CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பரலோக பிதாவே

மத்தேயு 6:9-13

பரலோக பிதாவே


பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே !


இந்த சொற்றொடரில் உள்ள பிதாவே என்ற வார்த்தையை நாம் இன்றைய தியானத்தில் கொள்ளுவோமாக. 

நமது தேவன் பிதாவாக இருக்கிறார். நாம் அவரை அப்பா, பிதாவே என்று அழைக்கும்படியாகவே நாம் தேவனின் ஆவியைப் பெற்றுள்ளோம். 

ரோமர் 8:15 – திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். 

கலா 4:6 – மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

இந்த பிதா இயேசு கிறிஸ்துவின் பிதாவாக இருக்கிறார்.

யோவா 14:23 – இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

யோவா 10:30 – நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.

இந்த பிதா இஸ்ராயேலின் பிதாவாக இருக்கிறார்.

2சாமு 7:14 – நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.

சங்கீ 89:26 – அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான். ஏசா 64:8 – இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.

மல் 2:10 – நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ? நாம் நம்முடைய பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் துரோகம்பண்ணுவானேன்?

இஸ்ரயேலர் நியாயபிரமாணத்தைப் பெற்றுக்கொண்டதினால் அவர்களுக்கு அவர் தகப்பனானார். 

இயேசு கிறிஸ்து பிதாவினால் ஜெனிப்பிக்கப்பட்டதினால் அவரை பிதா என்றழைத்தார்.

நாமும் நம்மைப் பெற்றெடுத்த பிதாவுக்கு அஞ்சி நடக்க வேண்டும். 

நாம் அவரை அப்பா – பிதாவே என்று அழைக்கவே ஆவியைப் பெற்றுள்ளோம். இந்த பரிசுத்த ஆவியினாலேதான் அவரை அப்பா என்று அழைக்க முடியும். 

நாமும் நமது தகப்பன்மார்களுக்கு அடங்கி நடக்காவிட்டால் தேவ ஆவி நம்மை விட்டுப் போய் விடுவார். 

இப்படியிருக்க……

கர்த்தராயிருக்கிற இயேசு காண்பித்துக் கொடுத்த பிதா குறித்து விவிலியத்தில் 7 விதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் இன்றைய தியானத்தில் சிந்திப்போமாக. 


1. நித்திய பிதா - Eternal Father

ஏசாயா 9:6 – நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

தேவன் ஆபிரகாம் – ஈசாக்கு – யாக்கோபு போன்ற முற்பிதாக்களை அடையாளம் காண்பித்தார். ஆனால் அவர்களெல்லாரும் நீண்ட காலம் வாழவில்லை. ஆதி தகப்பனும் நீண்டகாலம் வாழவில்லை. ஆகவே ஆண்டவரே தம்மை நீண்டகாலம் இருப்பவராக நித்திய பிதா என்று கூறுகின்றார். இனி வேறு தகப்பன்மாரை தேடிப்போக வேண்டாம். இவரே நித்திய நித்தியமாய் இருக்கின்ற நித்திய பிதா, நிலைத்திருப்பவர், நீண்ட ஆயுளுள்ளவர், மரிக்காதவர், அழிவில்லாதவர் என்று பொருள், என்றைக்கும் இவரே நம் பிதாவாக இருக்கிறார். 

2. பரம பிதா - Heavenly Father

பரம்பொருளல்ல..பரலோகத்திலிருக்கிற பிதா..

மத்தேயு 5:16 – இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

மத்தேயு 5:45 – இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

மத்தேயு 6:1 – மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

பரம பிதா என்றால் பரமண்டலங்களிலிருக்கிற பிதா என்றுப்பொருள். தங்களை ஜெனிப்பித்த தந்தையாம் தேவனை மறந்தவர்களுக்கு பரத்தில் இருக்கும் தந்தையை அடையாளம் காட்டும் சொல். 

3. ஜீவனுள்ள பிதா - Living Father

யோவான் 6:57 – ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.

செத்துப்போனவரல்ல..சடபொருளும் அல்ல..அது இது என்று அழைக்கப்படுகிறவரும் அல்ல..

உயிருள்ள தேவன்... ஆகவே யாவருக்கும் உயிர் தருகிறவராயிருக்கிறார். மரியாமலிருக்கிறவர்... ஆகவே மரியாமலிருக்கவும் பண்ணுவார். அவர் ஜீவனுள்ளவராயிருக்கிறார். ஆகவே நாமும் ஜீவனுள்ளவர்களாயிருப்போம்.அவர் நமக்கு நித்திய ஜீவனை தருவார். 

4. நீதியுள்ள பிதா - Righteous Father

மனுஷ நீதியெல்லாம் கந்தை. நீதி செய்யும் தந்தை ஒருவரும் இல்லை. எனவே அவரே நீதியுள்ள பிதாவாக வருகிறார்.

யோவான் 17:25 – நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.

செம்மையானவர்..நீதியுள்ளவர்..நீதி செய்கிறவர்..நீதியாய் ஆளுகிறவர்.யோக்கியதை உள்ளவர்.ஆகவே தான்..

மத்தேயு 5:48 – ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

பூரணரான அவரை – நீதியுள்ள அவரை நாம் பின்பற்றும்போது நம்மில் நீதியை விளங்கச் செய்வார். 

நாமும் நீதி செய்து நீதிமான்களாவோம்.

5. இரக்கங்களின் பிதா - Father of Mercies

யூதர்கள் தங்கள் அன்றாட ஜெபங்களில் இரக்கங்களின் பிதாவே என்று அழைப்பதுண்டு. அப்பா என்றால் எல்லாம் உடையவர், கொடுப்பவர் என்று பொருளாகும். அவருடைய இரக்கமே நாம் அவரிடம் கேட்பதற்கு அச்சாரமாயிருக்கிறது. ஆகவே அவர் தம்மை இரக்கங்களின் பிதா என்று காண்பிக்கின்றார்.

2கொரிந்தியர் 1:3 – நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.

கிருபை, இரக்கம், தயவு, அன்புள்ளவர். 1000 தலைமுறைகளுக்கு இரக்கம் செய்கிறவர். அவரை பின்பற்றுகிறவர்களும் இரக்கமுள்ளவர்களாயிருப்பர். எல்லா இரக்கங்களுக்கும் அவரே ஊற்று.

6. மகிமையின் பிதா - Father of Glory

எபே 1:17 – நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

அழகானவர்...சௌந்தர்யமுள்ளவர்...மகிமையானவர்...மகிமையில் வாழ்கிறவர்...மகிமையாய் வெளிபடுகிறவர்.

மகிமையின் தேவனை நாம் ஆராதிக்கும்போது அவரது மகிமையை நமக்கும் தருகிறார். நம்மை மகிமையிலும் சேர்க்கிறார். 

7. சோதிகளின் பிதா - Father of Lights

ஒளியின் தேவனாயிருக்கிறார். ஆசரிப்புகூடாரத்தில் விளக்கு எரியவைக்கப்படும். அந்த விளக்கும் அணைந்துப்போகும். ஆனால் அவர் சமுகத்தில் அவரே அணையாத விளக்காயிருக்கிறார்.எல்லா ஒளியும் மங்கும். என்றும் மங்காத  அணையாத ஒளியுடையவர். 

யாக்கோபு 1:17 – நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. 

1தீமோத்தேயு 6:16 – ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக.

ஒளியாயிருக்கிறவர்.

யாரொருவர் அவரை பின்பற்றுகிறார்களோ அவர்கள் ஒளியடைந்து ஒளியிலே வாழுவர். 

அவரே நம்முடைய தகப்பன். திக்கற்ற பிள்ளைகளுக்கு அவர் தகப்பனாயிருக்கிறார். நாமும் அந்த தந்தையாம் தேவனை பின்பற்றுவோமாக.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 

ஆமென்.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்