CCM Tamil Bible Study - மரணத்தினால் வெற்றியா? - How he get victory by death?
- Get link
- X
- Other Apps
(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்)
இயேசுவின் மரணத்தினால் வெற்றி கிடைத்தது
இந்த கூற்று இரு விதங்களில் விளக்கப்படுகின்றது
1. கிறிஸ்து மரித்ததினால் பாவத்திலிருந்து விடுதலை கிடைத்தது
இயேசு கிறிஸ்து தமது இரத்தத்தை சிந்தி விடுதலை வாங்கித்தந்தார்.
எபே1:7 - அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
2. கிறிஸ்து மரித்ததினால் உயிர்த்தெழுதல் உண்டானது
அதாவது மரணத்திலிருந்து விடுதலை கிடைத்தது.
1கொரி15:54 - மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது
இந்த வெற்றி நான் மீட்கப்பட்டதினாலும், அவருக்கு கீழ்படிந்து வாழ்வதினாலும் எனக்கு கிடைத்துள்ளது.
எவ்விதத்தில் இந்த வெற்றியை நான் அனுபவிக்கின்றேன்?
1. எனக்கு அவர் கல்விமானின் நாவை தந்துள்ளதினால் இந்த வெற்றியை நான் அனுபவிக்கின்றேன்
ஏசாயா 50:4 - இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்…
இது எனக்கு எப்படி கிடைத்தது?
-காலைதோறும் எழுப்பப்படுவதினால்..
ஏசாயா 50:4 - காலைதோறும் என்னை எழுப்புகிறார்;
-அவர் கற்பிப்பதற்கு இடம் கொடுப்பதினால்…
ஏசாயா 50:4 - கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
புலம்பல் 3:23 – அவர் கற்றுக்கொடுப்பவைகள் அவைகள் காலைதோறும் புதியவைகளாயிருக்கிறது.
இதனால் நான் என் வயதுடையோர்களில் நான் அதிக அறிவாளியாக இருக்கிறேன்.
சங்கீதம் 32: 8.
மத்தேயு 11:29.
-விவிலியம் பேசுவதை கேட்க என் செவியை சாய்க்கிறேன்.
ஏசாயா 55:3 - உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
இந்த நாவு எதற்காக?
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு.
கொலோசேயர் 4:6 - அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
2. எனக்கு அவர் துணை செய்கிறதினால் இந்த வெற்றியை நான் அனுபவிக்கின்றேன்
ஏசாயா 50:7,9 - கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.
இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.
என்னை எவ்வளவாய் அவமானமாய் பேசினாலும் நான் வெட்கப்படேன்.
நான் அழுமூஞ்சி மாதிரி நடவாது கற்பாறை முகம் போல நடக்கிறேன்.
தாவீது….
சங்கீதம் 40:17 - நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்;
63:7 - நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.
எல்லா பிரச்சனையும் முடிந்தபின் தாவீது சொல்கிறார்…
சங்கீதம் 94:17 - 19 - கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும். என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
அவர் எனக்கு துணையாயிருப்பதினால் நான் வெற்றிப்பாதையில் பயணிக்கின்றேன்.
3. என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருப்பதினால் நான் இந்த வெற்றியை அனுபவிக்கின்றேன்
ஏசா 50:8 - என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.
என் மீது குற்றம் சுமத்துகிறவர்கள் எனக்கு எதிராக எழும்பி இரண்டு காரியங்களை செய்கிறார்கள்…
-வழக்காடுகிறார்கள்…
எதற்காக?...
குற்றப்படுத்தும்படியாக…
பறித்துக்கொள்ளும்படியாக…
ஆகையினால் அவர் எனக்காக வழக்காடுகிறார்…
தாவீது …
சங்கீதம் 119: 154 - எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும்,
சாலொமோன் - நீதி 23:10,11 - பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
-தண்டனைக்குட்படுத்த முயல்கிறார்கள்.
ஏசாயா 50:9 - என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்?
கர்த்தரோ - நீதி 12:2 - நல்லவன் கர்த்தரிடத்தில் தயைபெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.
நான் புடமிடப்பட்டு சுத்த பொன்னாக விளங்குவேன்.
அப்பொழுது என்னை தண்டிக்க விரும்புகிறவர்கள்..
ஏசாயா 50:9 - அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.
இந்த வெற்றியானது எளிதாக கிடைக்கவில்லை தன்னை இழந்து இந்த வெற்றியை சம்பாதித்து தந்துள்ளார்… கஷ்டபட்டு சம்பாதித்ததாகும்…
இந்த வெற்றி சமீபமாய் இருக்கவில்லை… அது தூரத்திலுள்ளதாயிருந்தது. அவர் மரணத்தினூடாக தொடர்ந்து ஓடி இந்த வெற்றியை நமக்கு சமீபமாக்கியுள்ளார்.
வாழ்க்கை ஓட்டத்தில் தொடர்ந்து ஓட வேண்டியுள்ளது..
இந்த வெற்றியில் உடைக்கப்படுதலும் (ஏசாயா 50:6 - அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை), துரோகமும் (மத்தேயு 26:14-25 – யூதாஸ்) இருந்தது.
ஆகையினால் இந்த வெற்றியை உனக்குள் தக்கவைத்து கொள்ள வேண்டுமெனில்
ஏசாயா 50:10 - உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக !
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment