CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பிதாவின் அன்பு - Heavenly Father's love

பிதாவின் அன்பு

1Jn3:1a. Behold what manner of love the Father has bestowed on us, that we should be called children of God. 1Jn4:9,10;Jn3:16;Ro5:8;8:32;Eph2:4,5;3:18,19;2Sam7:19;Ps31:19;36;7-9;89:1,2.

1யோவா3:1a. பிதாவானவர் நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். 1யோவா4:9,10;யோவா3:16;ரோம5:8;8:32;எபே2:4,5;3:18,19;2சாமு7:19;சங்31:19;36:7-9;89:1,2.


பிதாவின் அன்பு

பிதாவாகிய தேவனின் அன்பு பெரிய அன்பாகும். நண்பர்களின் அன்பை விடவும், கணவன் மனைவியின் அன்பை விடவும், பெற்றோர் பிள்ளைகள் அன்பை விடவும் பெரியது ஆகும். பிதாவானவர் தள்ளப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் சேர்த்துக்கொள்ளும்படியாக நேசிக்கப்பட்ட பிள்ளையை பலியாக ஒப்புக்கொடுத்து தமது அன்பை விளங்கப்பண்ணினார். இந்த அன்பினிமித்தம் தேவனுடைய காணியாட்சிக்கு தூரமாயிருந்த நாம் தேவனுடைய பிள்ளைகளானோம். தேவனால் கொடுக்கப்பட்ட நேசபிள்ளையாகிய இயேசு தமது ஜீவனை கொடுத்து நம்மை மீட்டதினாலே நாம் தேவனுடைய பிள்ளைகளானோம். இயேசுவின் இரட்சண்ய கிரியையை நம்பி விசுவாசிக்கிறவர்கள் யாவரும் தேவனுடைய பிள்ளைகளாகின்றனர். 

புறத்தியாராகிய நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே நாம் தேவனின் அளவில்லாத அன்பை அறிகின்றோம். நாம் தேவனின் அன்புக்குரியவர்கள் என்றும் அறிகின்றோம். நாம் தேவனை முழு இருதயத்தோடும் நேசிக்க வேண்டியவர்கள் என்றும் அறிகின்றோம். அவர் நம்மை மகனே, மகளே என்று அழைக்கும் அதேவேளையில் நாம் அவரை அப்பா பிதாவே என்று அழைக்க ஏவப்படுகின்றோம். பிதாவாகிய தேவன் நம்மை பிள்ளைகள் என்று கூறுவதும், நாம் அவரை அப்பா என்று கூறுவதும் அன்பின் பெருக்கமேயாகும். இந்த அன்பு பிரிக்கப்படவியலாதபடிக்கு இரத்தத்தினாலே இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் தான் உலகில் காணப்படும் எதுவும் இந்த அன்பை விட்டு என்னை பிரிக்க முடியாது என்று பவுல் கூறுகின்றார். 

நாம் தேவனுடைய பிள்ளைகள். பிறர் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் தேவனுடைய பிள்ளைகளாக்கப்படவில்லை. பிதாவின், குமாரனின் அன்பை பிறர் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நாம் தேவனடைய பிள்ளைகளாயிருக்கின்றோம். நம்மை பார்த்து நீ எவ்விதத்தில் தேவனுடைய பிள்ளையானாய் என்று பிறர் நம்மிடம் கேட்கவும் நாம் அதைகுறித்து அறிவிக்கவுமே தேவனுடைய பிள்ளைகளாக்கப்பட்டுள்ளோம். ஆகவே தேவனுடைய அன்பு நம்மிலிருந்து வெளிப்படதக்கதாக நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். 


கேள்வி ?

நீங்கள் எவ்விதத்தில் தேவனுடைய பிள்ளைகளானீர்கள்?


தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தேவன் தெரிந்துகொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,  உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். ரோமர் 8:32-39.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்