Posts

Showing posts from January, 2022

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - ஆண்டவர் வெறுக்கிறவைகள்

வெளி2:15b. நிக்கோலாய் மதஸ்தரை பின்பற்றுகிறவர்களை நான் வெறுக்கிறேன். உபா16:22;சங்5:5;11:5;நீதி6:16;ஏசா1:14;61:8;எரே12:8;ஆமோ5:21;மல்2:16;வெளி2:6. ஆண்டவர் வெறுக்கிறவைகள் மேலே சொல்லப்பட்டுள்ள வாக்கியங்களெல்லாம் ஆண்டவர் வெறுக்கிறவைகள் குறித்து பட்டியலிடுகின்றது. ஆண்டவர் எதை வெறுக்கிறாரோ, எதனை வெறுக்கிறாரோ அதை அவர்களை நாம் வெறுக்காதிருந்தால் நாமும் அவரால் வெறுக்கப்படதக்கவர்களாவோம். அவருடைய அன்புக்குரியவர்களையும், நேசத்துக்குரியவர்களையும் அவர் வெறுத்து ஒதுக்குவதில்லை என்று கூறுவோமென்றால் அவர்கள் அவரின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவர் வழியில் நடக்க வேண்டும். ஆண்டவர் அவரின் மனதுக்கு பிரியமான எருசலேமையே – சீயோன் மலையையே வெறுத்து ஒதுக்கியதை மறவாதிருக்க வேண்டும். ஆண்டவரின் வெறுப்புக்குள்ளான ஒருவரின் காணிக்கையை வாங்குகின்ற ஆண்டவரின் அன்புக்குரியவர்கள் கூட அவரின் கோபத்திற்கு ஆளாகி படுகுழியில் அகப்படுவர் என்பதை மறவாதிருப்போமாக.  ஆண்டவர் அன்புள்ளவர்தான். அவர் தம் ஜீவனை கொடுத்ததும் உண்மைதான். ஜீவனைக் கொடுத்தவரே ஜீவனை எடுக்கமாட்டார் என்பதும் உண்மைதான். ஆனால் அவரது குமாரர்களும் குமாரத்திகளும் அவர் வெறுக்...

CCM Tamil Bible Study- மதஸ்தம் - கோட்பாடு

வெளி2:15a. நிக்கோலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்தில் உண்டு. வெளி 2:6;2நாளா19:2;சங்26:5;101:3;139:21,22;2யோவா1:9,10. மதஸ்தம் - கோட்பாடு ஆங்கிலத்தில் Doctrine என்றுச் சொல்லப்பட்டுள்ள இச்சொல் புதிய ஏற்பாட்டில் ஏறக்குறைய 30 தடவைகள் வந்துள்ளது. இச்சொல் இயேசு கிறிஸ்துவாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத் 7:28. இதன் மூலச்சொல் டிடாக்கே என்பதாகும். இதற்கு கற்பிக்கப்படதக்க உரை என்று பொருளாகும். இந்த உரையை மையமாக வைத்தே கற்பித்தல், கற்றுக்கொடுத்தல் என்ற சொற்கள் வந்துள்ளது. இயேசு கிறிஸ்து போதித்தல் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார். மத் 22:33. கிறிஸ்தவத்தில் போதித்தல் என்றும், கலாசாலைகளில் கற்பித்தல் என்றும் கூறப்படுகின்றது.  போதிக்கப்படதக்க ஒரு செய்திக்கொத்து, உரைகோவை, கோட்பாடு, செய்தி என்று அர்த்தப்படுத்தப்பட்டது. ஏற்கனவே பரிசேயர், வேதபாரகர்களின் கோட்பாடுகளினூடே தான் இயேசுகிறிஸ்து பரலோகத்தின் செய்திக் கோவையை – கோட்பாட்டைக் கொண்டு வந்தார். பரலோகத்தின் செய்தியை பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்களாக பரிணாமம் பெற்றனர். நாளடைவில் இவைகளிலிருந்து பற்பலவிதமான நூதன செய்தி கொத...

CCM Tamil Bible Study - பரலோக பிதாவே

மத்தேயு 6:9-13 பரலோக பிதாவே பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே ! இந்த சொற்றொடரில் உள்ள பிதாவே என்ற வார்த்தையை நாம் இன்றைய தியானத்தில் கொள்ளுவோமாக.  நமது தேவன் பிதாவாக இருக்கிறார். நாம் அவரை அப்பா, பிதாவே என்று அழைக்கும்படியாகவே நாம் தேவனின் ஆவியைப் பெற்றுள்ளோம்.  ரோமர் 8:15 – திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.  கலா 4:6 – மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். இந்த பிதா இயேசு கிறிஸ்துவின் பிதாவாக இருக்கிறார். யோவா 14:23 – இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். யோவா 10:30 – நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். இந்த பிதா இஸ்ராயேலின் பிதாவாக இருக்கிறார். 2சாமு 7:14 – நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் கு...

CCM Tamil Bible Study - பாலாக்குகளும் பிலேயாம்களும் நிரம்பிய உலகம்

வெளி2:14. பாலாக் என்பவனுக்குப் போதனை  செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்தில் உண்டு. எரே14:14;மத்7:15;24:11,24;அப்13:6;2பேது2:1;1யோவா4:1;எபே4:14;எபி13:9;1தீமோ1:3,7;6:3. பாலாக்குகளும் பிலேயாம்களும் நிரம்பிய உலகம் கிறிஸ்தவ மார்க்கத்திலும் இப்படிப்பட்ட கதாநாயகர்கள் அன்றிலிருந்து இன்றுவரையிலும் காணப்படுகின்றார்கள். நேரடியாக செயல்படாமல் பிறரைக்கொண்டு செயல்படுகிற தன்மை சாத்தானின் மிகப்பெரிய குணமாகும். தேவனுடைய பிள்ளைகளை எளிதாக வீழ்த்த இயலாததினால் ஆசைக்குரியவைகளை கொடுத்து வீழ்ச்சியடையச் செய்கின்றான். அடுத்ததாக, தப்பறைவாதிகளை கிறிஸ்தவத்தில் எழும்ப செய்து கிரியை செய்கின்றான். அப்படிப்பட்டவர்கள்  விவிலியத்தின் உண்மை என்று சொல்லிக்கொண்டு சத்தியத்தை புரட்டுகிறவர்களாயிருப்பர். சத்தியத்துக்கு தவறான அர்த்தம் கற்பித்து புரட்டுகிறவர்களாயிருப்பர். ஆவிக்குரியது என்று சொல்லிக்கொண்டு நூதனமான காரியங்களை போதிக்கிறவர்களாயிருப்பர். பழைய ஏற்பாட்டின் பக்தர்களை பின்தொடர்கிறவர்களாயிருப்பர். அடுத்ததாக, தங்களில் உள்ள குறைபாடுகளை மறைத்து உண்மையுள்ளவர்களைப்போல - ஆவிக்குரியவர்களைப்போல நடக...

CCM Tamil Bible Study - பிலேயாம்

  வெளி 2:14d. பாலாக் என்பவனுக்கு போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்தில் உண்டு. எண் 24:14;25:1-3;31:8-20;யோசு24:9,10;2பேது2:15,16;யூதா 1:11. பிலேயாம்  பாலாக் என்றால் அழிக்கிறவன் என்றுப்பொருள். பிலேயாம் என்றால் விழுங்குகிறவன் என்றுப்பொருள். அழிக்க நினைப்பவனின் விருப்பத்தை அறிந்து அவனுடைய பொக்கிஷங்களை அபகரிக்கும்படியாக ஆலோசனைச் சொல்லுகிறவன் என்றுப் பொருளாகும். உள்மனதின் ஆசைகளை அறிந்து அதற்கேற்றப்படியான வழிகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொடுத்து கவிழ்க்கிறவனே பிலேயாம். சாத்தானும் இதே பணியை செய்வதினால் பிலேயாம் சாத்தானின் முகவர் என்று அழைக்கலாம். பாலாக் என்பவன் சிப்போரின் மகன். மோவாபிய அரசன். பிலேயாம் என்பவன் பேயோரின் மகன். மீதியானியரின் 5 இராஜாக்களோடு அறியப்பட்டவன். குறி சொல்லுகிறதை இயல்பாகவேகவே கொண்டிருந்தவன். அப்படியானால் சிறு வயதிலிருந்தே குறி சொல்லும் ஆவியை உடையவனாயிருந்தான் என்று பொருள். மெசபத்தோமியாவின் யூப்ரட்டிஸ் நதிக்கரையில் உள்ள பித்தோர் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தான். இந்த பிலேயாம் இஸ்ரயேலருக்கு விரோதமாக குறி சொல்ல யெகோவா தேவனால் தடுக...

CCM Tamil Bible Study - இடறல் - Stumble

வெளி2:14c. ஏதுவான இடறலை இஸ்ரயேல் புத்திரர் முன்பாகப் போடும்படி.. மத் 13:41;16:23;18:7;ரோம9:33;16:17;கலா5:11;ரோம14:13;1பேது2:8;1யோவா2:10.  இடறல்  இடறல் என்பதற்கு தடை, தடை உண்டாக்கும் ஒரு பொருள், தடுமாறி நடத்தல் என்றுப் பொருள்படும். பயணத்திற்கு தடை உண்டாக்கும் மூட்டை, பாய்ந்துவரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் கல் அல்லது அடைப்பு போன்றவை. இன்னும் பலவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றது. யூதர்களின் பாரம்பரிய கண்ணோட்டத்திற்கு இயேசு கிறிஸ்து ஒரு தடைக் கல்லாக காணப்பட்டார். கிறிஸ்தவ வாழ்வின் ஆவிக்குரிய வாழ்விற்கு பாவங்கள், துற்கிரியைகள் தடைகளாகக் காணப்படுகின்றது. இச்சொல் புதிய ஏற்பாட்டில் 13 தடவைகள் வந்துள்ளது.  பெர்கமு சபையின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு கிறிஸ்துவும், கிறிஸ்துவின் உபதேசமும், கிறிஸ்துவின் நற்கிரியைகளும் மிகுந்தப் பயனுள்ளதாகக் காணப்பட்டது. கிறிஸ்துவுக்காக பாடுகளை அனுபவிக்கவும் துணிவுள்ளவர்களாயிருந்தார்கள். இச்சூழலில்தான் பிலேயாமின் ஆவியையுடைய சில தப்பறைவாதிகள் எழும்பி ஜனங்களில் சிலருக்குள் காணப்பட்ட இரண்டுவகையான பாவகிரியைகளை தட்டி எழுப்பி விட்டதுமல்லாமல் அவைகளை குறித்து பேச...

CCM Tamil Bible Study - வேசிதனம் - Prostitution

 வெளி2:14b. உன்பேரில் எனக்குக் குறையுண்டு, வேசிதனம் பண்ணுகிறதை போதிக்கிறவர்கள் உன்னிடத்தில் உண்டு. வெளி21:8;22:15;1கொரி6:13-18;7:2;எபி13:4;எண்25:1,6-9. வேசிதனம் வேசிதனம் என்பது ஒருவரின் இச்சைக்கு தன் உடலை ஒப்புக்கொடுப்பதாகும். சட்ட முறைகளுக்கு உட்படாதபடிக்கு உறவு வைத்துக் கொள்வதாகும். உவமான முறையில் தன்னை மீட்ட தேவனை விட்டு விட்டு ஓட்டையும் உடைசலுமான விக்கிரகங்களைக் கும்பிடுவதாகும். வேசிதனம் என்ற சொல் புதிய ஏற்பாட்டில் 8 தடவைகள் வந்துள்ளது. வெளிபடுத்தலில் மட்டும் 5 தடவைகள் வந்துள்ளது. 2:14,20;17:2;18:3,9. மற்றபடி 1கொரி 6:18;10:8 ஆகும். இப்பகுதியில் விக்கிரகங்களோடு சம்பந்தப்பட்டுள்ளதை குறிப்பதாக அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் இதன் உண்மை பொருளை நாம் அறியாதிருப்பது நல்லதல்ல. விக்கிரக வணக்கமும், வேசிதனமும், பொருளாசையும் ஆகிய மூன்று காரியங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டே விவிலியத்தில் போதிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் நாம் அடிமைப்பட்டிருந்தாலும் மற்ற இரண்டும் தாமாகவே ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையது. விக்கிரகங்களை கும்பிடுகிறவர்கள் தவறான உறவுகளை சரியான உறவுகளாகவும் அது...