினால் மாம்சமானவர்களும், உலகத்தாரும், உலக ஞானமும் இந்நபருக்கு கற்றுகொடுக்க வேண்டிய அவசியமில்லை. மேலான தேவ ஞானமோ எல்லா அறிவிக்கும், புத்திக்கும், ஞானத்துக்கும் மேலானதாக இருப்பதினால் ஒருவரும் இந்நபருக்கு போதிக்க வேண்டியதில்லை.  ஆவியானவரால் உண்டான அபிஷேகம் ஒருவரில் நிலைத்திருக்க ...

CCM Tamil Bible Study - வஞ்சிக்கிறவர்கள் - Cheaters

வஞ்சிக்கிறவர்கள்  1Jn2:26. These things I have written to you concerning those who try to deceive you. 1Jn3:7;Eze13:10;Mk13:22;Act20:29,30;2Cor11:13-15;Col2:8,18;1Tim4:1;2Tim3:13;2Pet2:1-3;2Jn1:7. 1யோவா2:26. உங்களை வஞ்சிக்கிறவர்களை குறித்து இவைகளை எழுதுகிறேன். 1யோவா3:7;எசே13:10;மாற்13:22;அப்20:29,30;2கொரி11:13-15;கொலோ2:8,18;1தீமோ4:1;2தீமோ3:13;2பேது2:1-3;2யோவா1:7.  வஞ்சிக்கிறவர்கள் வஞ்சிக்கிறவர்கள் என்றால் விலகி செல்ல தூண்டுகிறவர்கள், சரியான பாதையை விட்டு வேறுபாதைக்கு திருப்புகிறவர்கள், அலைய விடுகிறவர்கள் என்று பொருளாகும். மேலும் சத்தியத்தை விட்டு பொய்மைக்கு நடத்துகிறவர்கள், தவறுகளுக்கு இட்டு செல்வோர், ஏமாற்றுவோர், பாவம் செய்ய தூண்டுவோர் என்றும் பொருள் படும்.  முன்பகுதிகளில் சொல்லப்பட்டுள்ளதின் காரணத்தை இங்கு குறிப்பிடுகின்றார். அதாவது வஞ்சிக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்பதில் முன் சொன்னதின்படி நடந்துக்கொள்ளுங்கள் என்கிறார். பொய்யும், வஞ்சகமும் சாத்தானின் இரு கண்கள் ஆகும். பொய் எங்குள்ளதோ அங்கே வஞ்சகமும் நிலைகொண்டிருக்கும். வஞ்சகம் உள்ள இடத்தில் பொய் இருக்கும். இவைகள் பிர...

CCM Tamil Bible Study - எபேசு சபை - Ephesus Church

(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்)  சபை கட்டி எழுப்பப்படல் கடந்த மாதங்களில் ஒரு குடும்பம் கட்டப்பட செய்ய வேண்டியதை குறித்து விவிலியத்தின் தேவ மனிதர்களை மையமாக கொண்டு தியானித்தோம்.  இன்றையதினம் ஒரு சபை கட்டப்படுவதற்கு என்ன தேவை என்பதை குறித்து தியானிப்போம்.  எபேசு சபை எபேசியர் நிருபம்.. ★ எபேசுவில் உள்ள சபைக்கு பவுல் ஒரு கடிதத்தை எழுதினார். அதுவே எபேசியர் நிருபம் ஆகும்.  ★ எபேசு ஆசியாவிலுள்ள ஒரு பட்டணம்.  ★ இந்த பட்டணத்தின் தேவி - தியானாள். அப் 19:24-27. ★ இங்கு நிறைய மந்திர புஸ்தகங்கள் உண்டு. அப் 19:19.  ★ பவுலின் முதல் நற்செய்தி ஊழியத்தில் இங்கு சுவிசேஷம் அறிவித்தார். அப்18:19-21. ★ பவுலின் மூன்றாம் நற்செய்தி ஊழியத்தில் இந்த பட்டணத்தில் 2 வருடங்கள் தங்கி ஊழியம் செய்தார். அப்19:1 முதல்.  ★ இவ்வித அந்நிய தெய்வங்கள் நிறைந்த பட்டணத்தில் சபை உண்டானது.   ★ இந்த பட்டணத்தில் அப்பொல்லோ ஊழியம் செய்தார். அப்18:24. ★ இங்கு தீகிக்கு ஊழியம் செய்தார். 2தீமோ4:12.   ★ தீமோத்தேயு இங்குள்ள சபையின் பேராயராக இருந்தார். எபே 1:1-4. ★ பவுல் இந்த பட்டணத்தில் ...

CCM Tamil Bible Study - பெரிய வாக்குதத்தம் - Great Promise

பெரிய வாக்குதத்தம்  1Jn2:25. And this is the promise that He has promised us - eternal life. 1Jn1:2;5:11-13,20;Dan12:2;Lk18:30;Jn5:39;6:27,47,54,68;10:28;12:50;17:2,3;Rom2:7;5:21;6:23;Gal6:8;1Tim1:16;6:12,19;Tit1:2;3:7;Jud1:21.  1யோவா2:25. நித்திய ஜீவனி கொடுப்பேன் என்பதே அவர் அருளிய வாக்குதத்தம். 1யோவா1:2;5:11,13,20;தானி12:2;லூக்18:30;யோவா5:39;6:27,47,54,68;10:28;12:50;17:2,3;ரோம2:7;5:21;6:23;கலா6:8;1தீமோ1:16;6:12,19;தீத்1:2;3:7;யூதா1:21.  விவிலியத்தில் காணப்படுகின்ற வாக்குதத்தங்களில் எல்லாம் மிகவும் பெரியதும் உயர்ந்ததுமான வாக்குதத்தம் இதுவேயாகும். வாக்குதத்தம் என்ற சொல்லுக்கு அறிவிக்கை, வாக்குறுதி  என்று இரு பொருள் உண்டு. கிறிஸ்துவிலும், பிதாவிலும் நிலைத்திருந்தால் நித்திய ஜீவன் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் அறிவிப்பை தேவன் வெளிபடுத்தியுள்ளார். வாக்குறுதிகள் முழுவதும் கீழ்படிதலினாலும், நற்கிரியைகளினாலும் முத்திரைபோடப்பட்டுள்ளது. இவ்விடத்தில் மூன்றாவது நிபந்தனையாகிய விசுவாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. பாவம் உருவாகுமுன்பு வாக்குறுதிகள் நிபந்தனையை சார்ந்திருக்கவில்ல...

CCM Tamil Bible Study - பிதா மகன் - Father and Son

குமாரனை உடையவன் பிதாவை உடையவன்  1Jn2:23. Whoever denies the Son does not have the Father either; he who acknowledges the Son has the Father also. 1Jn2:22;4:15;Mt11:27;Lk10:22;Jn5:23;8:19;10:30;14:9,10;15:23,24;2Jn1:9-11.  1யோவா2:23. குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவை உடையவன். 1யோவா2:22;4:5;மத்11:27;லூக்10:22;யோவா5:23;8:19;10:30;14:9,10;15:23,24;2யோவா1:9-11.  குமாரனை உடையவன் பிதாவை உடையவன் இஸ்ராயேலர்கள் கர்த்தராகிய இயேசுவை தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக்கொள்ளாமல் மறுதலித்தார்கள். இயேசுவை தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக்கொள்ளாததினால் பிதாவையும் மறுதலிக்கிறவர்களாக காணப்பட்டனர். இதனால் இஸ்ராயேலரை தேவன் உரோமர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பது வரலாறு.  இஸ்ராயேலரைப்போலவே கர்த்தராகிய இயேசு இந்த பூமியில் வந்து 2000 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அவரை ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் பாவங்களிலே வாழ்கின்றவர்கள் முற்றிலுமாக நரகத்திற்கென்று வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல பிதாவாகிய தேவனையும் நிராகரித்து தேவர்களல்லாதவர்களை தேவன் என்றுக் கூறிக்க...

CCM Tamil Bible Study - இயேசுவே கிறிஸ்து - Jesus is Christ

இயேசுவே கிறிஸ்து 1Jn2:22a. Who is a liar but he who denies that Jesus is the Christ?. 1Jn2:4;1:6;4:20;Jn8:44;Rev3:9;Mt16:16,20;Mk8:29;Lk3:16;Jn1:41;4:25;6:69;11:26:20:31. 1யோவா2:22a. இயேசுவை கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனே பொய்யன். 1யோவா2:4;1:6;4:20;யோவா8:44;வெளி3:9;மத்16:16,20;மாற்8:29;லூக்3:16;யோவா1:41;4:25;6:69;11:26:20:31. இயேசுவே கிறிஸ்து இயேசு என்றால் இரட்சகர் என்றும், கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்றும் பொருளாகும். கிறிஸ்து என்றச்சொல் கிரேக்க சொல்லாயுள்ளது. இதன் எபிரேய சொல் மேசியா என்பதாகும். இயேசு என்பது இயற்பெயர். தேவனால் கட்டளையடப்பட்ட பெயர். கிறிஸ்து என்பது பட்டப்பெயர் ஆகும். பொதுவாக கிறிஸ்தவரகளாகிய நாம் இயேசு கிறிஸ்து என்றுக் கூறுகின்றோம். ஆனால் இஸ்ராயேலர்கள் இயேசுவை கிறிஸ்து என்று அழைப்பதற்கு சிரமப்பட்டார்கள். அதற்குரிய காரணம் என்னவெனில் இயேசு நாசரேத்திலிருந்து வந்தவர் என்ற அறிவை கொண்டிருந்ததுவேயாகும். இரண்டாவது தானியேலால் சொல்லப்பட்ட மேசியாவும், ஏசாயாவால் உரைக்கப்பட்ட சமாதான பிரபுவாகிய மேசியாவும் இயேசுவாக இருக்கவில்லை என்பதுவேயாகும். அதாவது இஸ்ராயேலரின் எதி...

CCM Tamil Bible Study - மரணத்தினால் வெற்றியா? - How he get victory by death?

(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்) இயேசுவின் மரணத்தினால் வெற்றி கிடைத்தது இந்த கூற்று இரு விதங்களில் விளக்கப்படுகின்றது 1. கிறிஸ்து மரித்ததினால் பாவத்திலிருந்து விடுதலை கிடைத்தது இயேசு கிறிஸ்து தமது இரத்தத்தை சிந்தி விடுதலை வாங்கித்தந்தார்.  எபே1:7 - அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.  2. கிறிஸ்து மரித்ததினால் உயிர்த்தெழுதல் உண்டானது அதாவது மரணத்திலிருந்து விடுதலை கிடைத்தது.  1கொரி15:54 - மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது  இந்த வெற்றி நான் மீட்கப்பட்டதினாலும், அவருக்கு கீழ்படிந்து வாழ்வதினாலும் எனக்கு கிடைத்துள்ளது. எவ்விதத்தில் இந்த வெற்றியை நான் அனுபவிக்கின்றேன்? 1. எனக்கு அவர் கல்விமானின் நாவை தந்துள்ளதினால் இந்த வெற்றியை நான் அனுபவிக்கின்றேன் ஏசாயா 50:4 - இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்… இது எனக்கு எப்படி கிடைத்தது? -காலைதோறும் எழுப்பப்படுவதினால்.. ஏசாயா 50:4 - காலைதோறும் என்னை எழுப்...

CCM Tamil Bible Study - சிலுவை கூறும் செய்தி 7 - The message of the Cross 7

சிலுவை கூறும் செய்தி - 7 வெறுமையான சிலுவையும், கல்லறையும் - அது வெற்றியின் செய்தி இயேச் கிறிஸ்து என்னிடம் இல்லை என்று சிலுவையும், கல்லறையும் கூறுவதற்காகவே வெறுமையான சிலுவைகளாக அவருடைய சந்ததிகளிடமும் திருச்சபை கட்டிடங்களிலும் கல்லறைகள் மீதிலும், வெறுமையான கல்லறையாக இஸ்ராயேல் நாட்டிலும் இன்றுவரையிலும் காணப்படுகின்றது. சிலுவையின் – கல்லறையின் எஜமானாகிய மரணமும் இயேசு கிறிஸ்து என்னிடம் இல்லை என்று கூறுகின்றது. அவரை என்னால் மூன்று நாட்களுக்குமேல் வைத்திருக்க முடியவில்லை என்று கூறுகின்றது. அப்பொழுது நான் மரணத்திடம் இயேசு எங்கே என்று கேட்டேன். அவர் உயிர்த்தெழுந்துவிட்டார் என்று மரணம் என்னிடம் கூறியது. ஆம் இயேசு உயெர்த்தெழுந்துவிட்டார். இதுவே சிலுவையானது  மரணத்தின்மேல் கொண்ட வெற்றி. கல்லறையானது மரணத்தின்மேல் கொண்ட வெற்றியாகும். ஆகையினால்தான் அவைகள் வெறுமையாய் காட்சியளிக்கின்றது.  இந்த வெறுமையான சிலுவையானது இனி ஒருவரையும் தன்னில் ஏற்றுக்கொள்ளாது. இந்த வெறுமையின் கல்லறையும் இனி ஒருவரையும் தன்னில் ஏற்றுக்கொள்ளாது. இந்த உலகம் இருப்பது வரையிலும் இவைகள் இந்த வெற்றி செய்தியின் ஒளியை பிரதிபிம்...

CCM Tamil Bible Study - சிலுவை கூறும் செய்தி 6 - The message of the Cross 6

சிலுவை கூறும் செய்தி - 6 சிலுவையிலிருந்து கல்லறைக்கு மத்27:57-60;மாற்15:43-46;லூக்23:50-54;யோவா19:39-42. கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அவர் சிலுவையிலே மரித்தார். அவர் மரித்துப் போனதினால்தான் கல்லறையில் வைக்கப்பட்டார். தேவனால் ஆயத்தம் செய்யப்பட்ட சிலுவையானது தன்பணியை முடித்துக்கொண்டதாக தேவனிடம் கூறியது. இதினிமித்தம் அவர் சிலுவையிலே மரித்தார்.. அவர் மரித்தார் என்பதற்கு அடையாளமே வெறுமையான சிலுவையாகும். இனி இந்த சிலுவையில் புதிய செய்தி ஒன்று உருவாகின்றது. அது என்னவெனில் அன்று இயேசுவை என்னில் நான் கொன்றேன். இது உண்மை. இது சத்தியம். இப்பொழுது அவரது சரீரத்தை கல்லறைக்குக் கொடுத்துவிட்டேன். இனி வரும் சந்ததிகள் சிலுவையாகிய என்னை வணங்காமல் சிலுவையில் இயேசு மரித்து உங்கள் பாவங்களை நீக்கினார் என்று அறிவியுங்கள் என்று கூறுகின்றது. ஆம் சிலுவை கூறும் கடைசி செய்தியானது சபையின் துவக்க செய்தியாகும். இரட்சிப்பின் துவக்க செய்தியாகும். நற்செய்தியின் துவக்கமாகும். பாவம் செத்து நீதி பிழைத்தது என்று கூறுவதாகும்.  சிலுவை இயேசுவை கொடுத்து விட்டது. யாரிடம், எங்கே, எதற்காக கொடுத்துவிட்டது?. ஒரே ச...

CCM Tamil Bible Study - சிலுவை கூறும் செய்தி 5 - The message of the Cross 5

 சிலுவை கூறும் செய்தி - 5 சிலுவையில் அறையப்பட்ட கர்த்தர் வெளி11:8. அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையில் அறையப்பட்டார். லூக்க்24:7,20;யோவா19:17,18;அப்2:36;4:10;1கொரி1:23;2:2,8;2கொரி13:4;கலா3:1;எபி6:6. கர்த்தராக சிலுவையில் அறையப்பட்டார் கர்த்தர் என்ற சொல் ஆண்டவர், எஜமான் என்று பொருளாகும். பரலோக தேவனை கர்த்தர் என்று விவிலியம் கூறுகின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்பு கர்த்தர் என்ற பெயர் இயேசுவுக்கு சூட்டப்பட்டது. வெளிபடுத்தல் ஆக்கியோன் சிலுவையில் அறையபட்ட இயேசுவை கர்த்தர் என்று கூறுகின்றார். பவுலோ சிலுவையைல் அறையப்பட்ட இயேசு மகிமையின் கர்த்தர் என்று கூறுகின்றார். இயேசு மாம்சத்திலே வெளிப்பட்டார். மாம்சத்தில் வெளிப்பட்டவரை கிறிஸ்துவாகவும், தேவ குமாரனாகவும் கண்டிருந்த சீஷர்கள் இப்பொழுது அவரை கர்த்தாவாக காண்கின்றனர். கர்த்தர் என்ற பெயர் சகலவற்றையும்கொண்டிருப்பவர், சகலவற்றையும் ஆளுகை செய்யும் அதிகாரம் உள்ளவர் என்று விளக்குகின்றது.  எஜமானாக - ஆண்டவராக இருப்பவரை தண்டிக்க இயலாது. அதுபோல மகிமையின் கர்த்தாவாக இருந்த இயேசுவை உலகத்தின் அதிகாரங்கள் தண்டிக்க இயலாது. எல்லா அதிகாரங்களும்...

CCM Tamil Bible Study - சிலுவை கூறும் செய்தி 4 - The message of the Cross 4

 சிலுவை கூறும் செய்தி - 4 இராஜாவாக அறையப்பட்டார் மத்15:26. ஆக்கினையின் முகாந்திரமாக யூதருடைய இராஜா என்று சிலுவையின் மேல் எழுதி வைத்தனர். உபா23:5;சங்76:10;நீதி26:1;ஏசா46:10,11;சங்2:6;சக9:9;மத்2:2;27:37;லூக்23:37,38;யோவா19:18-22. இராஜாவாக அறையப்பட்டார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இஸ்ராயேலர்கள் மத்தியில் நடமாடிக்கொண்டிருக்கும்போது அவரை ஒருவரும் யூதருடைய இராஜாவாக அங்கீகரிக்கவில்லை. இஸ்ராயேலர்கள் இயேசுவின் அற்புதங்கள், அவருடைய உபதேசங்கள் குறித்து ஆச்சரியபட்டதுண்டு. ஆனால் அவரை குறித்த மூன்று காரியங்களை அவர்கள் ஏற்றுக்கொள்லவில்லை. ஒன்று இயேசுவை யூதருடைய இராஜாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டாவது, இயேசுவை தேவகுமாரனாக ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்றாவதாக, தீர்க்கதரிசிகளினால் சொல்லப்பட்ட  மேசியா இவர்தான் என்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாததற்கு அவர்கள் கொடுத்த பரிசுதான் சிலுவையாகும். இஸ்ராயேலர்கள் கொடுத்த பரிசாக நாம் கருதினாலும்  அது தேவனுடைய ஏற்பாடாகவே இருந்தது. அவர்கள் அவரை நிராகரிக்கவும், சிலுவைக்கு அனுப்பவும் தக்கதாக அவர்களின் இருதயத்தை  - மனகண்களை குருட்டாட்டத...