CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - வஞ்சிக்கிறவர்கள் - Cheaters

வஞ்சிக்கிறவர்கள்

 1Jn2:26. These things I have written to you concerning those who try to deceive you. 1Jn3:7;Eze13:10;Mk13:22;Act20:29,30;2Cor11:13-15;Col2:8,18;1Tim4:1;2Tim3:13;2Pet2:1-3;2Jn1:7.

1யோவா2:26. உங்களை வஞ்சிக்கிறவர்களை குறித்து இவைகளை எழுதுகிறேன். 1யோவா3:7;எசே13:10;மாற்13:22;அப்20:29,30;2கொரி11:13-15;கொலோ2:8,18;1தீமோ4:1;2தீமோ3:13;2பேது2:1-3;2யோவா1:7. 


வஞ்சிக்கிறவர்கள்

வஞ்சிக்கிறவர்கள் என்றால் விலகி செல்ல தூண்டுகிறவர்கள், சரியான பாதையை விட்டு வேறுபாதைக்கு திருப்புகிறவர்கள், அலைய விடுகிறவர்கள் என்று பொருளாகும். மேலும் சத்தியத்தை விட்டு பொய்மைக்கு நடத்துகிறவர்கள், தவறுகளுக்கு இட்டு செல்வோர், ஏமாற்றுவோர், பாவம் செய்ய தூண்டுவோர் என்றும் பொருள் படும். 

முன்பகுதிகளில் சொல்லப்பட்டுள்ளதின் காரணத்தை இங்கு குறிப்பிடுகின்றார். அதாவது வஞ்சிக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்பதில் முன் சொன்னதின்படி நடந்துக்கொள்ளுங்கள் என்கிறார். பொய்யும், வஞ்சகமும் சாத்தானின் இரு கண்கள் ஆகும். பொய் எங்குள்ளதோ அங்கே வஞ்சகமும் நிலைகொண்டிருக்கும். வஞ்சகம் உள்ள இடத்தில் பொய் இருக்கும். இவைகள் பிரிக்கமுடியாத ஒரே பார்வை கொண்ட நெற்றிகண் ஆகும். 

சத்தியத்தை சத்தியமாக போதிக்காது அவரவர்களின் முகஸ்துதிக்காக பேசுவது வஞ்சக ஆவியின் வேலையாகும். பிறரிடம் பட்சதாபம் கிடைக்கும்படியாக பேசுவதும், நடந்துக்கொள்வதும் வஞ்சக ஆவியின் வேலையாகும். கண்ட உண்மையை – அறிந்த உண்மையை மறைப்பதும் மறுப்பதும் வஞ்சக ஆவியின் வேலை. மாம்சத்தில் வந்த இயேசுவை மறுப்பதும் வஞ்சக ஆவியே. இயேசு உயிர்த்தெழுந்து பரலோகம் போனபின்பு அவரை சிலுவையில் அறையுண்டவராக சித்தரிப்பதும், சிலைகள் செய்து வழிபாடு நடத்துவதும் வஞ்சக ஆவியே. அவர் சிலுவையில் அறையுண்டது உண்மை. மரித்தது உண்மை. உயிர்த்தது உண்மை. பரலோகம் சென்றதும் உண்மை. திரும்பி அதே சரீரத்தோடு வரப்போவதும் உண்மை. இவைகளை நினைவுகூருவதற்காக மட்டுமே வரலாற்றில் எழுதப்பட்டும், வரையப்பட்டும் உள்ளது. மாம்சத்தில் வந்த இயேசுவை நம்பி உயிர்த்த கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதற்காகவே எழுதப்பட்டுள்ளது. இவைகளுக்கு மாறாக போதிப்பது வஞ்சகமாகும். 

கடைசிகாலங்களில் கொடிய வஞ்சகம் உண்டாகும் என்பது உண்மையாகும். கிறிஸ்தவ சபைகளிலும், கிறிஸ்தவ திர்ப்பணியாளர்களிலும், கிறிஸ்தவ நிறுவனங்களிலும் பலவிதமான வஞ்சக ஆவிகள் நுழைந்து நிரம்பி காணப்படுகின்றன. பணம், பதவி, ஜாதி, மொழி, கல்வி ஆகியவற்றிற்காக பொய்மையும் வஞ்சகமும் கலந்த அந்திகிறிஸ்துவின் ஆவிகள்  துள்ளலிடுகின்றன. ஒருவர் தனது ஜாதியை பிடித்துக்கொள்கிறார். இன்னொருவர் அதை எதிர்த்து நிற்கிறார்.  இதற்காகவா இயேசு மரித்தார்?. ஜாதி அமைப்புகள் மொழி அமைப்புகள் பணம் சார்ந்தவைகள் யாவும் கொண்டிருப்போரில் இயேசு கிறிஸ்துவின் ஜீவன் வரும்போது தாமாகவே இவைகள் மறைந்துவிடும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். 

வஞ்சகமும், பொய்யும் கலந்த அந்திகிறிஸ்துவின் ஆவி அதிகமாக உலாவுகின்ற காலம் இதுவாகும். சிரித்து களித்து நல்லவர்களைபோல நடந்துக்கொள்கிறவர்கள் இருதயம் நொறுங்கிபோகும்படியான துரோக செயல்களை செய்கிறார்கள். மனசாட்சி படியும், விவிலிய பாங்குபடியும் நடக்கின்ற எளியவர்கள் மீது அரசியலிலும், சமுக காரியங்களிலும், இனகுழுக்களிலும் பங்குகொண்டு தங்களை மிகைபடுத்திக்கொண்டு நடக்கிறவர்கள் தொடுக்கும் அம்புகள் நல்லவர்களின் ஈரகுலையை பிளக்கின்றது. வஞ்சக ஆவிக்கு இரக்க மனமில்லை, மனசாட்சியில்லை, மனிதாபிமானமில்லை. இவைகளின் முடிவு சத்திய ஆவியிடமே உள்ளது. அவனவன் பிறருடன் பொய்யை களைந்து மெய்யை பேசக்கடவன். திறந்த உள்ளத்தோடு கடிந்துக் கொள்ளுங்கள். மூடிய உள்ளத்தோடு சிரித்து பழகாதீர்கள், கடிந்து கொள்ளாதீர்கள். 


கேள்வி ?

பரிசுத்த ஆவியின் வரங்களில் பிரதானமான அந்நியபாஷை பேசுகின்றவர்களில் பலரும் வஞ்சகதனமக நடந்துக்கொள்வதின் இரகசியம் என்ன?

அன்றியும், பொய்யாணையிடாமல் உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். 

பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய பாதபடி; எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவின் நகரம். உன் சிரசின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே. உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். மத்தேயு 5:33-38.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்