CCM Tamil Bible Study - பெரிய வாக்குதத்தம் - Great Promise
- Get link
- X
- Other Apps
பெரிய வாக்குதத்தம்
1Jn2:25. And this is the promise that He has promised us - eternal life. 1Jn1:2;5:11-13,20;Dan12:2;Lk18:30;Jn5:39;6:27,47,54,68;10:28;12:50;17:2,3;Rom2:7;5:21;6:23;Gal6:8;1Tim1:16;6:12,19;Tit1:2;3:7;Jud1:21.
1யோவா2:25. நித்திய ஜீவனி கொடுப்பேன் என்பதே அவர் அருளிய வாக்குதத்தம். 1யோவா1:2;5:11,13,20;தானி12:2;லூக்18:30;யோவா5:39;6:27,47,54,68;10:28;12:50;17:2,3;ரோம2:7;5:21;6:23;கலா6:8;1தீமோ1:16;6:12,19;தீத்1:2;3:7;யூதா1:21.
விவிலியத்தில் காணப்படுகின்ற வாக்குதத்தங்களில் எல்லாம் மிகவும் பெரியதும் உயர்ந்ததுமான வாக்குதத்தம் இதுவேயாகும். வாக்குதத்தம் என்ற சொல்லுக்கு அறிவிக்கை, வாக்குறுதி என்று இரு பொருள் உண்டு. கிறிஸ்துவிலும், பிதாவிலும் நிலைத்திருந்தால் நித்திய ஜீவன் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் அறிவிப்பை தேவன் வெளிபடுத்தியுள்ளார். வாக்குறுதிகள் முழுவதும் கீழ்படிதலினாலும், நற்கிரியைகளினாலும் முத்திரைபோடப்பட்டுள்ளது. இவ்விடத்தில் மூன்றாவது நிபந்தனையாகிய விசுவாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. பாவம் உருவாகுமுன்பு வாக்குறுதிகள் நிபந்தனையை சார்ந்திருக்கவில்லை. பாவம் வந்தபின்பு மனிதர் தேவனின் நம்பிக்கையை இழந்தபின்பு வாக்குறுதிகள் எல்லாம் நிபந்தனைகளினால் முத்திரையிடப்பட்டது.
இங்கு நித்திய ஜீவன் கொடுக்கப்படும் என்பது வாக்குறுதியாகும். இந்த வாக்குறுதி யாவருக்கும் பொதுவாக வாக்களிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரிலும் அவரின் தந்தையிலும் நிலைத்திருக்கிறவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது நிபந்தனையாகும். நித்திய வாழ்வு என்பது அழிவில்லாத ஜீவன் எனப்படும். அதாவது தேவனின் ஜீவனை மறுபடியும் பெறுவதாகும். இவ்வுலகில் மகிழ்ச்சியாகவும், சமாதானமாகவும், ஆசீர்வாதமாகவும் வாழ்வதற்கு இந்த ஜீவன் அவசியமாகும். அதோடு மறு உலகில் நரகாக்கினைக்கு உடபடாமல் என்றென்றும் அழிவில்லாமல் தேவனோடும் குமாரனோடும் இணைந்து வாழ்வதற்கு அவசியமாகும். இங்கு நித்திய ஜீவனை பெறும்படியான நிபந்தனைகளை நிறைவேற்றாமல் அங்குபோய் நிரந்தரமாக வாழமுடியாது. சமாதானத்துக்குள் பிரவேசிக்கவும் முடியாது.
கல்வியினாலும் பணத்தினாலும் உறவுகளினாலும் இவ்வுலகத்தினாலும் கொடுக்கமுடியாத பொக்கிஷம் இது. அன்று ஜீவனை பெற்று அழிவில்லாமல் வாழ்வதற்குரிய வழியில் செம்மையாக நடவாததினால் இன்று மறுபடியும் அவரின் ஜீவனை பெற்று கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். கர்த்தராகிய இயேசு தம்மை சிலுவையிலே பலியாக கொடுத்து இந்த ஜீவனை நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். அன்று அவர் வாழ்ந்து ஜீவனை தந்தார். இன்றோ அவர் மரித்து உயிர்த்து ஜீவனை தந்துள்ளார். இனியொரு வாய்ப்பு நமக்கில்லை. இனி அவர் ஜீவனை கொடுக்கிறவராக அல்ல, அதை எடுக்கிறவராக வரப்போகிறார்.
கேள்வி:. நம்மில் நித்திய ஜீவன் உள்ளது என்பதை நாம் எப்படி அறிந்துள்ளோம்?...
பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 6:37-40,47.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment