CCM Tamil Bible Study- மதஸ்தம் - கோட்பாடு
- Get link
- X
- Other Apps
வெளி2:15a. நிக்கோலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்தில் உண்டு. வெளி 2:6;2நாளா19:2;சங்26:5;101:3;139:21,22;2யோவா1:9,10.
மதஸ்தம் - கோட்பாடு
ஆங்கிலத்தில் Doctrine என்றுச் சொல்லப்பட்டுள்ள இச்சொல் புதிய ஏற்பாட்டில் ஏறக்குறைய 30 தடவைகள் வந்துள்ளது. இச்சொல் இயேசு கிறிஸ்துவாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத் 7:28. இதன் மூலச்சொல் டிடாக்கே என்பதாகும். இதற்கு கற்பிக்கப்படதக்க உரை என்று பொருளாகும். இந்த உரையை மையமாக வைத்தே கற்பித்தல், கற்றுக்கொடுத்தல் என்ற சொற்கள் வந்துள்ளது. இயேசு கிறிஸ்து போதித்தல் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார். மத் 22:33. கிறிஸ்தவத்தில் போதித்தல் என்றும், கலாசாலைகளில் கற்பித்தல் என்றும் கூறப்படுகின்றது.
போதிக்கப்படதக்க ஒரு செய்திக்கொத்து, உரைகோவை, கோட்பாடு, செய்தி என்று அர்த்தப்படுத்தப்பட்டது. ஏற்கனவே பரிசேயர், வேதபாரகர்களின் கோட்பாடுகளினூடே தான் இயேசுகிறிஸ்து பரலோகத்தின் செய்திக் கோவையை – கோட்பாட்டைக் கொண்டு வந்தார். பரலோகத்தின் செய்தியை பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்களாக பரிணாமம் பெற்றனர். நாளடைவில் இவைகளிலிருந்து பற்பலவிதமான நூதன செய்தி கொத்துகள், கோட்பாடுகள் சபைகளுக்குள் எழும்பி சபைகளை களங்கப்பண்ணலாயிற்று. அப்படிப்பட்ட ஒரு கோட்பாடு தான் நிக்கோலாய் என்பவனின் கோட்பாடு ஆகும்.
இவனுடைய கோட்பாடுகள் பிலேயாமின் கோட்பாடுகளுக்கு ஒத்திருப்பதாகவும், உரோம சபையாரின் விவாகமின்மை கருத்துக்கு ஒத்திருப்பதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். 1தீமோ4:2. இந்த நிக்கோலாய் போன்றவர்கள் இக்காலத்திலும் சபைகளுக்குள் எழும்பி சபைகளின் புனிதத்தைக் கெடுக்கிறார்கள். இவர்கள் ஏன் இவ்விதம் எழும்புகின்றனர் என்றோ, எப்படி எழும்புகின்றனர் என்றோ சபையானது கவனம் செலுத்தவேண்டிய இடத்தில் உள்ளது. சபை வரலாற்றின் துவக்கக்கால பக்கங்களை வாசிக்கும்போது இப்படிப்பட்ட மனிதர்களுக்கும், கோட்பாடுகளுக்கும் தீர்வுகண்டு சபையின் கோட்பாடுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வகுத்துச் சென்றார்கள் என்பதை அறிகின்றோம். அத்தகைய கோட்பாடுகள் இன்றுவரையிலும் உயிருள்ளவைகளாக இருக்கின்றது. குறிப்பாக விசுவாச பிரமாணம், நிசேயா விசுவாச பிரமானம் போன்றவைகள் சபையின் கிறிஸ்தவ மாண்புகளை பாதுகாக்கும் எல்லைக்கோடாக உள்ளது. இவைகளைப்போல எல்லா சபைகளும் இணைந்து இக்காலத்தில் எழும்புகின்ற தவறான கோட்பாடுகளுக்கும், மனிதர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்பார்களென்றால் நலமாயிருக்கும் என்று என் ஆவிக்குள் நான் நம்புகின்றேன்.
பாவமான காரியங்கள் சபைகளுக்குள் நிலைகொண்டிருக்க காரணம் தவறான கோட்பாடுகளே. தவறான கோட்பாடுகளை பின்பற்றுகிற எந்த மனிதனிலும், சபையிலும் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய இயலாது என்பதை மறவாதிருப்போமாக.
சகோதரரே, எங்களிடத்தில் பெற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரரையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். 2தெசக்லோனிக்கேயர் 3:6..
வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக, நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக. 1தீமோத்தேயு 1:3,4..
ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென். 1தீமோத்தேயு 6:20,21…
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment