CCM Tamil Bible Study - சிலுவை கூறும் செய்தி 6 - The message of the Cross 6
- Get link
- X
- Other Apps
சிலுவை கூறும் செய்தி - 6
சிலுவையிலிருந்து கல்லறைக்கு
மத்27:57-60;மாற்15:43-46;லூக்23:50-54;யோவா19:39-42.
கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அவர் சிலுவையிலே மரித்தார். அவர் மரித்துப் போனதினால்தான் கல்லறையில் வைக்கப்பட்டார். தேவனால் ஆயத்தம் செய்யப்பட்ட சிலுவையானது தன்பணியை முடித்துக்கொண்டதாக தேவனிடம் கூறியது. இதினிமித்தம் அவர் சிலுவையிலே மரித்தார்.. அவர் மரித்தார் என்பதற்கு அடையாளமே வெறுமையான சிலுவையாகும். இனி இந்த சிலுவையில் புதிய செய்தி ஒன்று உருவாகின்றது. அது என்னவெனில் அன்று இயேசுவை என்னில் நான் கொன்றேன். இது உண்மை. இது சத்தியம். இப்பொழுது அவரது சரீரத்தை கல்லறைக்குக் கொடுத்துவிட்டேன். இனி வரும் சந்ததிகள் சிலுவையாகிய என்னை வணங்காமல் சிலுவையில் இயேசு மரித்து உங்கள் பாவங்களை நீக்கினார் என்று அறிவியுங்கள் என்று கூறுகின்றது. ஆம் சிலுவை கூறும் கடைசி செய்தியானது சபையின் துவக்க செய்தியாகும். இரட்சிப்பின் துவக்க செய்தியாகும். நற்செய்தியின் துவக்கமாகும். பாவம் செத்து நீதி பிழைத்தது என்று கூறுவதாகும்.
சிலுவை இயேசுவை கொடுத்து விட்டது. யாரிடம், எங்கே, எதற்காக கொடுத்துவிட்டது?. ஒரே செய்தி. அது என்னவெனில் அது அவரை கல்லறையிடம் கொடுத்துவிட்டது என்பதாகும். வாரத்தின் முதல் நாள் வரையிலும் பத்திரபடுத்துவதற்காகவும், இயேசு மரித்தார் - மரித்த சரீரத்தை நான் முறைபடி பெற்றுக்கொண்டேன் என்று கூறுவதற்காகவும் கொடுத்துவிட்டது. கல்லறையானது மரித்த இயேசுவை நான் என்னுள் பெற்றுக்கொண்டேன். அவர் மூன்றாம் நாள் உயிர்பெறுவதற்காக நான் அவரை வைத்திருந்தேன். கல்லறையாகிய நான் காலியான கல்லறையாகி இயேசுவை உயிருடன் ஒப்புக்கொடுத்துவிட்டேன். அவர் மரித்தது உண்மை. என்னுள் அவரை அடக்கிக்கொண்டதும் உண்மை. அவர் உயிர்பெற்றதும் உண்மை என்று செய்தி அறிவிக்கின்றது. சிலுவையில் துவங்கிய நற்செய்தி உயிர்ப்பின் செய்தியாக பரிணமிக்கவே கல்லறையானது நடுவில் வைக்கப்பட்டுள்ளது. கல்லறை இல்லாமல் உயிர்ப்பு சாத்தியமில்லை. ஞானஸ்நானம் இல்லாமல் புது சிருஷ்டி சாத்தியமில்லை. மரணமும் புதைக்கப்படுதலும் உயிர்ப்பும் இணைந்ததுவே நற்செய்தியாகும். பாவம் செத்து புதைக்கப்பட்டு புதிய சிருஷ்டியாக எழும்புகின்றது என்பதுவே இதன் பொருளாகும்.
தேவனுடைய மனிதர்களே உங்கள் ஆவிக்குரிய பயணம் சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு புத்துயிர் அடைவதில்தான் உள்ளது. மரணமும், அடக்கம் பண்ணப்படுதலும், உயிர்ப்பும் உம்மை சந்திக்காமல் நீர் பரலோக பயணம் புறப்படவியலாது.
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம். ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையுΠύ மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 2கொரிந்தியர் 5:14-21.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment