CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - இயேசுவே கிறிஸ்து - Jesus is Christ

இயேசுவே கிறிஸ்து

1Jn2:22a. Who is a liar but he who denies that Jesus is the Christ?. 1Jn2:4;1:6;4:20;Jn8:44;Rev3:9;Mt16:16,20;Mk8:29;Lk3:16;Jn1:41;4:25;6:69;11:26:20:31.


1யோவா2:22a. இயேசுவை கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனே பொய்யன். 1யோவா2:4;1:6;4:20;யோவா8:44;வெளி3:9;மத்16:16,20;மாற்8:29;லூக்3:16;யோவா1:41;4:25;6:69;11:26:20:31.


இயேசுவே கிறிஸ்து

இயேசு என்றால் இரட்சகர் என்றும், கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்றும் பொருளாகும். கிறிஸ்து என்றச்சொல் கிரேக்க சொல்லாயுள்ளது. இதன் எபிரேய சொல் மேசியா என்பதாகும். இயேசு என்பது இயற்பெயர். தேவனால் கட்டளையடப்பட்ட பெயர். கிறிஸ்து என்பது பட்டப்பெயர் ஆகும். பொதுவாக கிறிஸ்தவரகளாகிய நாம் இயேசு கிறிஸ்து என்றுக் கூறுகின்றோம். ஆனால் இஸ்ராயேலர்கள் இயேசுவை கிறிஸ்து என்று அழைப்பதற்கு சிரமப்பட்டார்கள். அதற்குரிய காரணம் என்னவெனில் இயேசு நாசரேத்திலிருந்து வந்தவர் என்ற அறிவை கொண்டிருந்ததுவேயாகும். இரண்டாவது தானியேலால் சொல்லப்பட்ட மேசியாவும், ஏசாயாவால் உரைக்கப்பட்ட சமாதான பிரபுவாகிய மேசியாவும் இயேசுவாக இருக்கவில்லை என்பதுவேயாகும். அதாவது இஸ்ராயேலரின் எதிர்பார்ப்பின்படியாக இயேசு காணப்படவில்லை என்பதுவேயாகும். மூன்றாவது இயேசு தம்மை தேவகுமாரன், மனிதகுமாரனாக கூறியதை இஸ்ராயேலரால் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்பதுமாகும். 

ஏசாயா தீர்க்கதரிசி இரண்டுவிதமான மேசியாக்கள் குறித்து கூறியுள்ளதை இஸ்ராயேலர்கள் புரிந்துக்கொள்ளவில்லை. ஒன்று மேசியா பாடுபடும் தாசனாக வருவார் என்பதாகும். இன்னொறு மேசியா சமாதான பிரபுவாக வருவார் என்பதாகும். இந்த இரு ஆளுமைகளில் முதலாவது உள்ள பாடுபடும் தாசன் என்ற ஆளுமையை இஸ்ராயேலர்கள் புரிந்துக்கொள்ளவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதுவே எல்லா பிரச்சனைக்கும் காரணமாகும். 

இயேசுகிறிஸ்து முதலாவதாக மனுமகன், பாடுபடும் தாசன் என்ற ஆளுமையை எடுத்துக்கொண்டார். இதற்கு இரண்டு காரணம் உண்டு. ஒன்று ஆதியிலிருந்து வெளியேற்றப்பட்ட புறஜாதிகளை விசுவாசத்துக்குள் கொண்டுவரவேண்டும் என்பதாகும். இன்னொன்று பிரமாணத்தையும் மோசயையும் முழுவதுமாக நம்பியிருந்தவர்களாகிய இஸ்ராயேலர்கள் கிறிஸ்துவின் உபதேசத்தையும் கிறிஸ்துவையும் விசுவாசித்து விசுவாசத்தினாலே வரும் விடுதலையை அடைய செய்ய வேண்டும் என்பதுமாகும். ஆனால் இஸ்ராயேலருடைய மனநிலை அரசியல் சார்பு மேசியாவாகிய சமாதான பிரபு மேல் இருந்ததினால் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இயேசுவை கிறிஸ்துவாகிய மேசியா என்று ஏற்றுக்கொள்ளாத இஸ்ராயேலர்கள் தேவனுடைய ஏற்பாட்டை அவமாக்குவதினால் பொய்யர்களாயிருக்கிறார்கள். பொய்யின் பிதாவாகிய பிசாசைப்போல இவர்களும் எதிர்த்து நிற்கிறவர்களாயிருக்கிறார்கள். இவர்களைபோல இயேசுவை கிறிஸ்துவாகிய மேசியா என்று ஏற்றுக்கொள்ளாத கிறிஸ்தவர்களும் பொய்யர்களாகவேயிருக்கிறார்கள். எப்படி இவர்கள் பொய்யர்களாகின்றார்கள் என்றால் அன்று பாடுபடுஇம் தாஸ்னாஅக வந்த இயேசுவை கிறிஸ்துவாக சமாதான பிரபுவாக இஸ்ராயேலருக்கும், சபையை எடுத்துக்கொள்கிறவராக  கிறிஸ்தவர்களுக்குமாக வரப்போகிறார் என்பதை மறுப்பதாகும். பாடுபடும் தாசனாக வந்த இயேசுவின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளாமல் வரப்போகிற மேசியாவை அறியவும் இயலாது, பின்தொடரவும் இயலாது. அவரின் மரணம் உயிர்ப்பு, மீட்பை ஏற்றுக்கொள்ளாத எவரும் பிசாசைப்போல பொய்யர்களாகவே இருக்கிறார்கள். சத்தியத்தை மறுப்பதும் பொய்மையின் வெளிப்படேயாகும். 

இயேசு கிறிஸ்து வரப்போகிறார்

வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே. வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. சங்கீதம் 24:7-10.


அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார். சங்கீதம் 96:13, 98:9.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்