CCM Tamil Bible Study - வேசிதனம் - Prostitution
- Get link
- X
- Other Apps
வெளி2:14b. உன்பேரில் எனக்குக் குறையுண்டு, வேசிதனம் பண்ணுகிறதை போதிக்கிறவர்கள் உன்னிடத்தில் உண்டு. வெளி21:8;22:15;1கொரி6:13-18;7:2;எபி13:4;எண்25:1,6-9.
வேசிதனம்
வேசிதனம் என்பது ஒருவரின் இச்சைக்கு தன் உடலை ஒப்புக்கொடுப்பதாகும். சட்ட முறைகளுக்கு உட்படாதபடிக்கு உறவு வைத்துக் கொள்வதாகும். உவமான முறையில் தன்னை மீட்ட தேவனை விட்டு விட்டு ஓட்டையும் உடைசலுமான விக்கிரகங்களைக் கும்பிடுவதாகும். வேசிதனம் என்ற சொல் புதிய ஏற்பாட்டில் 8 தடவைகள் வந்துள்ளது. வெளிபடுத்தலில் மட்டும் 5 தடவைகள் வந்துள்ளது. 2:14,20;17:2;18:3,9. மற்றபடி 1கொரி 6:18;10:8 ஆகும்.
இப்பகுதியில் விக்கிரகங்களோடு சம்பந்தப்பட்டுள்ளதை குறிப்பதாக அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் இதன் உண்மை பொருளை நாம் அறியாதிருப்பது நல்லதல்ல. விக்கிரக வணக்கமும், வேசிதனமும், பொருளாசையும் ஆகிய மூன்று காரியங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டே விவிலியத்தில் போதிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் நாம் அடிமைப்பட்டிருந்தாலும் மற்ற இரண்டும் தாமாகவே ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையது. விக்கிரகங்களை கும்பிடுகிறவர்கள் தவறான உறவுகளை சரியான உறவுகளாகவும் அது தங்கள் தெய்வத்துக்கு பிரியமானதாகவும் கருதுகிறார்கள். விக்கிரக ஆவிகளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள் நிச்சயமாகவே அவைகளின் விருப்பமாகிய இச்சைக்கும் அடிமைப்பட்டுப்போகின்றார்கள். ஆதியிலேயே இச்சையின் விரிவாக்கத்தை சாத்தானிடமிருந்து சர்ப்பத்துக்குள்ளும், சர்ப்பத்தினிடமிருந்து ஆதி மனிதர்களுக்குள்ளும், ஆதி மனிதர்களிடமிருந்து முழு மனுகுலத்துக்கும் பரவி விரிந்து போனதை நாம் அறிந்துள்ளோம்.
வேசிதனம் என்பது இச்சை கலந்த அன்பாகும். இதனை காதல் அன்பு என்றும் கூறுவதுண்டு. தனக்கு உரிமையில்லாத, தான் விரும்புகின்ற – தனக்கு கிடைக்காத ஒன்றை அடையும்படியாக வாஞ்சிப்பதாகும். விக்கிரகங்களை கும்பிடுவதினால் இக்காரியம் ஜெயமாகும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். ஆகையினால்தான் விக்கிரகங்களை விட்டு விலகி தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் முன்வராததாகும். தங்களுக்குள் உண்டாகும் வெறிதனமான இச்சை அன்பை நிறைவேற்ற விக்கிரக ஆவிகள் பெரிதும் துணைபுரிகின்றன. பணம் சம்பாதிக்கும் வெறிதனமும், உடல் இன்பத்தை நிறைவேற்ற துடிக்கும் எழுச்சியும், புகழை அடைய துடிக்கும் வெறிதனமான முன்னெடுப்பும், விக்கிரக ஆவிகளின் கிரியைகளேயாகும். இவைகளிலிருந்து தேவ மனிதர்கள் விடுவிக்கப்பட்டாக வேண்டும்.
ஐசுவரிய போதனைகளும், ஆடம்பர பிரியமும், சாங்கோபாங்கமான வாழ்வும் இக்கால திருச்சபைகளில் உறைந்து போய் கிடக்கும் விக்கிரக ஆவிகளின் செயற்பாடேயாகும். வேசிதனமான வாழ்க்கை முறை குறித்து பின்னாட்களில் நாம் அறியலாம்.
வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். 1கொரிந்தியர் 6:18-20..
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment