வெளி2:14. பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்தில் உண்டு. எரே14:14;மத்7:15;24:11,24;அப்13:6;2பேது2:1;1யோவா4:1;எபே4:14;எபி13:9;1தீமோ1:3,7;6:3.
பாலாக்குகளும் பிலேயாம்களும் நிரம்பிய உலகம்
கிறிஸ்தவ மார்க்கத்திலும் இப்படிப்பட்ட கதாநாயகர்கள் அன்றிலிருந்து இன்றுவரையிலும் காணப்படுகின்றார்கள். நேரடியாக செயல்படாமல் பிறரைக்கொண்டு செயல்படுகிற தன்மை சாத்தானின் மிகப்பெரிய குணமாகும். தேவனுடைய பிள்ளைகளை எளிதாக வீழ்த்த இயலாததினால் ஆசைக்குரியவைகளை கொடுத்து வீழ்ச்சியடையச் செய்கின்றான். அடுத்ததாக, தப்பறைவாதிகளை கிறிஸ்தவத்தில் எழும்ப செய்து கிரியை செய்கின்றான். அப்படிப்பட்டவர்கள் விவிலியத்தின் உண்மை என்று சொல்லிக்கொண்டு சத்தியத்தை புரட்டுகிறவர்களாயிருப்பர். சத்தியத்துக்கு தவறான அர்த்தம் கற்பித்து புரட்டுகிறவர்களாயிருப்பர். ஆவிக்குரியது என்று சொல்லிக்கொண்டு நூதனமான காரியங்களை போதிக்கிறவர்களாயிருப்பர். பழைய ஏற்பாட்டின் பக்தர்களை பின்தொடர்கிறவர்களாயிருப்பர். அடுத்ததாக, தங்களில் உள்ள குறைபாடுகளை மறைத்து உண்மையுள்ளவர்களைப்போல - ஆவிக்குரியவர்களைப்போல நடக்கிறவர்கள். இவர்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இவர்கள் புகழ்ச்சிக்குரியவர்களாயிருப்பர். நாவரம், சொல்வளம், வார்த்தை ஜாலம் உடையவர்களாக இருப்பர். இப்படிப்பட்டவர்கள் யாவராலும் விரும்படதக்கவர்களாயிருப்பர்.
கிறிஸ்தவத்துக்குள் காணப்படுகின்ற இந்தகைய தீங்குகள் களையப்படவியலாதவண்ணம் திருச்சபைகள் ஆடம்பரத்திலும், பொருளாதரத்திலும், ஐசுவரிய மயக்கத்திலும், கல்வியின் உச்சநிலையிலும் மூழ்கிக் காணப்படுகின்றது. ஆகையினால்தான் கடைசி காலங்களின் அறிகுறிகளாகிய தீங்குகள் சபைகளை மூடவைத்துள்ளன. பாலாக்கின் ஆவியையுடையவர்களும், பிலேயாமின் ஆவியை உடையவர்களும் சபைக்கு வெளியே இருக்கவேண்டிய காலம் மாறிப்போய் சபைக்குள்ளும், அதிகாரத்திலும், ஆளுகையிலும் நிலைத்துள்ளனர் என்பதை நாம் மறுக்க முடியாது. இத்தகைய் ஆவிகளின் கிரியைகள் அகற்றப்படும்படியாகவே எடுத்துக்கொள்ளப்படுதலில் தேவன் கிறிஸ்துவை நியமித்துள்ளார். ஆவியானவரின் அறிக்கையின்படி தேவகுமாரனாகிய இயேசு இறுதி நாளில் செயல்படுவார்.
கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே. நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள். அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள். யூதா 1:18-23.
Comments
Post a Comment