CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - போதிக்கிறபடி நடந்துக்கொள் - Act as taught

போதிக்கிறபடி நடந்துக்கொள்

1Jn2:27. anointing which you have received from Him abides in you, and you do not need that anyone teach you. 1Cor2:13;Eph4:21;1Thes2:13;1Tim2:7;2Tim1:16,17;1Jn2:28;Jn8:31,32;15:4-7;Col2:6.


1யோவா2:27. அபிஷேகம் உங்களுக்கு போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 1கொரி2:13;எபே4:21;1தெச2:13;1தீமோ2:7;2தீமோ1:16,17;1யோவா2:28;யோவா8:31,32;15:4-7;கொலோ2:6. 


போதிக்கிறபடி நடந்துக்கொள்

அபிஷேகம் என்ற வார்த்தை ஆவியானவரையும் குறிக்கும், ஆவியினால் நியமனம் செய்யபடுதலையும் குறிக்கும். ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவரில் தேவனின் ஆவியானவர் தங்கி இருக்கிறார். கிறிஸ்து போதித்த சத்தியங்கள் அந்நபரில் நிலைகொண்டிருக்கிறது. வரப்போகிற தேவனுடைய இராஜ்யம் சம்பந்தபட்டவைகளையும் அந்நபரில் கொண்டு வருகிறார். ஆகையினால் மாம்சமானவர்களும், உலகத்தாரும், உலக ஞானமும் இந்நபருக்கு கற்றுகொடுக்க வேண்டிய அவசியமில்லை. மேலான தேவ ஞானமோ எல்லா அறிவிக்கும், புத்திக்கும், ஞானத்துக்கும் மேலானதாக இருப்பதினால் ஒருவரும் இந்நபருக்கு போதிக்க வேண்டியதில்லை. 

ஆவியானவரால் உண்டான அபிஷேகம் ஒருவரில் நிலைத்திருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. ஆவியானவரை துக்கபடுத்துகிறதும், அவமானபடுத்துவதுமான காரியங்களை செய்யாமலிருக்க வேண்டும். ஆவியானவர் விலகி செல்லும்படியான காரியங்களையும் செய்யலாகாது. ஒருவரில் நிலைத்துள்ள அபிஷேகம் மூன்று காரியங்களினால் பாதிக்கப்படக்கூடும். பொருளாசை, விக்கிரக சம்பந்தம், வேசிதன காரியங்கள் ஆகியவைகளே.

தேவனுக்கு போதகராக இருக்க ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை. தேவகுமாரனுக்கும் அறிவுரை சொல்ல ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை. அதுபோலவே ஆவியானவருக்கும் புத்தி புகட்ட ஒருவரும் அனுமதிக்கபடவில்லை. அப்படியானால் தேவனின் ஆவியை கொண்டிருக்கிறவருக்கும் அறிவுரை சொல்லவோ, புத்தி புகட்டவோ ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் அபிஷேகம் பெற்றவர்களுக்கு ஆலோசனை வழங்க ஒருவரையும் அனுமதித்ததான குறிப்புகள் இல்லை. ஆகையினால்தான் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை தொடாதே, குற்றம் சுமத்தாதே, அவர்களோடு எதிர்த்து நிற்காதே என்று விவிலியம் கூறுகின்றது. 

எவரொருவரில் அபிஷேகம் வைக்கப்பட்டுள்ளதோ அந்நபருக்கு ஆவியானவர் சகலவற்றையும் போதிக்கிறார். அபிஷேகம் பெற்றவன் ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து ஆவியானவர் போதிக்கிறவைகளை கற்றுக்கொள்ள வேண்டும். ஆவியானவரால் கொடுக்கப்பட்டுள்ள விவிலியத்தை ஆவியானவர் மட்டுமே போதிக்க முடியும். முதிர்ந்த தேவ மனிதர்களை கொண்டும் ஆவியானவர் கற்றுக்கொடுக்கிறார். 

ஆவியானவரால் போதிக்கப்பட்டவைகள் நியாயபிரமாணங்களுக்கும், தீர்க்கதரிசனங்களுக்கும், கிறிஸ்துவின் உபதேசங்களுக்கும் மாறுபாடாக இருக்காது. அப்படியிருக்குமானால் அது பொய்யாகவே காணப்படும். ஆவியானவர் பிரமாணங்களுக்கு விரோதமாக போதிக்கமாட்டார். 

அவ்விதம் போதிக்கப்பட்ட அபிஷேகம்பெற்றவர்கள் அந்த பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டும். கற்றுக்கொண்டவைகளை நெஞ்சகத்தில் வைத்திருந்து நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். கற்பிக்கப்பட்டதில் நிலைத்திருந்தால் மட்டுமே பெற்ற அபிஷேகம் நிலைத்திருக்கும். 


கேள்வி ?

அபிஷேகம் பெற்ற அநேகர் ஆவியானவரால் கற்பிக்கப்படாமலோ அல்லது கற்பிக்கப்பட்டும் அதன்படி நடவாமலோ இருப்பதினால்தான் முற்பாவங்களை கொண்டிருக்கிறார்களோ?


நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். யோவான் 15:1-7. 

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்