CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பிலேயாம்

 வெளி 2:14d. பாலாக் என்பவனுக்கு போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்தில் உண்டு. எண் 24:14;25:1-3;31:8-20;யோசு24:9,10;2பேது2:15,16;யூதா 1:11.


பிலேயாம் 


பாலாக் என்றால் அழிக்கிறவன் என்றுப்பொருள். பிலேயாம் என்றால் விழுங்குகிறவன் என்றுப்பொருள். அழிக்க நினைப்பவனின் விருப்பத்தை அறிந்து அவனுடைய பொக்கிஷங்களை அபகரிக்கும்படியாக ஆலோசனைச் சொல்லுகிறவன் என்றுப் பொருளாகும். உள்மனதின் ஆசைகளை அறிந்து அதற்கேற்றப்படியான வழிகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொடுத்து கவிழ்க்கிறவனே பிலேயாம். சாத்தானும் இதே பணியை செய்வதினால் பிலேயாம் சாத்தானின் முகவர் என்று அழைக்கலாம். பாலாக் என்பவன் சிப்போரின் மகன். மோவாபிய அரசன். பிலேயாம் என்பவன் பேயோரின் மகன். மீதியானியரின் 5 இராஜாக்களோடு அறியப்பட்டவன். குறி சொல்லுகிறதை இயல்பாகவேகவே கொண்டிருந்தவன். அப்படியானால் சிறு வயதிலிருந்தே குறி சொல்லும் ஆவியை உடையவனாயிருந்தான் என்று பொருள். மெசபத்தோமியாவின் யூப்ரட்டிஸ் நதிக்கரையில் உள்ள பித்தோர் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தான். இந்த பிலேயாம் இஸ்ரயேலருக்கு விரோதமாக குறி சொல்ல யெகோவா தேவனால் தடுக்கப்பட்டதினால் அவனுக்குள் இருந்த ஐசுவரிய வெறிதனம் அவனை பலவாறு சிந்திக்கும்படியாகச் செய்தது. முடிவில் பாலாக்கின் ஐசுவரியத்தின் மேல் ஆசைப்பட்டு பாலாக்குக்கு இரண்டு விதமான போதனைகளை சொல்லிக்கொடுத்தான். உங்கள் பெண்களை இஸ்ரயேல் ஆண்களுக்குக் கொடுங்கள். உங்கள் தேவர்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிக்க அவர்களை அழைப்பியுங்கள் என்பதாகும். அதன்படியாக பாலாக் என்ற மோவாபிய இராஜா செய்தான். இஸ்ராயேல் மக்கள் தாங்கள் பிலேயாமின் கண்ணியில் அகப்படுவதை உணராமல் மோவாபிய பெண்களோடு தவறான பழக்கம் கொண்டார்கள். அதன்மூலம் அவர்களை தங்கள் தேவர்களின் கோயிலில் படைக்கப்பட்ட படைபொருளை சாப்பிட வைத்தார்கள். இதினிமித்தம் தேவனுடைய கோபம் பற்றியெரிந்தது. ஜனங்களில் 24000 பேர்கள் செத்தார்கள். பின் நாட்களில் இஸ்ரயேலர் மீதியானியரை பழிவாங்கும்போது பிலேயாமின் வம்சத்தையும் அழித்துப்போட்டனர். 


இக்காலத்திலும் இரட்சிக்கப்பட்டு ஆண்டவருடைய பிள்ளைகளாயிருக்கிற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அந்நிய பெண்களை ஆண்களை திருமணம் செய்து வைக்கிறவர்கள் கட்டாயமாக தேவ கோபத்துக்கு ஆளாவர் என்பதை மறக்க வேண்டாம். கிறிஸ்தவ வாலிப பிள்ளைகளின் காதல் காரியங்களினால் சபைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கிறிஸ்தவ குடும்பங்கள் தடுமாறிப்போய் கொண்டிருக்கின்றன. பிசாசானவன் கிறிஸ்தவரல்லாதவர்களுக்கு அழகையும், ஐசுவரியத்தையும், அறிவையும், வேலையையும் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்கின்றான்.    தேவ பிள்ளைகள் இப்படிப்பட்டவர்களை தங்கள் குடும்பங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் தேவ கோபம் பற்றியெரியும். தப்பமாட்டீர்கள்...


தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2கொரிந்தியர் 6:14-18…

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்