CCM Tamil Bible Study - எபேசு சபை - Ephesus Church
- Get link
- X
- Other Apps
(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்)
சபை கட்டி எழுப்பப்படல்
கடந்த மாதங்களில் ஒரு குடும்பம் கட்டப்பட செய்ய வேண்டியதை குறித்து விவிலியத்தின் தேவ மனிதர்களை மையமாக கொண்டு தியானித்தோம்.
இன்றையதினம் ஒரு சபை கட்டப்படுவதற்கு என்ன தேவை என்பதை குறித்து தியானிப்போம்.
எபேசு சபை
எபேசியர் நிருபம்..
★ எபேசுவில் உள்ள சபைக்கு பவுல் ஒரு கடிதத்தை எழுதினார். அதுவே எபேசியர் நிருபம் ஆகும்.
★ எபேசு ஆசியாவிலுள்ள ஒரு பட்டணம்.
★ இந்த பட்டணத்தின் தேவி - தியானாள். அப் 19:24-27.
★ இங்கு நிறைய மந்திர புஸ்தகங்கள் உண்டு. அப் 19:19.
★ பவுலின் முதல் நற்செய்தி ஊழியத்தில் இங்கு சுவிசேஷம் அறிவித்தார். அப்18:19-21.
★ பவுலின் மூன்றாம் நற்செய்தி ஊழியத்தில் இந்த பட்டணத்தில் 2 வருடங்கள் தங்கி ஊழியம் செய்தார். அப்19:1 முதல்.
★ இவ்வித அந்நிய தெய்வங்கள் நிறைந்த பட்டணத்தில் சபை உண்டானது.
★ இந்த பட்டணத்தில் அப்பொல்லோ ஊழியம் செய்தார். அப்18:24.
★ இங்கு தீகிக்கு ஊழியம் செய்தார். 2தீமோ4:12.
★ தீமோத்தேயு இங்குள்ள சபையின் பேராயராக இருந்தார். எபே 1:1-4.
★ பவுல் இந்த பட்டணத்தில் கஷ்டபட்டு ஊழியம் செய்தார் என்பதை 1கொரி 15:32 ல் காண்கின்றோம்.
★ இங்கு ஒரு சபை உண்டானது.
★ இந்த சபையிலுள்ளோர் விசுவாசத்தில் வளர்ந்து ஆவிக்குரிய வாழ்வில் கட்டி எழுப்பப்பட பல உபதேசங்களை பவுல் கொடுத்தார்.
★ அவைகளில் சில நமக்கும் அவசியமாயிருக்கின்றது.
நமது சபை வளர இக்காரியங்கள் அவசியமானது.
நாம் கட்டியெழுப்பப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?
1. பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட வேண்டும். 1:13
இந்த ஆவியானவர் நாம் சுதந்தரிக்கப்பட வேண்டியதின் அச்சாரமாயிருக்கிறார். 1:14.
இவர் நம்மில் இருப்பதால் …
அவர் நமக்கு பிரகாசமுள்ள கண்களை தருகிறார். 1:19.
மனக்கண் வெளிச்சமாயிருப்பது நல்லது.
அவர் நம்மை உள்ளான மனுஷனில் பலப்பட வைக்கிறார். 3:16.
பலவீனராயிருந்தாலும் மனோபலம் அவசியமானது.
உள்ளான மனுஷன் பலப்பட்டால் வசனத்தின்மேல் பிரியம் உண்டாகும். ரோமர் 7:22.
நாம் புதிதாகிக்கொண்டேயிருப்போம். 2கொரி4:16.
2. கிறிஸ்துவில் இணைந்து வாழ வேண்டும். 2:12-22.
நாம் அவரில் இணைந்து வாழ அவர் என்ன செய்தார்?..
அவர் தம்மை பலியிட்டு தமது இரத்தத்தை சிந்தினார்.
அவரது இரத்தத்தால் சமீபமாக்கப்பட்டோம். வச13.
அவரோடு இணைக்கப்பட்டோம்.
எப்படி?..
வச14-16.
சபையாக சமீபமானோம். அவரோடு இணைக்கப்பட்டோம். 19-22.
ஆவியால் சமீபமானோம். அவரோடு இணைக்கப்பட்டோம். 17-18.
இப்பொழுது நாம் விசுவாசம், நம்பிக்கையால் அவரோடு இனைக்கப்படுகிறோம். 3:12.
3. சபை அமைப்புக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும். 4:7-15.
சபை அமைப்புக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும்.
அவர் பரலோகத்துக்கு ஏறி நமக்கு வரங்களை தந்துள்ளார். 7-10.
வரங்கள் என்றால் ஈவுகள் என்று அர்த்தம். 2கொரி9:15.
திருப்பணிவிடைகளை தந்துள்ளார். 11-15.
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தபடவே - சபை பக்தி விருத்தியடையவே தந்துள்ளார்.
சபை மக்களாகிய நாம் கீழ்படிதலுள்ளவர்களாய் அமைதலோடு கற்றுக்கொள்ள வேண்டும்.
4. நாம் வெளிச்சத்திலே நடக்க வேண்டும். 5:8.
அவர் நம்மை வெளிச்சத்தின் பிள்ளைகளாக்கியுள்ளார்.
இருளிலிருந்து வெளிச்சமாக்கினார்.
நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளானோம்.
வெளிச்சத்தின் மக்களாய் வாழ வேண்டும். 5:9-21.
மறைவான தவறுகளை வெளிச்சத்தில் கொண்டு வரவேண்டும்.
ஆவிக்குரிய வாழ்வில் சோம்பேறிதனம் கூடாது.
புத்திசாலிதனமாக நடக்கணும்.
கீழ்படிதலுடன் நடக்கணும்.
5. சர்வாயுத வர்க்கங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். 6:10-18.
இந்த ஆயுதங்கள் யாவும்
நீதியின் ஆயுதங்கள்..
வெளிச்சத்தின் ஆயுதங்கள்..
ஆவியின் ஆயுதங்கள்..
தேவனுடைய ஆயுதங்கள்..
எதற்காக ?
பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்க..11.
அவனின் தந்திரங்களை அறியதான் வசனமும் ஆவியும் தரப்பட்டுள்ளது.
இவைகள் தீங்கு நாளில் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள். 13.
தீங்கு என்றால் துன்மார்க்கத்தின் பெருக்கம்.
இருளின் ஆதிக்கம்.ஆகும். ஆகையினால் இந்த ஆயுதங்கள் யாவும் விழிப்பின் ஆயுதங்கள் எனப்படும். விண்னப்பம்., ஜெபம், வேண்டுதல் தேவை.
நமது சபை கட்டியெழுப்பப்பட எபேசு சபைக்குரிய உபதேசத்தைக் கொண்டிருப்போம்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment